தமிழச்சி ஆண்டாள்
தமிழச்சி ஆண்டாள், மெய்சிலிர்க்கும் காவியம், ப்ரியா கல்யாணராமன், குமுதம் புத்தகம் வெளியீடு, விலை 290ரூ.
ஆடியில் பிறந்து, ஆண்டவனுக்குத்தன் தோள் மாலையை சூடிக்கொடுத்தவள் ஆண்டாள். பகவானுக்கு பூமாலையோடு மணக்க மணக்க தமிழ்ப்பா மாலையும் சூட்டி தமிழுக்குப் பெருமை சேர்த்த தமிழச்சி.
பெரியாழ்வார் மகளாய்ப் பிறந்து, பெருமாளையே மணந்தவள். குறையேதும் இல்லா கோவிந்தனைப் பாடிய தமிழச்சி ஆண்டாள் குறித்து தமிழில் விரிவான புத்தகம் எதுவும் இல்லை என்பது, பலகாலத்துக் குறை. அதைப் போக்குவதற்காகவே, குமுதத்தில் ஆசிரியர்ப்ரியா கல்யாணராமன் கைவண்ணத்தில் தொடங்கப்பட்டு பல்லாயிரம் வாசகர்களால் பக்தியோடம் தமிழ் மண(ன)த்தோடும் வா(நே)சிக்கப்படும், தமிழச்சி ஆண்டாள் தொடரின் முதல் பாகம் இது.
ஆண்டாள் பிறந்த வில்லிபுத்தூர் தலத்துக்குச் சென்று ஆதாரங்களைத் திரட்டியும், ஜீயர் அவர்களை சந்தித்து விவரங்கள் கேட்டும் பெரும் முயற்சி செய்து, கோதையின் பாதை அறிந்து, அந்தத் தடத்தில், இறைபக்தியும் இனிய தமிழும் சேர்ந்து மணக்கும் எழுத்துகளால் வழிகாட்டி, நம்மை அழைத்துச் செல்கிறார், ஆசிரியர். பெருமாள் கோயில் பிரசாதமாக, சுவாமிக்கு சாத்தப்பட்ட துளசி மாலையாக வாசிக்க வாசிக்க வசீகரிக்கிறது. பொதுவாக பாவை பாடிய பாவையைப் பாடினால், மங்கையர் தோளில் மணமாலை ஏறும் என்பார்கள். ஆண்டாள் பிறந்த ஆடி மாதத்தில் அவளது வரலாற்றை ஆதியோடு அந்தமாகச் சொல்லும் இந்த நூல் உங்கள் இலத்தில்இருந்தாலே போதும், கோதை அருளாலும் அந்த கோவிந்தன் அருளாலும் கோடிகோடியாக நன்மைகள் சேரும் என்பது நிச்சயம்.
நன்றி: குமுதம், 7/8/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029622.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818