வண்டமிழ் வளர்த்த வரதராசனார்

வண்டமிழ் வளர்த்த வரதராசனார், அ. ஆறுமுகம், பாவேந்தர் பதிப்பகம், விலை 120ரூ. முயற்சியின் வடிவம், முன்னேற்றத்தின் வடிவம், முத்தமிழ் வடிவம் என்றழைக்கப்படும் டாக்டர் மு. வரதராசனார் வரலாறு, வளமான தமிழில் வழங்கப்பட்டுள்ளது. மு.வ.வின் பன்முகத் திறங்களையெல்லாம் சுட்டிக்காட்டியும், தொட்டுக்காட்டியும், நெஞ்சில் பதித்தும் நேயப்பெருக்கு வெளிப்பட வரையப்பட்ட பன்முக நூல். நன்றி: தினத்தந்தி, 6/4/2016.   —- வரலாறு பேசும் தமிழகத்து திருக்கோயில்கள், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 500ரூ. காஞ்சீபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியும், திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகமும் இணைந்து நடத்திய அனைத்துலக […]

Read more

இசைப்பாட்டு இலக்கியம்

இசைப்பாட்டு இலக்கியம், கி. கோவிந்தராசு, வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 100ரூ. திரையிசைப் பாடல்களும் இலக்கியச் சுவையுடையவையே என்று நிறுவும் நூல். பஞ்சு அருணாசலம், கங்கை அமரன், டி. ராஜேந்தர் ஆகியோர் பாடல்கள் வழி இதை நிரூபித்திருப்பது சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —- ஊமையின் பேச்சு, ந. வேலுசாமி, அருளகம் வெளியீடு, பக். 224, விலை 150ரூ. ந. வேலுசாமி எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. ரத்தமும் சதையுமான உறவுகளை உணர்வு பூர்வமாக சித்தரித்துள்ளன இக்கதைகள். -இரா. மணிகண்டன். […]

Read more

காற்றில் வடித்த சிலைகள்

காற்றில் வடித்த சிலைகள், முனைவர் மரியதெரசா, தென்றல் நிலையம், பக். 80, விலை 35ரூ. இயற்கையை அன்றாட வாழ்க்கையோடு இணைத்து காணும் முயற்சியே இக்கவிதைத் தொகுப்பு. இயற்கை தரும் இன்பத்தை நூல் முழுதும் அள்ளித்தெளித்திருக்கிறார் கவிதை வடிவில். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/4/2016.   —- விழிப்புணர்வு, புதுவை மு. தருமராசன், புதுகைத் தென்றல், பக். 224, விலை 110ரூ. நூலாசிரியர் எழுதிய தலையங்கங்களின் தொகுப்பு இந்நூல். அரசியல் பிரச்னைகளில் இருந்து சமூகப்பிரச்னை வரை பலவற்றையும் அலசியுள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், […]

Read more

மோகனம்

மோகனம், தொகுப்பாசிரியர் பேராசிரியர் நிர்மலா மோகன், திருவரசு புத்தக நிலையம், பக். 498, விலை 300ரூ. பேராசிரியர் இரா.மோகனின் முதல் நூல் தொடங்கி அண்மை நூல் வரையிலான படைப்புகள் குறித்த ஆவணமாக இந்நூலைத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். பேரா. இரா. மோகனின் படைப்பாளுமை இந்நூல் வழி பதிவு செய்திருப்பது சிறப்பான முயற்சி. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 11/4/2016.   —- ஜான்சிராணி, கள்ளிப்பட்டி சு. குப்புசாமி, சுவாமிமலை பதிப்பகம், பக். 96, விலை 40ரூ. வீரமங்கை ஜான்சிராணியின் வாழ்க்கை மூலம் ஒவ்வொரு பெண்ணும் […]

Read more

சப்தமில்லாத சப்தம்

சப்தமில்லாத சப்தம், ஓஷோ, தமிழில் சிவதர்ஷினி, கண்ணதாசன் பதிப்பகம், பக். 312, விலை 200ரூ. புராதன இசையைத்தான் சப்தமில்லாத சப்தம் என்கிறார் ஓஷோ. அது நம்மைச் சூழ்ந்துதான் இருக்கிறது. ஆனால் அதை நம்மால் உணர முடியாது. அதைக் கேட்டுணரும் முயற்சிதான் தியானம் என்கிறார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —– சிந்திக்க வைக்கும் சிறுவர் கதைகள், சுப்ரபாரதி மணியன், விஜயா பதிப்பகம், பக். 64, விலை 30ரூ. இன்பச் சுற்றுலா உள்ளிட்ட 11 சிறுகதைகளின் தொகுப்பு. சின்னஞ்சிறுகதைகள் மூலம் மாணவர்களுக்கு ஆதிவாசிகள். […]

Read more

100 சிறுதானிய சமையல் 1

100 சிறுதானிய சமையல் 1, எஸ். மல்லிகா பத்ரிநாத், பிரதீப் எண்டர்பிரைசஸ், பக். 107, விலை 100ரூ. கம்பையும் கேழ்வரகையும் கொண்டு 100 வகையான உடல் ஆரோக்கியமிக்க சமையலைத் தந்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —- டோக்கன் நம்பர் 18, தொகுப்பாசிரியர் நந்தவனம் சந்திரசேகரன், இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 106, விலை 100ரூ. திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் மிகச் சிறந்த 20 கதைகளைத் தேர்வு செய்து நூலாகத் தந்துள்ளார்கள். மனித வாழ்வின் யதார்த்தத்தை பதிவு செய்யும் கதைகளே இவற்றில் […]

Read more

ஆயிரம் கவிதைகள் மலரட்டும்

ஆயிரம் கவிதைகள் மலரட்டும், மு. முருகேஷ், மேன்னை வெளியீடு, பக். 180, விலை 120ரூ. சிற்றிதழாளர்கள், அவர்களின் கவிதைகள் ஆகியவற்றைப் பற்றி நூலாசிரியர் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு. நல்ல கவிஞர்களும் நல்ல கவிதைகளும் நாள்தோறும் பூக்க வேண்டும் என்பது நூலாசிரியர் விருப்பம். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —- ஷேக்ஸ்பியரின் சிந்தனைகள், டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வுமையம், பக். 196, விலை 70ரூ. நாடகங்களில் ஷேக்ஸ்பியர் வெளிப்படுத்தும் சிந்தனைகளை மட்டும் தனியாக தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். இதனை கற்பவர்கள் […]

Read more

பூபாள இராகங்கள்

பூபாள இராகங்கள், நா. அப்துல் ஹாதிபாகவி, ஆயிஷா இஸ்லாமியப் பதிப்பகம், பக். 150, விலை 100ரூ. சமூக அவலம், வறுமை, கொடுமை, சமத்துவம், பெண்ணுரிமை, இஸ்லாம் இந்த மானுட சமுதாயத்திற்கு வழங்கியுள்ள கொடைகள் என்று பலவற்றையும் கவிதைகளாகத் தந்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.   —- திருக்குறள் தமிழ் ஆங்கில உரை, மு.க.அன்வர்பாட்சா, நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 344, விலை 200ரூ. பாமரர்களும், மாணவர்களும் எளிதில் புரியும் வண்ணம் புதிய சிந்தனைகளுடன் திருக்குறளுக்கு எழுதப்பட்ட உரை நூல். தமிழோடு ஆங்கிலத்திலும் உரை […]

Read more

உலக மதங்கள்

உலக மதங்கள், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், பக். 208, விலை 175ரூ. உலகில் பல்வேறு மதங்கள் தோன்றி, மக்களால் அவை பின்பற்றப்பட்டு வந்தாலும், இந்த மதங்கள் அனைத்துமே ஒற்றுமை, அமைதி, அன்பு போன்ற நல்ல விஷயங்களை வலியுறுத்துகின்றன. தனக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்றிருப்பதை மனிதன் நம்புகிறான். அவற்றை எடுத்துரைக்கும் இறைத்தூதர்கள் அல்லது தீர்க்கதரிசிகளின் கருத்துக்களை ஏற்று மனிதன் நடப்பதாலும், அம்மதங்கள் நிலைத்திருக்கின்றன. அந்த வகையில், இந்நூலாசிரியர் இவ்வுலகிலுள்ள முக்கிய மதங்களைப் பற்றியும், அவை எப்படி, யாரால், எப்போது, எதற்காக தோற்றுவிக்கப்பட்டன என்றும், அவற்றின் […]

Read more

வெற்றியே இலட்சியம்

வெற்றியே இலட்சியம், கவிதாசன், குமரன் பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. வெற்றி என்பது முதன்மையாக இருப்பதல்ல. முன்னேறிக்கொண்டே இருப்பது போன்ற முன்னேற்ற முயற்சிகளுக்கு உந்துதலாக இருக்கும் நூல். நன்றி: குமுதம், 18/4/2016.   —- எண்ணுவது உயர்வு, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. பாரதியார் எழுதிய ‘புதிய ஆத்திச்சூடி’ க்கு விளக்கவுரை எழுதியுள்ளார். பாரதியின் கீர்த்தியை பரப்பும் வண்ணம் எளிய நடையில் புத்துரை அமைந்துள்ளது சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 18/4/2016.

Read more
1 2 3 8