இராமாயணம்
இராமாயணம், வெளியிட்டோர் சஞ்சீவியார், சென்னை, விலை 400ரூ.
வடமொழியில் வான்மீகி முனிவர் எழுதிய இராமாயண இதிகாசம் 24,000 சுலோகங்களைக் கொண்டது. கம்பர் இக்காவியத்தை ஆறு காண்டங்களாக 12,000 விருத்தப்பாக்களால் பாடியுள்ளார். அவர் இந்நூலுக்கு வைத்த பெயர் இராமாவதாரம். இராமபிரானை மனிதத் தன்மையிலேயே வைத்து போற்றியவர் வான்மீகி முனிவர். கம்பர் இராமபிரானைத் தெய்வமாகப் போற்றியவர். கம்பரின் கவிதை கடவுள் பற்றை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் மக்கள் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. எனவே எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் இராமாயணத்தைப் படித்து, இன்புறுமாறு உரைநடை வடிவில் எளிய நடையில் ஆக்கித் தந்துள்ளார் செ.ஆ. கிருஷ்ணமூர்த்தி. நன்றி: தினத்தந்தி, 13/5/2015.
—-
கந்தர்வன் காலடித் தடங்கள், ஏ.ஆர். பப்ளிகேஷன்ஸ், மதுரை, விலை 140ரூ.
பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்கவர் கந்தர்வன். அவரது சிறுகதைகள் மற்றும் கவிதைகள் குறித்து புலவர் வை. சங்கரலிங்கம் எழுதிய ஆய்வு நூல் இது. இதில் கந்தர்வனின் இளமைக்காலம் தொடங்கி, அவரது தொழிலாளர் வாழ்க்கை, எழுத்துலகம், பெண்ணியம், எழுத்து நடை ஆகியவை பற்றி மிக நுணுக்கமாக ஆராய்ச்சி செய்துள்ளார். புதுமைப்பித்தன் அடியொற்றி தமிழ்ச் சிறுகதைக்கு வலிவும், பொலிவும் தந்தவர் கந்தவர்கன் என்பதை ஆசிரியர் தக்க சான்றுகளுடன் நிருபிக்கிறார். நன்றி: தினத்தந்தி, 13/5/2015