கணிதம் கற்பித்தேன்

கணிதம் கற்பித்தேன், டாக்டர் வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 264, விலை 170ரூ. ஆசிரியர் கல்வியாளர்களுக்குத் தமிழில் ஒரு மூல வளநூலாக அமைந்து, கணிதம் கற்பிப்பதில் ஒரு சிறந்த வழிகாட்டியாகப் பயன் தரும். இதை இன்றைய கல்வியியல் கல்லூரிகளில் பாட நூலாகப் பயன்படுத்தலாம் என்கிறார் இந்நூலாசிரியர். நன்றி: தினமலர், 6.8.2017.

Read more

தாராசுரம் ஐராவதீச்சுரம் சிற்பங்கள்

தாராசுரம் ஐராவதீச்சுரம் சிற்பங்கள், பேராசிரியர் முனைவர் ஜே.ஆர். இலட்சுமி, மதன் மோனிகா பதிப்பகம், பக். 228, விலை 150ரூ. பழையாறை மாநகரின் ஒரு பகுதிதான் இன்றைய தாராசுரம் என்னும் பேரூர். ஐராவதீச்சுரம் கோவிலில் இடம்பெற்றுள்ள, சிற்ப வடிவங்கள் பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்தை பின்பற்றியே அமைந்திருப்பதை படங்களுடன் விவரிக்கிறது. நன்றி: தினமலர், 6.8.2017.

Read more

ஜல்லிக்கட்டு (பாழ்படும் பாரம்பரியங்கள்)

ஜல்லிக்கட்டு (பாழ்படும் பாரம்பரியங்கள்), குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 176, விலை 165ரூ. தமிழர்களின் பாரம்பரியமாகக் கருதப்படுகிறது ஜல்லிக்கட்டு. சங்க காலம் முதல் வழி வழியாக ‘ஏர் தழுவல்’ என்னும் மாட்டை அடக்கும் போட்டி தமிழர்களின் அடையாளமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு என்பது காளையோடு மல்யுத்தம் என்பதாகப் பலர் பார்க்கின்றனர். அது தவறு. மாறாக, காளையோடு ஓர் உற்சாக விளையாட்டு என்பதே நிஜம். உழவுத் தொழிலுக்கு அடிப்படை காளை மாடுகள். அத்தகைய காளைகளைப் போற்றி அவற்றோடு விளையாடி மகிழும் உன்னத் திருநாள் தான் ஜல்லிக்கட்டு. […]

Read more

ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி)

ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி), வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 420ரூ. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட “ஜி.எஸ்.டி.” வரி பற்றி முப விவரம் அறிந்தவர்கள் மிகச் சிலரே. ஜி.எஸ்.டி. பற்றி பொதுமக்களிடையே குழப்பங்களும், சந்தேகங்களும் நிலவி வருகின்றன. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் 501 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை “பொக்கிஷம்” என்ற தலைப்பில் தகவல் களஞ்சியங்களை வெளியிட்டு வரும் வடகரை செல்வராஜ் உருவாக்கியுள்ளார். “ஜி.எஸ்.டி.” பற்றிய சந்தேகங்களை போக்கும் வகையில் 700-க்கும் மேற்பட்ட கேள்வி – பதில்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி: […]

Read more

த மெனி கேரியர்ஸ் ஆஃப் டி.டி. கோசாம்பி கிரிடிகல் எஸ்ஸேஸ்

த மெனி கேரியர்ஸ் ஆஃப் டி.டி. கோசாம்பி கிரிடிகல் எஸ்ஸேஸ், தொகுப்பு டி.என்.ஜா., லெஃப்ட் வேர்ட், விலை 275ரூ. பன்முக மேதை டி.டி. கோசாம்பி தாமோதர் தர்மானந்த கோசாம்பி (டி.டி.கோசம்பி) கணிதப் பேராசிரியராக இருந்தபோதிலும், இந்திய வரலாறு, இந்தியவியல், மொழியியல், மதங்கள், சாதிகள், நாணயவியல், புள்ளியியல் எனப் பல்வேறு துறைகளிலும், இந்தியாவை மையமாகக் கொண்ட ஆய்வுகளை முன்வைத்துப் புதிய ஆய்வாளர்களையும் அறிஞர்களையும் உருவாக்கிய பேரறிஞர். அவரது தந்தை தர்மானந்த கோசாம்பி, இந்தியாவில் பாலி மொழி இலக்கியத்துக்கு உயிரூட்டியதோடு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் ஆசிரியர் பணியாற்றியவர். எண்ணற்ற […]

Read more

செவ்வி

செவ்வி, பேராசிரியர் தொ. பரமசிவன் நேர்காணல்கள், கலப்பை பதிப்பகம், விலை 130ரூ. ‘தமிழர்களுடைய மரபுவழி அறிவுத்தொகுதியினை உரையாடல் மரபிலும், அதன் உள்ளீடாக விளங்கும் பழமொழிகள், சொல் அடைகள், கதைகள், சடங்குகள் இவற்றின் வழியாகவே மீட்டெடுக்க முடியும்’ என்று சொல்லும் பேராசிரியர் தொ.பரமசிவனின் 11 நேர்காணல்கள் நூலாக்கம் பெற்றுள்ளன. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது மக்கள் விரோதச் சித்தாந்தம்’, ‘சாதிகள் உண்மையுமல்ல… பொய்யுமல்ல…’, ‘தொல்தமிழர்களின் சுற்றுச்சூழல் அறிவியல்’ என நேர்காணல்களின் தலைப்புகளே தொ.ப.-வின் கருத்துறுதியை நிரூபிக்கும் வகையில் உள்ளன. நன்றி: தி இந்து, 12/8/2017.

Read more

நடிகையர் திலகம் சாவித்திரி நிழலும் நிஜமும்

நடிகையர் திலகம் சாவித்திரி  நிழலும் நிஜமும், இருகூர் இளவரசன், தோழமை வெளியீடு, விலை 225ரூ. துயர நாயகி சாவித்திரி எவ்வளவு உயரத்தில் சினிமா ஒருவரைத் தூக்கி நிறுத்துகிறதோ அதைவிடப் பல மடங்கு கீழே தூக்கியும் எறிந்துவிடும். இதற்கு உதாரணம் சாவித்திரியின் வாழ்க்கை. திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்புத் திறமையால் நடிகையர் திலகமாக வாழ்ந்த சாவித்திரியை மக்களுக்குத் தெரியும். ஆனால், படத் தயாரிப்பாளராக, இயக்குநராக, நெருக்கடியான நேரத்தில் நடிகர் சுருளிராஜனுக்கு ரூ.30 ஆயிரம் கொடுத்து உதவியவராக, குழந்தைத்தனம் மிக்கவராக சாவித்திரியின் பன்முகங்களைக் காட்டியுள்ளார் ஆசிரியர். அன்றைய […]

Read more

டாக்ஸி டிரைவர்

டாக்ஸி டிரைவர், ஆனந்த் ராகவ், கிழக்கு பதிப்பகம், விலை 120ரூ. எழுத்தாளர் ஆனந்த் ராகவ் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பு. ஒரு சமூதாயத்தின் நேர்மை, கலாசாரம் எல்லாவற்றுக்கும் அளவுகோலே அந்தர ஊரின் வாடகை வண்டி ஓட்டுகிறவர்கள்தான் என்ற கருத்தில் அமைந்துள்ள ‘டாக்ஸி டிரைவர்’ , 75 வயது தந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, அவர் உயிர் பிழைத்து வரமாட்டாரா என்று ஏங்கும் மகனின் ஏக்கத்தை வெளிப்படும், ‘இரண்டாவது மரணம்’ உள்பட அனைத்துக் கதைகளும் அருமை. நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

ஜி.எஸ்.டி. ஓர் அறிமுகம்

ஜி.எஸ்.டி. ஓர் அறிமுகம், பாலாஜி பதிப்பகம், விலை 500ரூ. சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் எனப்படும் ஜி.எஸ்.டி. 1/7/17 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சரக்குக்கு இந்தியா முழுவதும் ஒரே வரிவிகிதம் தான். இன்னொரு மாநிலத்தில் வாங்கினால் வரி குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனால்தான் ஒரே தேசம் ஒரே வரி எனப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் தவிர எல்லா மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு இந்த வரி பொருந்தும். இந்தச் சட்டத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைச் செய்திகளை வணிகம் செய்வோர் அனைவருமே தெரிந்து […]

Read more

ஆன்மீகம் தெரிந்ததும் தெரியாததும் (இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்கள்)

ஆன்மீகம் தெரிந்ததும் தெரியாததும் (இந்து மத சாஸ்திர சம்பிரதாயங்கள்), டாக்டர் மா. ஷிவகுமார், அழகு பதிப்பகம், பக். 224, விலை 180ரூ. தென்னக ரயில்வேயில் இன்ஜீனியராக 33 ஆண்டுகள் பணியாற்றிய இந்நூலாசிரியர், ஜோதிடத் துறையிலும் 25 வருட அனுபவங்களைப் பெற்று, இது குறித்து பல பாடங்களையும் கற்று பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். ஜோதிடம் பார்க்க வருபவர்கள் தங்கள் மனதில் எழும் பல்வேறு சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இவர் அளித்துள்ள பதில்கள், கேட்பவர்களுக்குப் பெரும் திருப்தி அளித்துள்ளன. அவற்றின் தொகுப்பே, இந்நூல். சந்தேகங்களுக்கான விளக்கங்கள் அனைத்தும் […]

Read more
1 2 3 7