பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே

பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே, டாக்டர் வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. இன்றைய பேட்டி நிறைந்த உலகில் தங்கள் குழந்தைகளை கல்வி, கேள்வி, ஞானம் யாவற்றிலும் சிறந்தவர்களாக எப்படி வளர்ப்பது என்று தெரியாமல் பெற்றோர்கள் திணறுகிறார்கள். அவர்களுக்கு குழந்தை வளர்ப்பு, தேர்வுக்கு படிக்க வைப்பது எப்படி? நினைவாற்றலைப் பெருக்குவது எப்படி? என்பன போன்ற அனைத்துச் செய்திகளையும் சொல்கிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

கணிதம் கற்பித்தேன்

கணிதம் கற்பித்தேன், டாக்டர் வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 264, விலை 170ரூ. ஆசிரியர் கல்வியாளர்களுக்குத் தமிழில் ஒரு மூல வளநூலாக அமைந்து, கணிதம் கற்பிப்பதில் ஒரு சிறந்த வழிகாட்டியாகப் பயன் தரும். இதை இன்றைய கல்வியியல் கல்லூரிகளில் பாட நூலாகப் பயன்படுத்தலாம் என்கிறார் இந்நூலாசிரியர். நன்றி: தினமலர், 6.8.2017.

Read more

பொருளறிவியல் கற்பித்தல்

பொருளறிவியல் கற்பித்தல், டாக்டர் வி. நடராஜன், அ. பன்னீர்செல்வம், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 272, விலை 170ரூ. ஆறாம் பதிப்பைக் கண்டிருக்கும் இந்த நூல் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், 2016 – 2017ம் ஆண்டு வெளியிட்ட, பி.எட்., புதிய பாடத்திட்டத்தின்படி அமைந்திருக்கிறது. ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பொருள் அறிவியல் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பெரிதும் உதவும் நூல். –மயிலை கேசி. நன்றி: தினமலர், 2/7/2017.

Read more

பொருளறிவியல் கற்பித்தல்

பொருளறிவியல் கற்பித்தல், டாக்டர் அ. பன்னீர் செல்வம், டாக்டர் வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 272, விலை 170ரூ. பொருள் அறிவியல் என்றால் என்ன? அதன் குறிக்கோள், நோக்கம் யாது? அவை எவ்வாறு கற்பிக்கப்படவேண்டும்? என்பன போன்ற உள்ளடக்கங்களுடன் கூடிய நூல். பி.எட். கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் பயன்பெறும் வகையில் அதன் சிறப்புப் பேராசிரியர்களால் எழுதப்பட்ட முதல்நூல் இது. மாணவர்களை ஆசிரியர்களாக உருவாக்கும் பணியில் இந்நூல் சிறப்பிடம் பெறும். நன்றி: குமுதம், 26/4/2017.

Read more