வண்டமிழ் வளர்த்த வரதராசனார்

வண்டமிழ் வளர்த்த வரதராசனார், அ. ஆறுமுகம், பாவேந்தர் பதிப்பகம், விலை 120ரூ. முயற்சியின் வடிவம், முன்னேற்றத்தின் வடிவம், முத்தமிழ் வடிவம் என்றழைக்கப்படும் டாக்டர் மு. வரதராசனார் வரலாறு, வளமான தமிழில் வழங்கப்பட்டுள்ளது. மு.வ.வின் பன்முகத் திறங்களையெல்லாம் சுட்டிக்காட்டியும், தொட்டுக்காட்டியும், நெஞ்சில் பதித்தும் நேயப்பெருக்கு வெளிப்பட வரையப்பட்ட பன்முக நூல். நன்றி: தினத்தந்தி, 6/4/2016.   —- வரலாறு பேசும் தமிழகத்து திருக்கோயில்கள், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 500ரூ. காஞ்சீபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியும், திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகமும் இணைந்து நடத்திய அனைத்துலக […]

Read more

நகைச்சுவை மன்னர் கலைவாணர்

நகைச்சுவை மன்னர் கலைவாணர், முனைவர் இராம. இராமகுமார், செம்மூதாய் பதிப்பகம், விலை 60ரூ. கலைவாணர் என்றால், அது என்.எஸ். கிருஷ்ணன் ஒருவரையே குறிக்கும். உலகப் புகழ் பெற்ற மேல் நாட்டு நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினுக்கு இணையானவர். சிரிப்போடு சிந்தனையையும் சேர்த்து வழங்கியவர். ஓடாத படங்களையும் ஓட வைத்தவர். பிற்காலத்தில் போதிய வருமானம் இல்லாத காலத்திலும், கையில் இருப்பதை தானமாக வழங்கிய வள்ளல். அத்தகைய உயர்ந்த மனிதரான என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறை, சரளமான நடையில் நெஞ்சைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார், முனைவர் இராம.இராமகுமார். நன்றி: தினத்தந்தி, […]

Read more