கண்மணி சோபியா

கண்மணி சோபியா, கவிஞர் புவியரசு, நந்தினி பதிப்பகம், விலை 150ரூ. ஒவ்வொரு விநாடியும் உலகின் ஏதோ ஒரு மூலையில் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பாதிக்கப்பட்ட இளைஞி சோபியாவின் கதையாக எளிய நடையில் நகரும் நாவல். சோபியா யார் எனத் தெரியும் இடத்தில் அறிவியல் புதினமாக புதுமலர்ச்சி பெறுகிறது. கதை என்பதைவிட பாதிக்கப்பட்ட, படுகின்ற பெண்களின் போர்க்குரலாகவே ஒலிக்கிறது. படித்து முடித்ததும் இரக்கமும், ஈனர்கள் மேல் சினமும் ஒரு சேரத் தோன்றுவது நிதர்சனம். நன்றி: குமுதம், 7/8/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

தமிழச்சி ஆண்டாள்

தமிழச்சி ஆண்டாள், மெய்சிலிர்க்கும் காவியம், ப்ரியா கல்யாணராமன், குமுதம் புத்தகம் வெளியீடு, விலை 290ரூ. ஆடியில் பிறந்து, ஆண்டவனுக்குத்தன் தோள் மாலையை சூடிக்கொடுத்தவள் ஆண்டாள். பகவானுக்கு பூமாலையோடு மணக்க மணக்க தமிழ்ப்பா மாலையும் சூட்டி தமிழுக்குப் பெருமை சேர்த்த தமிழச்சி. பெரியாழ்வார் மகளாய்ப் பிறந்து, பெருமாளையே மணந்தவள். குறையேதும் இல்லா கோவிந்தனைப் பாடிய தமிழச்சி ஆண்டாள் குறித்து தமிழில் விரிவான புத்தகம் எதுவும் இல்லை என்பது, பலகாலத்துக் குறை. அதைப் போக்குவதற்காகவே, குமுதத்தில் ஆசிரியர்ப்ரியா கல்யாணராமன் கைவண்ணத்தில் தொடங்கப்பட்டு பல்லாயிரம் வாசகர்களால் பக்தியோடம் தமிழ் […]

Read more

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மறுபிறவியெடுத்த வரலாறு, டாக்டர்.எச்.வி.ஹண்டே, வசந்தா பதிப்பகம், பக். 120, விலை 300ரூ. திரையுலகில் நாடோடி மன்னனாய் வாழ்ந்து, மறைந்தும், மறையாமல் நிரந்தரமாக மக்கள் மனதில் குடியிருக்கும் கோவில், எம்.ஜி.ஆர்., என்றால் மிகையாகாது. புரட்சித் தலைவர் உடல்நலம் குன்றிய கால கட்டத்தில், அவருக்கு என்னென்ன நோய் தாக்குதல்… எத்தகைய சிகிச்சைகளை எந்தெந்த சிறப்பு மருத்துவர்கள் மேற்கொண்டனர் என்ற விபரங்களை, நுாலாசிரியர் ஹண்டே மிகத் தெளிவாக இந்நுாலில் குறிப்பிட்டுள்ளார். மக்கள் திலகத்தின் இதயத்தோடு நெருக்கமாக இருந்து வெற்றிப் பாதையில் பயணித்து, எம்.ஜி.ஆரின் வரலாற்றை எழுதிய […]

Read more

தற்காலத் தமிழ் நாட்டு வரலாறு 1801 – 2018

தற்காலத் தமிழ் நாட்டு வரலாறு 1801 – 2018, பேரா., அ.ராமசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.395 ஆங்கிலேயர் ஆட்சியில், தமிழ்நாடு என்னும் முதல் பாகத்தில் ஆர்க்காடு நவாபின் ஆட்சி, 1710ல் துவங்கி, 1962ல், புதுச்சேரி பிரெஞ்சு பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது வரை, 14 தலைப்புகளில் அமைந்துள்ளது. விடுதலைக்குப் பின், தமிழகம் என்னும் இரண்டாம் பாகத்தில் தமிழக – ஆந்திர எல்லைப் பிரச்னை துவங்கி, 2018ல் காவிரி நதி நீர் நடுவம் அளித்த தீர்ப்பு வரை, எல்லாவற்றையும் விபரமாக எடுத்தாளப்பட்டு உள்ளது. பிற […]

Read more

சித்தர் பாடல்களில் இறைக்கோட்பாடு

சித்தர் பாடல்களில் இறைக்கோட்பாடு, சு.சசிகலா,  காவ்யா, பக்.272, விலை ரூ.280 சித்தர்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளைச் செய்திருக்கும் நூலாசிரியர், சித்தர் பாடல்களில் இறைக்கோட்பாட்டை ஆய்வு செய்திருக்கிறார். அகத்தியர், பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர், சிவவாக்கியர் உள்ளிட்ட 18 சித்தர்களின் வரலாற்றையும், அவர்களுடைய படைப்புகளில் காணப்படும் இறைக்கோட்பாட்டையும் இந்நூல் ஆய்வு செய்திருக்கிறது. யோகம், மருத்துவம், ஞானம், இரசவாதம் ஆகியவற்றை சித்தர்கள் நுட்பமாக விளக்கியுள்ளதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. மனிதனுக்கு வெளியே உள்ள அண்டத்துள் உள்ளது மனிதனின் பிண்டத்துள் உள்ளது என்று சித்தர்கள் கூறியிருப்பதை, மனிதன் இயற்கையின் ஒரு பகுதி, […]

Read more

வாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை

வாழ்வின் அர்த்தங்கள் வளமான வாழ்க்கை, அழ.சுப.ஸ்ரீனிவாசன், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 112, விலை 120ரூ. நம் இந்திய நாட்டின் வலிமை, மணமக்கள் வலது காலை எடுத்து வைத்து வருவது ஏன்? மணமக்கள் அறிந்து கொள்ள வேண்டியது, ஆபரணங்களின் அர்த்தம் – திருமணத்தில் யாரை எப்படி வணங்க வேண்டும்? வாழ்க்கை எது வரை, சிரிப்பு வகைகள், வாழ்க்கைக் கணிதம், புயல் உருவாவது எப்படி? நேரம் சொல்லும் பறவை, நிரந்தரம் இல்லை, உகந்த உறவினர்கள் யார்? குழந்தை பிறந்த ஒரு ஆண்டிற்குள் மொட்டை போடுவது ஏன்? […]

Read more

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், எழுபது பீடாதிபதிபளின் குருபரம்பரை தொகுப்பு, டாக்டர் ஆர்.வைத்தியநாதன், ஸ்ரீ சங்கராலயம், பக். 212, விலை 250ரூ. எழுபது பீடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு புத்தகம் ஆன்மிகம் தொடர்பானது. ஸ்ரீ காஞ்சி மடம் என்பது மகா பெரியவர் என்ற ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் காலத்தில் பெரிய விருட்சமாக வளர்ந்தது. நாத்திக வாதம் குறைய பல்முனை ஆன்மிக கருத்துக்களை மக்களிடம் பரப்பியவர். அவர் சீடர்கள் அளித்த தகவல்கள், ஸ்ரீ ஜெயேந்திரர் காட்டிய சில ஆதாரங்கள் அடிப்படையில், இப்புத்தகம் உருவானதாக ஆசிரியர் […]

Read more

திரைமொழி

திரைமொழி, வித்யாசாகர், முகில் பதிப்பகம், விலைரூ.180 த்யாசாகர் எழுதியுள்ள ஒவ்வொரு திரைப்படத்தின் ஆழமான விமர்சனங்களும் வாழ்வியலின் நிதர்சனப் பதிவன்றி வேறில்லை. திரைப்படம் பற்றிய சிறந்த பார்வையை கற்றுத் தந்திருக்கிறார். இந்நுால் எதிர்கால இளைஞர்களின் சிந்தனைப் பெட்டகமாகவும், புதிதாக திரைப்படம் இயக்கும் இயக்குனர்களுக்கு கதைகளின் களமாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 28/7/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

எம்.கே.டி. பாகவதர் இசையும் வாழ்க்கையும்

எம்.கே.டி. பாகவதர் இசையும் வாழ்க்கையும், டி.வி.பாலகிருஷ்ணன், ஓல்டு மெட்ராஸ் பிரஸ், பக். 296, விலை 499ரூ. எத்தனையோ பேர் பாகவதர் என்ற பட்டத்தைப் பெற்றாலும், பொதுவாக பாகவதர் என்றால் தியாகராஜ பாகவதர் ஒருவர் என்ற கருத்தை இன்றைய புதிய யுகமும் மறக்காது. பொன்நிற மேனி, நெற்றியில் ஜவ்வாது பொட்டு, தலையில் சுருண்ட முடி ஆகியவை அவரது சிறப்பை அலங்கரிக்கும் தோற்றம். நகைத் தொழிலாளியின் குடும்பம் என்றாலும் சிறுவயது முதலே இசை அவரை ஆட்கொண்டது. அதனால் முதலில் அவரது தந்தை கோபத்திற்கு ஆளாகி வீட்டை விட்டு […]

Read more

ஆய்வுச் சுவடுகள்

ஆய்வுச் சுவடுகள், முனைவர் யோ.ஞானச்சந்திர ஜான்சன், கீர்த்தனா பதிப்பகம், பக். 339, விலை 250ரூ. தமிழ் இலக்கியம் ஒரு காலத்தில் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் எனப் பகுத்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அந்தப் பகுப்பையும் தாண்டி, சமய இலக்கியம் என்னும் பகுப்பும் தோன்றியது. சமய இலக்கியங்களில் ஐரோப்பியரின் வருகைக்குப் பின், கிறிஸ்துவ இலக்கியங்கள் தமிழில் தோன்றி, தமிழ் மொழிக்குப் புது மறுமலர்ச்சியைக் கொடுத்தன. காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள் என்னும் நிலையைக் கடந்து, தற்கால உரைநடை இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பை வழங்கின. அந்தக் கிறிஸ்துவ […]

Read more
1 2 3 9