பிள்ளைப்பருவமும் வளர்ச்சியும்

பிள்ளைப்பருவமும் வளர்ச்சியும், டாக்டர் வி.நடராஜ், சாந்தா பப்ளிஷர்ஸ், விலைரூ.250. உலகளவில் கற்றல், கற்பித்தலுக்காக, குழந்தைகளின் நலன் கருதி பலதரப்பட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. குழந்தைகளின் கற்றல் திறன் என்பது மொழித்திறன். அதன் கல்வி வளர்ச்சியும், சமூகத்தில் உயர்வுகளும் முக்கிய காரணிகளாகும். இந்த நுால், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தை தழுவி எழுதப்பட்டுள்ளது. குழந்தையின் வளர்ச்சி அதன் மேம்பாடு என துவங்கி, 10 தலைப்பின் கீழ் பல உட்தலைப்புகளை கொண்டு முழுமையான கற்றலுக்கான நுாலாக அமைந்துள்ளது. மொழி வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கும் முக்கியத்துவம் […]

Read more

கல்வி ஏற்பாட்டில் மொழி

கல்வி ஏற்பாட்டில் மொழி,  பி.இரத்தினசபாபதி, சாந்தா பப்ளிஷர்ஸ், பக்.280, விலை ரூ.180. மொழியும் சமுதாயமும் வகுப்பறையில் மொழிப் பன்முகம் வகுப்பறை கற்பிப்பில் தாய்மொழி பெறுமிடம் கல்வி ஏற்பாட்டில் மொழி மொழிசார்ந்த எதிர்கோள்கள் ஆகிய தலைப்புகளில் கல்வி கற்பிப்பதில் மொழியின் பங்கு குறித்துப் பேசும் நூல். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட பி.எட் பாடத்திட்டத்தின்படி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப கற்பிக்கும் முறைகளில் மாற்றங்கள் வேண்டும். பல்வேறு தன்மைகளுள்ள சூழலில் அனைத்து மொழிகளுக்கும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டும். தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது. […]

Read more

கல்வி ஏற்பாட்டில் மொழி

கல்வி ஏற்பாட்டில் மொழி, பி.இரத்தினசபாபதி, சாந்தா பப்ளிஷர்ஸ், பக்.280, விலை ரூ.180 மொழியும் சமுதாயமும் வகுப்பறையில் மொழிப் பன்முகம் வகுப்பறை கற்பிப்பில் தாய்மொழி பெறுமிடம் கல்வி ஏற்பாட்டில் மொழி மொழிசார்ந்த எதிர்கோள்கள் ஆகிய தலைப்புகளில் கல்வி கற்பிப்பதில் மொழியின் பங்கு குறித்துப் பேசும் நூல். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட பி.எட் பாடத்திட்டத்தின்படி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கேற்ப கற்பிக்கும் முறைகளில் மாற்றங்கள் வேண்டும். பல்வேறு தன்மைகளுள்ள சூழலில் அனைத்து மொழிகளுக்கும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டும். தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது. […]

Read more

மறக்கமுடியாத மாபெருந்தலைவர்

மறக்கமுடியாத மாபெருந்தலைவர், திருவாரூர் இரா. தியாகராஜன்(சின்ன குத்தூசி), சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 90ரூ. கர்மவீரர் காமராஜருடனான அனுபவ நிகழ்வுகளை பிரபலங்கள் பலரிடம் கேட்டு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. காமராஜரின் கண்ணியம், உதார குணத்திற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு இந்தப் புத்தகம். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

வட இந்திய வரலாறு

வட இந்திய வரலாறு, இர.ஆலால சுந்தரம், சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 400ரூ. இந்தியாவின் வடக்கே, ஹர்ஷரின் ஆட்சிக்காலத்துக்குப் பின் நடந்த இந்து மன்னர்களின் ஆட்சிக் கால வரலாறும், கஜினி முகமது தொடங்கி குத்புதீன் ஐபக் வரையிலான முஸ்லிம் அரசர்களின் வரலாறும் முழுமையாகச் சொல்லப்பட்டிருக்கும் நூல். மத்திய மாநில போட்டித் தேர்வுகளுக்கான பாடநூல் என்று குறிப்பிட்டிருப்பது முற்றிலும் பொருந்தும். நன்றி: குமுதம், 21/3/2018.

Read more

பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே

பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே, டாக்டர் வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. இன்றைய பேட்டி நிறைந்த உலகில் தங்கள் குழந்தைகளை கல்வி, கேள்வி, ஞானம் யாவற்றிலும் சிறந்தவர்களாக எப்படி வளர்ப்பது என்று தெரியாமல் பெற்றோர்கள் திணறுகிறார்கள். அவர்களுக்கு குழந்தை வளர்ப்பு, தேர்வுக்கு படிக்க வைப்பது எப்படி? நினைவாற்றலைப் பெருக்குவது எப்படி? என்பன போன்ற அனைத்துச் செய்திகளையும் சொல்கிறது இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 16/8/2017.

Read more

கணிதம் கற்பித்தேன்

கணிதம் கற்பித்தேன், டாக்டர் வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 264, விலை 170ரூ. ஆசிரியர் கல்வியாளர்களுக்குத் தமிழில் ஒரு மூல வளநூலாக அமைந்து, கணிதம் கற்பிப்பதில் ஒரு சிறந்த வழிகாட்டியாகப் பயன் தரும். இதை இன்றைய கல்வியியல் கல்லூரிகளில் பாட நூலாகப் பயன்படுத்தலாம் என்கிறார் இந்நூலாசிரியர். நன்றி: தினமலர், 6.8.2017.

Read more

பொருளறிவியல் கற்பித்தல்

பொருளறிவியல் கற்பித்தல், டாக்டர் வி. நடராஜன், அ. பன்னீர்செல்வம், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 272, விலை 170ரூ. ஆறாம் பதிப்பைக் கண்டிருக்கும் இந்த நூல் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், 2016 – 2017ம் ஆண்டு வெளியிட்ட, பி.எட்., புதிய பாடத்திட்டத்தின்படி அமைந்திருக்கிறது. ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பொருள் அறிவியல் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பெரிதும் உதவும் நூல். –மயிலை கேசி. நன்றி: தினமலர், 2/7/2017.

Read more

இணைந்த கல்வி உருவாக்கம்

இணைந்த கல்வி உருவாக்கம், டாக்டர் கி.உமா மகேஸ்வரி, சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 160, விலை 100ரூ. அனைவருக்கும் தொடக்கக் கல்வி, அனைவருக்கும் உயர்நிலைக் கல்வி, அனைவருக்கும் உயர்கல்வி என்னும் எழுச்சிமிக்க வாசகங்கள், இந்த 21ம் நூற்றாண்டில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கல்விச் சிந்தனைகளும், கோட்பாடுகளும் ஆங்கிலத்தில் இருப்பதால், அனைவருக்கும் அது எளிதில் சென்று சேராமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அவரவர் தாய் மொழியில், கல்விச் சிந்தனை பரவ வேண்டும் என்னும் உயர் நோக்கத்தில் தமிழில் உருவாக்கப்பட்டு உள்ளது இந்நூல். செவித்திறன், பேச்சுத் திறன், […]

Read more

இக்கால இந்தியா மற்றும் கல்வி

இக்கால இந்தியா மற்றும் கல்வி,  வி.நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக்.190, விலைரூ.120. பி.எட். பட்டப்படிப்புக்கான பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இன்றைய இந்திய கல்வி பற்றி எழுதப்பட்டுள்ள நூல். பல்வேறு இனம், மொழி, நிலப்பரப்பு, பொருளாதார, கலாசார வாழ்க்கைகள் கொண்ட பன்முகத்தன்மை உள்ள ஒரு நாட்டில், பலதரப்பட்ட மக்களுக்கும் ஒரே விதமான கல்வியைக் கொடுப்பதில் உள்ள சிக்கல்களை நூல் ஆராய்கிறது. பள்ளிக்கூடத்தில் சேர்ந்த குழந்தைகள் இடையிலேயே படிப்பை நிறுத்திவிடுவது, அல்லது அடுத்த வகுப்புக்குப் போக முடியாமல் தேர்வில் தோல்வியடைந்து தேங்கிவிடுவது, பெண் குழந்தைகளைப் படிக்க வைப்பதில் உள்ள […]

Read more
1 2 3