சிறுகாப்பியங்களில் திருக்குறள்

சிறுகாப்பியங்களில் திருக்குறள், ச.தண்டபாணி தேசிகர், லட்சுமி பதிப்பகம், விலைரூ.60 திருக்குறள் கருத்துக்கள் சொல்லப்படாத தமிழ் இலக்கியங்களே இல்லை எனலாம். இந்நுால் தமிழ் சிறு காப்பியங்களில் சொல்லப்பட்ட திருக்குறளின் கருத்துக்களை, எடுத்துக்காட்டு பாடல்களுடன் விளக்கிச் சொல்கிறது. இந்நுாலில் காப்பியங்களில் திருக்குறள், சூளாமணியில் வள்ளுவம், நீலகேசியில் வள்ளுவம், உதயணகுமார காவியத்தில் வள்ளுவம், யசோதர காவியத்தில் வள்ளுவம் என்ற தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்து உள்ளன. தமிழ் சிறு காப்பியங்களில் கதையையும், அதனுள் கூறப்பட்டுள்ள திருக்குறள் கருத்தையும் தெரிந்து கொள்ள பேருதவியாக உள்ளது. – ராமலிங்கம் நன்றி: தினமலர், 31/1/21 […]

Read more

பூமியைச் சுற்றிப் பாருங்கள்

பூமியைச் சுற்றிப் பாருங்கள்,  பத்ஹுர் ரப்பானி,  செய்யது ஹோம் பப்ளிஷர்ஸ், பக்.426, விலை ரூ.250.   1970 ஆகஸ்ட் மாதத்திலிருந்து 20 அக்டோபர் 2018 வரை உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்த தனது பயண அனுபவங்களை நூலாசிரியர் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். வெறும் பயண அனுபவங்களாக மட்டும் இல்லாமல், சென்ற இடத்தின் சிறப்புகள், வித்தியாசமான தன்மைகள், வரலாறு என அனைத்தையும் தொட்டுச் செல்கிறது இந்நூல். சிங்கப்பூரில் எந்த நாட்டு நாணயத்தைக் கொடுத்தாலும் மாற்றிக் கொள்ளலாம். பணம் மாற்றுவதற்கென்றே பல நிறுவனங்கள் பல இடங்களில் இருக்கின்றன. […]

Read more

விளக்குகள் பல தந்த ஒளி

விளக்குகள் பல தந்த ஒளி, தமிழில் மொழி பெயர்த்தவர் பி.உதயகுமார், கண்ணதாசன் பதிப்பகம், விலை 230ரூ. ஒரே நூலில் மனிதனின் மாபெரும் தூண்டுகோல் கருவூலத்தின் உன்னதமானவற்றை இது தருகிறது. இன்றையத் தேவைகள், பிரச்சினைகளை எதிர்கொள்ள, கடந்த கால, நிகழ்கால, எல்லா காலத்திலும் பயன்தரும் சிந்தனைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றை இந்நூலில் காணலாம். ஆசிரியர் இந்நூலை தமிழில் சுவைபட மொழி பெயர்த்துள்ளார். அரிஸ்டாடில் முதல் எமர்சன் வரை, பிளாட்டோ முதல் வில்லியம் ஜேம்ஸ் வரை பலரது மிகச் சிறந்த எண்ணங்கள், தத்துவங்களின் சாரம், நம்மைத் தூண்டி விடவே […]

Read more

உலோகம் உரைக்கும் கதைகள்

உலோகம் உரைக்கும் கதைகள், ஜெ.ஜெயசிம்மன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 150ரூ. உலோகம் உரைக்கும் கதைகள் என்ற இந்நுால், பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் புதல்வர் மொழிபெயர்த்த நுாலாகும். ‘TILES ABOUT METAL’ என்ற நுாலின் தமிழ் வடிவம். படிப்பதற்கு ஏற்றதாய் தெளிவான எளிய நடையில் இந்நுால் உருவாகியிருக்கிறது. உலோகங்களின் பெயரைத் தமிழ்ப் படுத்தியுள்ள சிறப்பு பாராட்டக் கூடியது. என்றாலும் அதை புரிந்து கொள்வதற்கு சற்றே சிரமப்பட வேண்டியிருக்கிறது. சான்றாக, இலிதியம், மகனிச்சயம், ஏலமினியம், கோபாலது, துங்கஸ்டன், பீலாதினம் என்பன. 16 உலோகங்களைப் பற்றிய தகவல் […]

Read more

நல்லவற்றையே நாடுங்கள்

நல்லவற்றையே நாடுங்கள், மு.முகம்மது சலாகுதீன், பஷாரத் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 80ரூ. நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த இந்நூலாசிரியர், நல்ல எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்கவர். இவர் தமிழகத்தின் மிகப் பெரும் நாளிதழான ‘தினத்தந்தி’ வெள்ளி மலரில் அவ்வப்போது எழுதிய மதநல்லிணக்கம் மற்றும் சமயரீதியிலான கட்டுரைகளில் சிறப்பானவற்றின் தொகுப்பே இந்நூல். இக்கட்டுரைகள் ஜாதி – மத வேறுபாடின்றி பலராலும் படித்து பாராட்டப்பட்டவை. மனிதன் எத்தகைய குணநலன்களோடு – எப்படி வாழ்வது, அது சமுதாயத்திற்கும், சமயத்திற்கும் எப்படி ஏற்றது என்பன போன்றவற்றை குர் – ஆன் மற்றும் […]

Read more

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம், டி.கே. இரவீந்திரன், விகடன் பிரசுரம், பக். 231, விலை 135ரூ. களப்பிரர் காலத்தை ஏன் தமிழகத்தின் இருண்டகாலமாகக் கருதுகிறோம் என்ற கேள்வியை மையமாக்கியே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. களப்பிரர்கள் சமண சமயத்தவர் அல்ல; பெளத்தர்கள் என பல இலக்கியச் சான்றுகள் மூலம் நிலை நிறுத்தியுள்ளார் நூலாசிரியர். அதேசமயம், வைதீக மதத்துக்கு அவர்கள் எதிரானவர்கள் இல்லை எனவும் வாதிடுகிறார். ஆனால், “களப்பிரரும் சமயங்களும்’‘ எனும் கட்டுரையில் சமண, பெளத்த சமயப் பிரசாரம் களப்பிரர் காலத்தில் தழைத்து வளர்ந்ததையும், சைவ, வைணவ சமய […]

Read more

தமிழ்க் கட்டுரைக் களஞ்சியம்

தமிழ்க் கட்டுரைக் களஞ்சியம், வே. ராகவன், டாக்டர் வே. ராகவன் நிகழ்கலை மையம், பக். 440, விலை 650ரூ. சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவரும், சமஸ்கிருத மொழிக்கும் கர்நாடக இசைக்கும் பெரும் தொண்டாற்றியவருமான டாக்டர் வே.ராகவன், 1930 களில் தொடங்கி பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். கணபதி, ஸுப்ரமண்யர், லக்ஷ்மி போன்ற கடவுள்களைப் பற்றியும், தீபாவளி, மாட்டுப் பொங்கல், திருவாதிரை முதலிய பண்டிகைகள் பற்றியும், மகாகவிகளான காளிதாஸர், பாரவி, தண்டி போன்றோர் பற்றியும், நம் காலத்தில் வாழ்ந்து மறைந்த பாரதியார், […]

Read more

நீதி நூல்களில் உடல் நலம்

நீதி நூல்களில் உடல் நலம், மு.சு. கன்னையா, சங்கர் பதிப்பகம், பக். 160, விலை 135ரூ. மனிதனிடம் உள்ள மதிப்புயர்ந்த செல்வங்கள், அவன் நோய்வாய்ப்படும்போது மருந்து வாங்கியே அழிந்துவிடுகின்றன. அதனால்தான் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்கிறது தமிழ் நீதி. நீதி நூல்களில் காணப்படும், உடல்நலம் குறித்த கருத்துக்கள் குறித்தும் இந்த நூல் தொகுத்தும், பகுத்தும் பேசுகிறது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், அற நூல்கள், அறநெறிச்சாரம், ஆத்திசூடி, சதகங்கள் ஆகிய இலக்கியங்கள் இதற்கு ஆய்வுக் களங்களாக விளங்குகின்றன. உடலும் உயிரும், மருந்து, சினம், கள்ளும் […]

Read more