காலத்தை வென்ற சித்தர்கள்
காலத்தை வென்ற சித்தர்கள், குருப்பிரியா, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ.
அபூர்வமான சக்தி படைத்த சித்தர்கள், காலத்தை வென்று வாழ்ந்தவர்கள். அவர்களுடைய சக்திகள் பற்றியும், சிறப்புகள் பற்றியும் கூறுகிறது இந்நூல்.
—-
பண்ணைத் தொழில்கள், முனைவர் ஓஹென்றி பிரான்சிஸ், வாடிவாசல் பதிப்பகம், 100, லாட்டிஸ் பிரிட்ஜ் சாலை, அடையாறு, சென்னை 20, விலை 120ரூ.
பால்பண்ணைத் தொழில்கள் பற்றிய அனைத்து விவரங்களும் கொண்ட நூல். இந்தத் தொழில்களைத் தொடங்க அரசு மானியம் கொடுக்கிறதா? வங்கிகள் கடன் உதவி எவ்வளவு என்பது போன்ற விவரங்களும் உள்ளன.
—-
அங்கோர்வாட் ஓர் அற்புதக் கோவில், வழக்கறிஞர் வே. காசிநாதன், சீதை பதிப்பகம், 10/14, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 100ரூ.
உலகிலேயே மிகப்பெரிய இந்துக்கோவில் கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் கோவிலாகும். இக்கோவிலுக்கு நேரில் சென்று இதன் வரலாற்று சிறப்புகளையும், சிற்பத்தின் சிறப்புகளையும் ஏராளமான படங்களடன் விவரித்துள்ளார். சரித்திர சான்றுகளும், அவற்றுக்கான விளக்கங்களும் உள்ளன. நன்றி: தினத்தந்தி,17/7/13.