சாமானியனும் சர்க்கரை நோயும்

சாமானியனும் சர்க்கரை நோயும், டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்,  உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம், சர்க்கரை நோய் குறித்த மாயைகளைக் களைந்து சாமானிய மக்கள் சர்க்கரை நோயை எப்படிக் கையாள வேண்டும் என்று விளக்குவதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதற்கான ஆரோக்கியமான நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கிறது இந்த நூல். நன்றி: தி இந்து, 6/1/19.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மறுக்கப்படும் மருத்துவம்

மறுக்கப்படும் மருத்துவம், தொகுப்பு: பு,பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு , பாரதி புத்தகாலயம், மருத்துவமும் கல்வியும் வணிகமயமாகி வருவது நம் சமகாலத்தின் மாபெரும் அவலங்களாகத் தொடர்கின்றது. இந்நிலையில் இந்திய மக்களவையில் தாக்கலாகியிருக்கும் மருத்துவ ஆணைய மசோதா (NMC Bill, 2017), மருத்துவக் கல்வியையும் மருத்துவத்தையும் ஒட்டுமொத்தமாக சந்தையிடம் ஒப்படைக்கும் முயற்சி என்று எச்சரிக்கும் நூல். தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான மருத்துவர்கள், கல்விச் செயற்பாட்டாளர்களின் கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. நன்றி: தி இந்து, 6/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

ஒல்லி பெல்லி

ஒல்லி பெல்லி, டாக்டர் கு.கணேசன் , கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. உடல் பருமன் ஆபத்தானது என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ள அதே நேரம், அதிலிருந்து விடுபடுவதற்கு ஆபத்து நிறைந்த வழிகளை நாடும் போக்கும் அதிகரித்துள்ளது. தொப்பையைக் குறைப்பது, உடல் பருமனால் விளையும் நோய்கள்குறித்த விழிப்புணர்வைப் பெறுவது, அதற்கான சிகிச்சைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது, எடையைக் குறைப்பதற்கான சுயமுயற்சிகள் ஆகியவற்றை உரையாடலைப் போன்ற சுவாரஸ்யமான பாணியில் விளக்கும் நூல். அலோபதி மருத்துவத்தில் 30 ஆண்டு அனுபவம் பெற்ற டாக்டர் கு.கணேசன் ‘கல்கி’, வார இதழில் எழுதிய கட்டுரைகளின் […]

Read more

நாளும் நலம் நாடி

நாளும் நலம் நாடி, மருத்துவர் சி.அசோக் , மணிமேகலை பிரசுரம், அகில இந்திய வானொலியில் மருத்துவர் சி.அசோக் ஆற்றிய மருத்துவ உரைகளின் தொகுப்பே இந்த நூல். நோய்களுக்கான மருத்துவத்தைத் தாண்டி முழு உடல்நலம் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும் நல்ல உணவு, நல்ல உள்ளம் ஆகியவற்றைப் புரியவைக்கும் நோக்கத்துடனும் மருத்து வத்தைப் பாமரர்களுக்குப் புரியும் வகையில் எளிதாக்கிக் கொடுக்கும் முயற்சியாகவும் இந்த உரைகள் அமைந்துள்ளன. நன்றி: தி இந்து, 6/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

முன்னத்தி ஏர்

முன்னத்தி ஏர், பாமயன், இந்து தமிழ்’ வெளியீடு, விலை 130ரூ. இயற்கை வேளாண்மை இயக்கத்துக்குத் தமிழகத்தில் தடம் அமைத்துத் தந்த முன்னோடிகள் குறித்து மூத்த சூழலியல் அறிஞரும் இயற்கை வேளாண் வல்லுநருமான பாமயன், ‘இந்து தமிழ்’ நாளிதழில் எழுதிய இதே தலைப்பிலான தொடர் பரவலான வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடர் புத்தகமாக வெளியாகியுள்ளது. நன்றி:தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027150.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

கடலம்மா பேசுறங் கண்ணு!

கடலம்மா பேசுறங் கண்ணு!, வறீதையா கான்ஸ்தந்தின்,இந்து தமிழ், கடல், மீன்கள், துறைவர்கள், அவர்களது சமூகம்-பண்பாடு-சூழலியல் குறித்து மிகப் பெரிய திறப்பைத் தந்த இதே தலைப்பிலான தொடர், ‘இந்து தமிழ்’ நாளிதழில் ஓராண்டுக்கும் மேலாக வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் புத்தகமாகவும் வெளியாகியுள்ளது நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 0444959581

Read more

பின்லாந்து காட்டும் வழி

பின்லாந்து காட்டும் வழி, தொகுப்பு இல்க்கா டாய்பாலே, தமிழில் காயத்ரி மாணிக்கம், கிழக்கு பதிப்பகம், விலை 300ரூ. எது வளர்ச்சி? பொருளாதார வளர்ச்சியும் தொழில்நுட்ப மேம்படுத்தலும்தான் முன்னேற்றம் என்று பரவலாக நம்பப்படுகிறது. அத்தகைய நம்பிக்கையில் இரந்து விடுபட்டுச் சமூக வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுவதே உண்மையான முன்னேற்றம் என்று உணர்ந்த நாடுகளில் ஒன்று பின்லாந்து. அங்கு ஏற்பட்ட திகைக்க வைக்கும் 108 சமூகக் கண்டுபிடிப்புகளைப் பேசுகிறது 17 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பின்லாந்து காட்டும் வழி புத்தகம். நன்றி: தமிழ் இந்து, 15/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

தமிழ் மொழி அடிப்படைகள்

தமிழ் மொழி அடிப்படைகள், முனைவர் பிரகாஷ்.வெ, வேலா வெளியீட்டகம், விலை 40ரூ. மொழி ஆளுமைக்கு! பிழையின்றித் தமிழ் மொழியைப் பேசவும் எழுதவும் பல நுல்கள் வெளிவந்திருக்கின்றன. இருந்தாலும் கால மாற்றத்துக்கு ஏற்பத் தகவமைக்கப்பட்ட நூல்கள் தேவைப்படுகின்றன. தொடக்கப் பள்ளி மாணவர்கள் தொடங்கி ஆங்காங்கே மொழியில் தடுமாறும் ஆய்வாளர்கள் வரை தமிழ் மொழியை எளிமையான முறையில் பயில தமிழ் மொழி ஒலி அடிப்படைகள் கைகொடுக்கும். நன்றி: தமிழ் இந்து, 15/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

ஐம்பேரியற்கை

ஐம்பேரியற்கை. மாற்கு, தமிழினி . போராடும் மாநிலமாக மாறியுள்ள தமிழகத்தின் அத்தனை போராட்டங்களுக்கும் மைய இழை, இயற்கையைப் பாதுகாப்பதுதான். அந்த நோக்கத்துக்கு இலக்கிய வடிவம் கொடுத்திருக்கிறார் மாற்கு. கிராமத் தன்னிறைவு, சமத்துவம், எளிய வாழ்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற லட்சியங்களைக் கொண்ட ஒரு வெற்றிகரமான கிராமத்தை முன்மாதிரியாகக் காட்டுகிறது கதை. தொண்டு நிறுவனங்களின் லாப நோக்கம், நகர நாகரிகத்தின் தாக்கத்தால் மறந்துபோன 23 மூலிகைகளின் பட்டியல் என்று நடப்பையும் இழப்பையும் ஒருசேரப் பேசுகிறது. நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

சிவப்புக் கிளி

சிவப்புக் கிளி, வசுதேந்திரா – தமிழில் யூமா வாசுகி,  பாரதி புத்தகாலயம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நம் அனைவரது வாழ்வையும் நேரடியாகத் தீண்டத் தொடங்கிவிட்ட நிலையிலும், அவற்றைக் குறித்த அடிப்படை உணர்வு அற்றவர்களாகவே பெரும்பாலோர் இருக்கிறோம். இயற்கையையும் நம் வாழ்க்கையையும் எப்படிப்பட்ட அவலமான வகையில் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை அழுத்திச் சொல்லும் கதைகளில் ஒன்று ‘சிவப்புக் கிளி’. நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 7