மகாகவியும் இசைப் பேரரசியும்
மகாகவியும் இசைப் பேரரசியும், முனைவர் மு. கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 500ரூ. இசையில் சிகரத்தைத் தொட்டு புகழின் உச்சத்தை அடைந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. மகாகவி பாரதியார் பற்றியும், எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றியும் பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் எழுதிய கட்டுரைகள் கொண்ட புத்தகம் இது. மொத்தம் 40 கட்டுரைகள், பாரதியார் பற்றியும், எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றியும் அறிந்து கொள்ள இந்த ஒரு புத்தகம் போதும். அந்த அளவுக்கு, அந்த இரு மேதைகளையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் கட்டுரைகள் அமைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 1/11/2017.
Read more