சிலப்பதிகாரம் கேள்விகள் ஆயிரம்

சிலப்பதிகாரம் கேள்விகள் ஆயிரம், மு. கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம்,   பக்.192. விலை ரூ.200.  தமிழா்களின் காப்பியம் என்று அழைக்கப்படும் சிலப்பதிகாரத்தின் கதையைத் தெரியாதவா்கள் தமிழா்களாக இருக்க இயலாது. கோவலன்-கண்ணகி-மாதவி; சேர-சோழ-பாண்டியா்; இயல்-இசை-நாடகம் என்று சிலப்பதிகாரம் பல முப்பரிமாணங்களைத் தன்னுள் கொண்டதாகத் திகழ்கிறது. சிலப்பதிகாரத்துக்கு 11-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அரும்பதவுரையும், 12-ஆம் நூற்றாண்டில் அடியாா்க்கு நல்லாா் எழுதிய உரையும் அந்தக் காப்பிய நுட்பங்களை அறிந்துணர உதவுகின்றன. அடியாா்க்கு நல்லாா் உரையிலிருந்து அவரது காலத்தில் சிலப்பதிகாரம் போலவே பல இசை நாடக நூல்கள் வழக்கில் இருந்தன […]

Read more

உலகவர் போற்றும் முத்தமிழ்

உலகவர் போற்றும் முத்தமிழ், தொகுப்பாசிரியர் மு கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை ரூ. 500 இயல் இசை நாடகம் ஆகிய மூன்று வகை தமிழும் எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பதை அறிந்துகொள்ள உதவும் ஆய்வு நூலாக இந்நூல் காணப்படுகிறது. மூவகை தமிழின் வளர்ச்சி தொடர்பாக அனைத்துலக அளவில் திருச்சியில் நடந்த முத்தமிழ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட பல அறிஞர்களின் கட்டுரைகள் தொகுப்பு இந்த நூல் இடம் பெற்றிருக்கிறது. தமிழின் பல வகையான நாடகங்கள் கூத்துகள் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் ஆடல் கலை சங்க காலம் முதல் […]

Read more

உலகவர் போற்றும் முத்தமிழ்

உலகவர் போற்றும் முத்தமிழ், மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 500ரூ. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று வகைத் தமிழும் எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பதை அறிந்து கொள்ள உதவும் ஆய்வு நூலாக இந்த நூல் காணப்படுகிறது. மூவகைத் தமிழின் வளர்ச்சி தொடர்பாக அனைத்துலக அளவில் திருச்சியில் நடந்த முத்தமிழ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட பல அறிஞர்களின் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூலில் இடம் பெற்று இருக்கிறது. தமிழின் பலவகையான நாடகங்கள், கூத்துகள், மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் ஆடற்கலை, சங்ககாலம் முதல் தற்காலம் வரையிலான […]

Read more

இன்பம் நல்கும் இசைத்தமிழ்

இன்பம் நல்கும் இசைத்தமிழ், தொகுப்பாசிரியர்: மு.கலைவேந்தன்,  தமிழ் ஐயா வெளியீட்டகம், பக்.368, விலை ரூ.500. கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூலில் இசைத் தமிழ் குறித்த 56 கட்டுரைகள் உள்ளன. அவற்றுள் நான்கு ஆங்கிலக் கட்டுரைகள். வேதநாயகம் பிள்ளை, பாபநாசம் சிவன், அண்ணாமலை ரெட்டியார், வேதநாயக சாஸ்திரியார் முதலானோர் வளர்த்த இசைத்தமிழ் பற்றியும், அவர்களது இசைத்திறன் குறித்த தகவல்களையும் சில ஆய்வுக் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. தமிழிசைக்கலை, இசைப் பெயரமைவு, இசைக் கருவிகளின் பெயரமைவு போன்றவற்றை ஒரு கட்டுரை சிறப்பாக விளக்குகிறது. மூன்றாம் நந்திவர்மன் காலத்திய இசைக்கலை […]

Read more

கலைஞர் ஆயிரம்

கலைஞர் ஆயிரம், வாழ்க்கையெனும் ஓடம், தொகுப்பாசிரியர் மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 300ரூ. தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளால் புகழ்பெற்ற முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பற்றிய கவிதை புத்தகம் இது. டாக்டர் கலைஞர் புகழ் குறித்து, 249 கவிஞர்கள் இயற்றிய உணர்ச்சிகரமான கவிதாஞ்சலியை மு.கலைவேந்தன் அழகாகத் தொகுத்து தந்து இருக்கிறார். நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027225.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள், முனைவர் மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 600ரூ. சைவ சமயம் உலகில் உள்ள எல்லா சமயங்களுக்கும் முற்பட்ட தொன்மையை உடையது. தமிழும், சைவமும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்றன. சைவத்தமிழின் சிறப்பை பறைசாற்றும் வகையில் 78 கட்டுரைகள் சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள் என்ற நூல் தொகுப்பாக வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சைவத்தமிழ் இலக்கியங்கள், திருமந்திரத்தின் தனிச்சிறப்புகள், சைவத் தமிழ் அறிஞர்கள் ஆகிய தலைப்புகளில் பகுக்கப்பட்டு அறிவு நிறை ஆய்வாளர்களால் படைக்கப்பட்டு இருக்கிறது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் வேறு, […]

Read more

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்,  தொகுப்பாசிரியர் மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம்,  பக்.496, விலை ரூ.600. சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு அளித்துள்ள கொடைகள் அளப்பரியவை. அவற்றுள் சைவத்தைப் பொருத்தவரை காரைக்கால் அம்மையார் (மூன்றாம் நூற்றாண்டு) தொடங்கி சேக்கிழார் (12 ஆம் நூற்றாண்டு) வரை இருபத்தேழு அருளாளர்கள் வழங்கிய "பன்னிரு திருமுறை' சைவ சமயத்தின் கவசமாகவே கருதப்படுகிறது. மேலும் குமரகுருபரர், தாயுமானவர், வள்ளலார், அருணகிரிநாதர் போன்றோரும் சைவத்தால் தமிழையும், தமிழால் சைவத்தையும் மேம்படுத்தியுள்ளனர். தமிழ் இலக்கியங்கள் எவ்வகையிலெல்லாம் சைவத்தை வளர்த்தெடுக்க உதவின என்பதை உணர்த்தும்விதமாக […]

Read more

மகாகவியும் இசைப் பேரரசியும்

மகாகவியும் இசைப் பேரரசியும், முனைவர் மு. கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 500ரூ. இசையில் சிகரத்தைத் தொட்டு புகழின் உச்சத்தை அடைந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. மகாகவி பாரதியார் பற்றியும், எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றியும் பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் எழுதிய கட்டுரைகள் கொண்ட புத்தகம் இது. மொத்தம் 40 கட்டுரைகள், பாரதியார் பற்றியும், எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றியும் அறிந்து கொள்ள இந்த ஒரு புத்தகம் போதும். அந்த அளவுக்கு, அந்த இரு மேதைகளையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் கட்டுரைகள் அமைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 1/11/2017.

Read more

வளரும் பேச்சாளருக்கு

வளரும் பேச்சாளருக்கு, முனைவர் மு. கலைவேந்தன், பதிப்பாசிரியர் கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 200ரூ. மேடைப்பேச்சு ஒரு கலை. சிலருக்கு மேடை ஏறினாலே உதறல் எடுக்கும். அச்சத்தைப் போக்கி, மேடைப்பேச்சில் வல்லவர் ஆவதற்கான வழிமுறைகளை இந்நூலில் விளக்குகிறார், முனைவர் மு. கலைவேந்தன். தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றோர், சிறந்த மேடைப்பேச்சுக்கு முன்னோடிகள். அதன்பின் அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பந்த் ஆகியோர் மேடைத் தமிழை […]

Read more

வண்டமிழ் வளர்த்த வரதராசனார்

வண்டமிழ் வளர்த்த வரதராசனார், அ. ஆறுமுகம், பாவேந்தர் பதிப்பகம், விலை 120ரூ. முயற்சியின் வடிவம், முன்னேற்றத்தின் வடிவம், முத்தமிழ் வடிவம் என்றழைக்கப்படும் டாக்டர் மு. வரதராசனார் வரலாறு, வளமான தமிழில் வழங்கப்பட்டுள்ளது. மு.வ.வின் பன்முகத் திறங்களையெல்லாம் சுட்டிக்காட்டியும், தொட்டுக்காட்டியும், நெஞ்சில் பதித்தும் நேயப்பெருக்கு வெளிப்பட வரையப்பட்ட பன்முக நூல். நன்றி: தினத்தந்தி, 6/4/2016.   —- வரலாறு பேசும் தமிழகத்து திருக்கோயில்கள், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 500ரூ. காஞ்சீபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியும், திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகமும் இணைந்து நடத்திய அனைத்துலக […]

Read more
1 2