கல்வித்துறையிலிருந்து விடை பெறுகிறேன்

கல்வித்துறையிலிருந்து விடை பெறுகிறேன், பொன்னீலன், சீதை பதிப்பகம், பக்.264, விலை ரூ.250. சமூக அக்கறை மிகுந்த எழுத்தாளராக அறியப்பட்ட பொன்னீலன், கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நூலில் அவர் கல்வித்துறையில் ஏற்ற பணிகளைப் பற்றியும், அதில் கிடைத்த அனுபவங்களைப் பற்றியும் மிகச் சுவையாகச் சொல்லியிருக்கிறார். மதுரை தியாகராசர் மாதிரிப் பள்ளியில் முதன் முதலில் கணிதப் பாடம் எடுத்த அனுபவத்துடன் தொடங்குகிறது அவர் கல்விப் பயணம். 1962 – இல் மதுரையில் உள்ள விருதுநகர் இந்து நாடார் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்கிறார். ஆனால் […]

Read more

இலக்கிய மலர்கள்

இலக்கிய மலர்கள், ஓ.பாலகிருஷ்ணன், சீதை பதிப்பகம், பக். 136, விலை 70ரூ. சங்க காலம் தொட்டு, இன்றைய வரையிலான இலக்கியத் திறனாய்வியல், நாட்டுப்புறவியல், மானிடவியல், அறிவியல் தமிழ், விடுகதைக் கொள்கைகள், வருணனைகள், குறியீட்டியல் போன்றவற்றில் ஆழ்ந்து ஈடுபட்ட பின்னணியில் செறிவான, 11 கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நுால் உள்ளது. நம்பிக்கையின் அடிப்படையில், கற்பனையில் உருவாகி, அதீத கற்பனையாக முடிவுறுகிற பழமரபுக்கதை எனப்படும் தொன்மத்தின் சொல் விளக்கம், தோற்றம், அமைப்புகள், பொருள் விளக்கங்கள், படிப்போர் மனதில் புதிய பார்வைகளை விளைவிக்கும். சைகையால் வளரத் துவங்கிய மொழி, […]

Read more

நாடறிந்தோர் வாழ்வில்

நாடறிந்தோர் வாழ்வில், கவிஞர் கா. வேழவேந்தன், சீதை பதிப்பகம், சென்னை, பக். 144, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-292-0.html கவிதைக்கு என்று ஒரு உயிர் உண்டு சக்தி உண்டு, குணம் உண்டு, மணம் உண்டு இவை அனைத்தும் வேழவேந்தனின் இந்த கவிதைத் தொகுப்பில் உண்டு. தந்தை பெரியாரின் பகுத்தறிவையும், பேரறிஞர் அண்ணாவின் மனித நேயம், பாரதிதாசனின் இன உணர்வு, புத்தர், சாக்கரடீசு, கன்பூசியசு, அலெக்சாண்டர், மாநபியார், ஜி.யூ.போப், வள்ளலார், காந்தியடிகள், பெர்னாட்சா, அன்னை தெரசா, காமராசர், திரு.வி.க., […]

Read more

காலத்தை வென்ற சித்தர்கள்

காலத்தை வென்ற சித்தர்கள், குருப்பிரியா, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ. அபூர்வமான சக்தி படைத்த சித்தர்கள், காலத்தை வென்று வாழ்ந்தவர்கள். அவர்களுடைய சக்திகள் பற்றியும், சிறப்புகள் பற்றியும் கூறுகிறது இந்நூல்.   —-   பண்ணைத் தொழில்கள், முனைவர் ஓஹென்றி பிரான்சிஸ், வாடிவாசல் பதிப்பகம், 100, லாட்டிஸ் பிரிட்ஜ் சாலை, அடையாறு, சென்னை 20, விலை 120ரூ. பால்பண்ணைத் தொழில்கள் பற்றிய அனைத்து விவரங்களும் கொண்ட நூல். இந்தத் தொழில்களைத் தொடங்க அரசு மானியம் […]

Read more

டாக்டர் இல்லாத ஊரில்

டாக்டர் இல்லாத ஊரில், இரா. மணிகண்டன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்கங்கள் 140, விலை 100ரூ. யந்திர உலகில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை.. இதில் உடலுக்கு எதாவது நோய் வந்தால் டாக்டரிம் போகக்கூட நேரம் கிடைக்கவில்லை என்று சாக்கு சொல்லி தள்ளிப் போடுகிறோம். இந்நிலையில் உடலுக்கு எதாவது என்றால் நீங்கள் மருத்துவரிடம் செல்லும் முன் என்னென்ன செய்ய வேண்டும். உங்களுக்கு நீங்களே வைத்தியம் பார்த்துக் கொள்வது எப்படி? நீங்கள் இருக்கும் […]

Read more