மெய்ப்பொருள் காண்போம்
மெய்ப்பொருள் காண்போம், மேனிலை அடைவோம், சிங்கப்பூர் சித்தார்த்தன், நர்மதா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ.
சிங்கப்பூர் கல்வி அமைச்சகத்தில் பல பொறுப்புகளை வகித்தவர் இந்நூலாசிரியர். இவர் தமிழ்க் கல்வி குறித்துப் பல நூல்களை எழுதியுள்ளார். இந்நூலில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள், தங்கள் வாழ்க்கை நெறிமுறைகளின் மூலமும், படைப்பு இலக்கியங்களின் மூலமும், பல உன்னதமான கருத்துக்களை உலகிற்குத் தந்து உயரிய இடத்தைப் பெற்றவர்கள். இதற்கு திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் போன்றவை சான்றுகள் என்கிறார். இப்படைப்புகள், இலக்கிய இலக்கண நயத்துடன் எப்படி வாழ்க்கை நெறிமுறைகளை எடுத்துரைத்துள்ளது என்பதை ஆசிரியர் விவரிப்பது, தமிழர்களாகிய நம்மைப் பெருமைப்பட வைக்கிறது. ஒவ்வொரு பாடலிலும் உள்ள கருத்தும், அந்தக் கருத்துக்குள் இருக்கும் மெய்ப்பொருளும் நம்மை மேன்மை அடையச் செய்யக்கூடியவை. மனத்துக்கண் மாசிலன் ஆதல்… என்ற குறளில், மனம் தூய்மையாக இருப்பதே அறம் என்ற கருத்தை திருவள்ளுவர் வலியுறுத்துகிறார். இக்கருத்து குறித்து சிலப்பதிகாரம், தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கிய நூல்களும் என்னவெல்லாம் கூறுகின்றன. இதற்குள் இருக்கும் மெய்ப்பொருள் என்ன என்பனவற்றை, முதல் எதுவோ முடிவும் அதுவே என்ற முதல் கட்டுரையில் ஆசிரியர் விளக்கியுள்ளது சிறப்பானது. இதுபோல் இந்நூலில் உள்ள 41 கட்டுரைகளும் அமைந்துள்ளது சிறப்பானது. -பரக்கத். நன்றி: துக்ளக், 24/9/2014.
—-
கோழிப்பட்டி, ஐ.சிவசுப்பிரமணி ஜெயசேகர், அய்யா நிலையம் பதிப்பகம், தஞ்சாவூர், பக். 128, விலை 100ரூ.ய
இந்த சிறுகதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும் கற்பனையில் பிறந்தவை அல்ல, மாறாக சமுதாயத்தில் காணப்படும் அவலங்களை வெளிச்சம்போட்டு காட்டும் கண்ணாடியாக இருப்பதுடன், இந்த கதைகள் படிப்பவர்கள் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 24/9/2014.