நல்லவற்றையே நாடுங்கள்

நல்லவற்றையே நாடுங்கள், மு.முகம்மது சலாகுதீன், பஷாரத் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 80ரூ.

நெல்லை ஏர்வாடியைச் சேர்ந்த இந்நூலாசிரியர், நல்ல எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் மிக்கவர். இவர் தமிழகத்தின் மிகப் பெரும் நாளிதழான ‘தினத்தந்தி’ வெள்ளி மலரில் அவ்வப்போது எழுதிய மதநல்லிணக்கம் மற்றும் சமயரீதியிலான கட்டுரைகளில் சிறப்பானவற்றின் தொகுப்பே இந்நூல்.

இக்கட்டுரைகள் ஜாதி – மத வேறுபாடின்றி பலராலும் படித்து பாராட்டப்பட்டவை. மனிதன் எத்தகைய குணநலன்களோடு – எப்படி வாழ்வது, அது சமுதாயத்திற்கும், சமயத்திற்கும் எப்படி ஏற்றது என்பன போன்றவற்றை குர் – ஆன் மற்றும் ஹதீஸ்களின் அடிப்படையில் பாமர மக்களும் படித்துணரும் வகையில் எளிய முறையில் விளக்கியுள்ளார்.

‘தவிர்க்கப்பட வேண்டிய தற்பெருமை’ என்ற கட்டுரையில், தற்பெருமை இரட்டைத்தன்மை கொண்டது. ஒன்று – வெளிப்படையாக பெருமை பேசித் திரிவது. இரண்டு – தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு, ஒருவித அடக்கத்தை வெளிக்காட்டுவது. இவ்விரண்டுமே புகழுக்கு ஆசைப்பட்டு செய்வதாகும். ‘இறைவனின் பொருத்தத்திற்காக மட்டுமே’ என்ற எண்ணத்தில் செய்ய வேண்டும் என்கிற கருத்தை, குர்ஆன் மற்றும் நபிகளின் பொன் மொழிகளைக் கொண்டு மிக அழகாக விளக்கியுள்ளார்.

இப்படி இந்நூலில் கைவிட வேண்டிய பொறாமை, நல்லவற்றையே நாடுங்கள், பிரார்த்தனையின் பலன்கள், பொறுமை தரும் பேரின்பம், பகைவர்களையும் நண்பர்களாக்குங்கள், மனம் னவர்ந்த மாநபி… என்று 35 அருமையான கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. அனைத்துத் தரப்பு மக்களும் படித்துணர வேண்டிய கருத்துக்கள் நிறைந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 21/2/2018.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026794.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published.