மனிதன் புரியாத புதிர்

மனிதன் புரியாத புதிர்(Man The Unknown), அலெக்சிஸ் காரெல், முல்லை பதிப்பகம், பக். 416, விலை 250ரூ.

ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இந்நூலாசிரியர் முதல் உலகப் போரின்போது (1914-19) ராணுவ சிறப்பு மருத்துவராக அரிய சேவை புரிந்து அமெரிக்கா, பிரிட்டிஷ் போன்ற அரசுகளால் கௌரவிக்கப்பட்டு ‘நோபல்’ பரிசும் பெற்றவர். இந்நூல் மருத்துவத்தையும், மனிதனையும் விஞ்ஞானக் கண்ணோடு ஆராய்ச்சி செய்து எழுதியது.

1935ல் ஆங்கிலத்தில் வெளியான இந்நூல், உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டு, பல பதிப்புகளைக் கண்டது. நமது முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல்கலாம் அவர்களுக்கு மிகவும் பிடித்த நான்கு புத்தகங்களில், இது முதல் இடத்தைப் பிடித்த புத்தகம்.

1957லேயே இந்நூல் அ.நடராசன் அவர்களால் எளிய தமிழ்நடையில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. இந்நூலை உடல், உள்ளம், அறிவு, பொருள் முதல் பலமானவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் பழகி, அவர்களை ஆராய்ச்சி செய்து எழுதிய நூல். குறிப்பாக மனிதன் என்பவன் உயிரா, உடலா, உள்ளமா அல்லது இவை அனைத்தும் கலந்த ஒன்றா? அவன் எங்கிருந்து எவ்வாறு தோன்றினான்? உடலிலிருந்து உயிர் பிரிந்தவுடன் என்ன நிகழ்கிறது? வாழ்க்கை என்பது என்ன? அதற்குக் குறிக்கோள் என்று ஏதாகிலும் உண்டா? மனிதனை நாம் முழுமையாக அறிந்து கொண்டு விட்டோமா… இப்படி ஆய்வு செய்திருக்கும் ஆசிரியர், மெஞ்ஞானி அல்ல. விஞ்ஞானியே!

தவிர, ஒவ்வொரு மருத்துவ மாணவரும் படித்துணர வேண்டிய நூல் இது. காரணம் ஒரு நோயைக் குணப்படுத்துவதில் உடல், மனம், இரண்டுக்குமே எப்படி சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்பதையும் கூட இந்நூல் விவரிக்கிறது’ என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சுட்டிக்காட்டி, இந்நூலை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000014580.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 11/4/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *