கல்வித்துறையிலிருந்து விடை பெறுகிறேன்

கல்வித்துறையிலிருந்து விடை பெறுகிறேன், பொன்னீலன், சீதை பதிப்பகம், பக்.264, விலை ரூ.250. சமூக அக்கறை மிகுந்த எழுத்தாளராக அறியப்பட்ட பொன்னீலன், கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நூலில் அவர் கல்வித்துறையில் ஏற்ற பணிகளைப் பற்றியும், அதில் கிடைத்த அனுபவங்களைப் பற்றியும் மிகச் சுவையாகச் சொல்லியிருக்கிறார். மதுரை தியாகராசர் மாதிரிப் பள்ளியில் முதன் முதலில் கணிதப் பாடம் எடுத்த அனுபவத்துடன் தொடங்குகிறது அவர் கல்விப் பயணம். 1962 – இல் மதுரையில் உள்ள விருதுநகர் இந்து நாடார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்கிறார். ஆனால் […]

Read more

ஒளி வித்தகர்கள்

ஒளி வித்தகர்கள் – பாகம் 1, தமிழில்: ஜா.தீபா, டிஸ்கவரி புக் பேலஸ், பக்.160, விலை ரூ.150. உலக அளவில் பிரபலமான திரைப்பட ஒளிப்பதிவாளர்களில் ஏழுபேரின் பேட்டிகள் அடங்கிய நூல். MASTERS OF LIGHT என்ற ஆங்கிலநூலின் ஒரு பகுதி தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. காந்தி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பில்லி வில்லியம்ஸ்,  எக்ஸார்சிஸ்ட் ஒளிப்பதிவாளர் ஓவன் ராய்ஸ்மன்,  தி புளு லாகூன் ஒளிப்பதிவாளர் நெஸ்டர் ஆல்மன்ட்ராஸ் உள்ளிட்ட ஏழு ஒளிப்பதிவாளர்களின் திரைமொழி குறித்த உரையாடல்கள் கருத்தைக் கவர்கின்றன. இயக்குநர்தான் படத்தின் ஆணிவேர். இயக்குநரின் கற்பனையையும், […]

Read more

மேதையையும் பேதையாக்கும் போதை

மேதையையும் பேதையாக்கும் போதை,  முளங்குழி பா.இலாசர், குமரி முத்தமிழ் மன்றப் பதிப்பகம்,  பக்.188, விலை ரூ.130. போதைப் பழக்கத்தால் எவ்வளவு பெரிய மேதைகளும், வீரர்களும், தலைவர்களும் வீழ்ந்துவிடுவார்கள். எனவே போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாதீர்கள் எனக் கூறும் நூல். போதைப் பழக்கத்தால் ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு பேர் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை புள்ளி விவரங்களுடன் நூல் எடுத்துக் கூறுகிறது. மகா அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசர், பாபர், ஹுமாயூன், சிவாஜியின் மகன் சாம்பாஜி, இராபர்ட் கிளைவ் உட்பட பலர் போர்களில் தோல்வி அடைந்ததற்கும் மரணமடைவதற்கும் காரணமாக போதைப் பழக்கமே […]

Read more

வேணாடும் தமிழ்மரபும்

வேணாடும் தமிழ்மரபும்,  வ.ஆன்றனி ஜோசப், பக்.369, விலை ரூ.390. உருவங்கள் ஊடக ஆய்வு மையம், புலவன்விளை, கல்லாங்குழி அஞ்சல், குமரி நமாவட்டம். நன்னூல் சிறப்புப் பாயிரத்தில் குறிப்பிடப்பட்ட பன்னிரண்டு நாடுகளில் ஒரு நாடாக வேணாடு உள்ளது. எனினும் சங்க காலத்தில் வேணாடு என்ற ஒன்று இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. வேணாடு எங்கு அமைந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. திருவிதாங்கூர் தொல்லியல்துறை கல்வெட்டுத் தொகுப்புகளின்படி, தற்போதைய கேரள மாநிலத்தின் கோட்டயம், திருவல்லா, சங்கனாசேரி, ஏற்றமானூர் முதலிய பகுதிகள் வேணாட்டின் பகுதிகளாக இருந்திருக்கின்றன. கன்னியாகுமரி, மங்கலம் […]

Read more

மனைவி அமைவதெல்லாம்

மனைவி அமைவதெல்லாம், சி.வீரரகு, சந்தியா பதிப்பகம், விலை 150ரூ. மனைவி என்பவள் கணவனை அலுவலகத்திற்கும், மகளை கல்லுாரிக்கும், மகனை பள்ளிக்கும் அனுப்பி வைக்கும் வரை ஓயாது உழைப்பவள். சுருங்கச் சொல்லின் அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது. பெண்ணின் பெருமை குறித்து முதல் ஆறு அத்தியாயங்களில் பேசும் ஆசிரியர், பிறகு வரலாற்றுச் சிறப்பு மிக்க தம்பதியர் குறித்தும் பேசுகிறார். மனை மாட்சி பேசும் மங்கல நுால்! நன்றி: தினமலர், 15/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

தேசத் தந்தைகள்

தேசத் தந்தைகள், ராஜ்மோகன் காந்தி, தமிழில் ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், விலை 180ரூ. மகாத்மா காந்தியின் மகள் வழிப்பேரனான ராஜ்மோகன் காந்தி இந்த நூலை எழுதி இருக்கிறார். மகாத்மா காந்தி, நேரு ஆகியோர் பற்றி குஜராத் சுவாமி சச்சிதானந்த், அமெரிக்கப் பேராசிரியர் பெர்ரி ஆண்டர்சன் ஆகியோர் வெளியிட்ட எதிர்மறையான கருத்தக்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் கட்டுரையாக எழுதத் தொடங்கி பின்னர் விரிவடைந்த இந்தப் புத்தகத்தில், இந்தியக் குடியரசின் தொடக்க கால வரலாறு சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஏற்பட்ட […]

Read more

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள்

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 164, விலை 170ரூ. இந்திய அருளாளர்கள் அதுவும் கிறிஸ்தவ அருளாளர்கள் ஐவரைப் பற்றிக் கூறுவதே இந்நுால். இந்த ஐவரில் மூவர் பெண்மணிகள், ஐவரில் மூவர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள். எஞ்சிய இருவர் அன்னிய மண்ணில் பிறந்து, இந்திய மண்ணில் உயிர் துறந்தவர்கள். மக்களின் தந்தை லெ.வேவை முன்வைத்து நுால் துவங்குகிறது. இவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்து, இன்றைய ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாளைக் கழித்தவர். ஏழைகளின் பங்காளன், இவர் ஆன்மிகப் பணியோடு […]

Read more

இவர்களும் நமக்குள்ளே இருக்கிறார்கள்

இவர்களும் நமக்குள்ளே இருக்கிறார்கள், என்.அனுஷா, முல்லை பதிப்பகம், பக். 166, விலை 150ரூ. முப்பது சிறுகதைகளின் தொகுப்பே இந்நுால். கதையின் மாந்தர்கள் நமக்குள்ளே, நாம் பார்க்கும் மனிதர்கள் தான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது நுாலின் தலைப்பு. வெவ்வேறு விதமான பல மனிதர்களை அறிமுகம் செய்கின்றன இக்கதைகள். ‘முதல் கவிதை’ எனும் முதல் கதையானது, பிரிந்த காதலர்களின் திடீர் சந்திப்பின் போது நிகழும் ஒரு மனப்போராட்டத்தை எடுத்துரைக்கிறது. யாயும் யாயும்… எனும் இலக்கிய வரிகளைத் தன் கதைக்குத் தக்க கவிதையாக்குகிறார், ஆசிரியர். ‘புரமோஷன்’ கதையில், டேபிள் […]

Read more

சயின்ஸ் விக்னெட்ஸ்

சயின்ஸ் விக்னெட்ஸ், ஜந்தர் மந்தர், சயின்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.110 சிறுவயதில் இருந்தே அறிவியலில் ஆர்வத்தைத் தூண்டும் நோக்கத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ‘துளிர்’ என்ற மாத இதழின் மூலம் 1987முதல் தமிழகச் சிறார்களுக்கு பெரும் சேவையாற்றிவருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஆங்கிலம் வழி பயிலும் மாணவர்களையும் கணக்கில்கொண்டு 1993-ல் ‘ஜந்தர் மந்தர்’ என்ற ஆங்கில மாத இதழும் வெளிவரத் தொடங்கியது. அவ்விதழின் வெள்ளிவிழாவை ஒட்டி வெளியாகியுள்ள இச்சிறப்பு மலர் பொது அறிவு கேள்வி-பதில், வேதியியல், புவியியல், வானியல் என அறிவியலின் பல்வேறு புதிர்களை அவிழ்க்கும் […]

Read more

தென் இந்திய வரலாறு

தென் இந்திய வரலாறு, கே ஏ நீலகண்ட சாஸ்திரி, ஜீவா பதிப்பகம், விலை ரூ. 500. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி வரை தமிழகத்தில் நடைபெற்ற அத்தனை வரலாற்று நிகழ்வுகளும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன, தமிழகத்தின் புவியியல் அமைப்பு, பூர்வகுடி மக்களின் கலாச்சாரம், மௌரியப் பேரரசு, சாதவாகனர்களின் ஆட்சி,  பல்லவர், பாண்டியர் ஆகிய மூன்று அரசுக்கு இடையே நடைபெற்ற மோதல், பாமணி அரசர்கள், விஜயநகரப் பேரரசின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி ஆகியவை மிக விரிவாக இந்நூலில் தரப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட […]

Read more
1 2 3 9