விடியலை நோக்கி

விடியலை நோக்கி, க. ராகிலா, வாசகன் பதிப்பகம், பக். 120, விலை 60ரூ. ராகிலாவின் எழுத்து, லட்சிய எழுத்து. ஒவ்வொரு கதையும், ஒரு நீதியை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் அவர் இந்தச் சிறுகதைகளை எழுதி இருக்கிறார். 18 சிறுகதைகள், இந்தத் தொகுதியில் இருக்கின்றன. எல்லாமே, மணி மணியான கதைகள். முதியோர் இல்லங்களில், பெற்றோரை தவிக்க விடாதீர்கள் என்று சொல்லும் முதல் கதையான, உறவுகள் பிரிவதற்கல்ல கதை அருமை. பல சிறுகதைகளில், அருமையான குணச்சித்திர வார்ப்புகள். குட்டச்சிக் கிழவி என்ற கதையில் வரும் […]

Read more

பட்டினத்தார் பாடல்கள்

பட்டினத்தார் பாடல்கள், புதுக்கவிதை வடிவில், கிருஷ்ண பிரசார், காவ்யா, பக். 1354, விலை 1300ரூ. சைவத் திருமுறைகளுள் பதினோராம் திருமுறையாக இடம்பெற்றள்ள பட்டினத்தார் பாடல்களும், பட்டினத்தாரின் ஏனைய பாடல்களின் தொகுப்பில் உள்ள பாடல்களும், புதுக்கவிதை வடிவில் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சித்தர்களுள் ஒருவராக போற்றப்பட்ட பட்டினத்தார், தம் பாடலுள் கூறும் அரிய சைவ சித்தாந்த கருத்துகளை, எளிய, இனிய கவிதை வடிவில் இந்நூல் தந்துள்ளது. சித்ததர் என்போர் யாவர், மூடநம்பிக்கைகளை வேரறுத்து, உருவ வழிபாட்டை எள்ளி நகையாடிய இவர்கள், பின் ஏன் பல தலங்களின் இறைவனை […]

Read more

உங்களுக்கும் ஒரு குழந்தை

உங்களுக்கும் ஒரு குழந்தை, ஐஸ்வர்யா மகளிர் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம், சென்னை, விலை 300ரூ. குழந்தை இல்லாவிட்டால் வாழ்க்கையில் பெரும் பிரச்சினை ஏற்படுகிறது. தம்பதிகளில் எவரிடம் குறைபாடு இருந்தாலும், முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் நிச்சயம் குழந்தைப்பேறு அடைய முடியும் என்று கூறும் டாக்டர் சந்திரலேகா, அதற்காக இருக்கும் பல்வேறு நவீன சிகிச்சை முறைகளை தெள்ளத் தெளிவாக விளக்குகிறார். புதிதாகத் திருமணம் செய்துகொண்ட பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும், பருவம் அடைந்த பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் நூலாசிரியர் […]

Read more

அறிவார்ந்த ஆன்மிகம்

அறிவார்ந்த ஆன்மிகம், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 200ரூ. தினத்தந்தியின் அருள் தரும் ஆன்மிகம் பகுதியில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. தீப ஆரத்தி எடுப்பது எதற்காக? கோவில் வழிபாடு ஏன்? உபவாசம் எதற்காக? கார்த்திகை தீபத்தின் சிறப்பு, கும்பாபிஷேகம் எதற்காக? திருநீறு அணிவது எதற்காக? தேங்காய் உடைப்பது ஏன்? ருத்ராட்சம் அணிவதன் சிறப்பு என்பன போன்ற 52 கட்டுரைகளில் இந்து மதத்தில் உள்ள சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் எழுத்தாளர் என். கணேசன் விளக்கியுள்ளார். அந்தச் சடங்குகளின் பின்னணியில் பின்னப்பட்டுள்ள, காரணங்களை ஏன், எதற்காக, எப்படி […]

Read more

திருக்குறளுக்கு புதிய உரை

திருக்குறளுக்கு புதிய உரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 125ரூ. திருக்குறளுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். ஆரம்ப காலத்தில் எழுதப்பட்ட சில உரைகள், மிகக் கடினமாக இருந்தன. அவற்றுக்கே உரை எழுத வேண்டும்போல் இருந்தன. காலமாற்றத்துக்குத் தக்கபடி சமீப காலமாக எளிய உரைகள் வரத் தொடங்கின. 1000 படங்களுக்கு மேல் வசனம் எழுதியவரும், பல மொழிகள் அறிந்தவருமான ஆரூர்தாஸ் தமிழ் மறை என்ற தலைப்பில் திருக்குறளுக்கு இனிய, எளிய தமிழில் புதிய உரை எழுதியுள்ளார். பாமர மக்களுக்கு புரிந்து கொள்ளத்தக்க வகையில் உரை எளிய […]

Read more

மெய்ப்பொருள் காண்போம்

மெய்ப்பொருள் காண்போம், மேனிலை அடைவோம், சிங்கப்பூர் சித்தார்த்தன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தில் பல பொறுப்புகளை வகித்தவர் இந்நூலாசிரியர். இவர் தமிழ்க் கல்வி குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார். இந்நூலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள், தங்கள் வாழ்க்கை நெறிமுறைகளின் மூலமும், படைப்பு இலக்கியங்களின் மூலமும், பல உன்னதமான கருத்துக்களை உலகிற்குத் தந்து உயரிய இடத்தைப் பெற்றவர்கள். இதற்கு திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் போன்றவை சான்றுகள் என்கிறார். இப்படைப்புகள், இலக்கிய இலக்கண நயத்துடன் எப்படி வாழ்க்கை […]

Read more

கானகம்

கானகம், லட்சுமி சரவணக்குமார், சென்னை மலைச்சொல் பதிப்பகம். வெற்றிக்காக போராடும் இரக்கமற்ற மிருகங்கள் இளம் எழுத்தளர் லட்சுமி சரவணக்குமார் எழுதிய, கானகம் என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். சென்னை மலைச்சொல் பதிப்பகத்தார் வெளியிட்டு உள்ளனர். முழுக்க காடு மற்றும் வேட்டையைப் பற்றி வெளிவந்த நாவல் இது. வேட்டையாடுதல் தொடர்பான நூல்கள், தமிழில் மிகக் குறைவு. 1950களில் ஜிம் கார்பெட் எழுதிய வேட்டை தொடர்பான நூல்கள்தான் இங்கு பிரபலமாக இருந்தன. இந்நிலையில் கானகம் நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. வேட்டைக்காரனின் மனநிலை, வேட்டையாடும் முறை ஆகியவற்றோடு, அன்றாடம் […]

Read more

எண்ணுகிறேன் எழுதுகிறேன்

எண்ணுகிறேன் எழுதுகிறேன், டாக்டர் நா. மகாலிங்கம், ராமானந்த அடிகளார் அறக்கட்டளை, கோவை, பக். 216, விலை 155ரூ. தொழிலதிபர் நா. மகாலிங்கத்தின் 92வது பிறந்த நாளில் வெளியிடப் பெற்ற நூல். காஷ்மீ பிரச்னைக்கு ஒரு தீர்வு என்பது முதல், வீழ்ந்த விவசாயம் விருத்தியடைய என்ற கட்டுரையோடு 21 தலைப்புகளில் நூல் நிறைவடைகிறது. மகாலிங்கம் அவ்வப்போது, ஓம் சக்தி இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். கட்டுரைகள் அனைத்திலுமே அருட்செல்வரது நாட்டுப்பற்று, ஆன்மிகச் சிந்தனை, ஆழ்ந்த அறிவியல் கண்ணோட்டம், பரந்துபட்ட உகறிவு, சமுதாய அவலங்களையும், வன்முறைகளையும் […]

Read more

போட்டுத்தள்ளு

போட்டுத்தள்ளு, சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, கிழக்குப் பதிப்பகம், சென்னை, பக். 200, விலை 170ரூ. தொழிலில், விற்பனையில் போட்டியை வெல்லும் கலையை சொல்லி தருகிறார் சதீஷ். நாம் செய்யும் தொழிலின் அடிப்படையை நாமே சரியாக தெரிந்துகொள்ளவில்லை என்றால், போட்யை எப்படி சரியாகக் கணிப்பது? போட்டியாளர் யார் என்பதை எப்படி அறுதியிடுவது, நம் தொழிலின் துவக்கமே நான் யார், எந்தத் தொழிலில் இருக்கிறேன், யார் என் வாடிக்கையாளர், அவரின் எந்தத் தேவையை நான் பூர்த்தி செய்கிறேன் என்ற ஆதார கேள்விகளுக்கு விடை காண்பதுதான். நீங்கள் சுய தொழில் […]

Read more

காந்தியத் தாயத்து

காந்தியத் தாயத்து, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், நேசம் பதிப்பகம், பக். 124, விலை 90ரூ. காந்தியம் எனும் காயகல்பம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பட்டிமன்ற, இலக்கியமன்ற மேடைகளில், தனித்தன்மையுடன் சொற்பொழிவு ஆற்றி வருகிறார், இப்புத்தகத்தின் ஆசிரியர். தேச தந்தை மகாத்மா காந்தி பற்றி, லட்சக்கணக்கான புத்தகங்கள் உலகெங்கும் பதிப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. இப்புத்தகத்தில் மொத்தம் 31 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர், தன் நண்பர் புகழ் மதியிடம் உரையாடியபோது, எழுந்த கேள்விகளுக்கு, காந்தியின் வாழ்வில் நடந்த சம்பவத்தை விவரித்து, அதன் மூலம் விடை சொல்கிறார். […]

Read more
1 2 3 8