பொருளறிவியல் கற்பித்தல்

பொருளறிவியல் கற்பித்தல், டாக்டர் அ. பன்னீர் செல்வம், டாக்டர் வி. நடராஜன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 272, விலை 170ரூ. பொருள் அறிவியல் என்றால் என்ன? அதன் குறிக்கோள், நோக்கம் யாது? அவை எவ்வாறு கற்பிக்கப்படவேண்டும்? என்பன போன்ற உள்ளடக்கங்களுடன் கூடிய நூல். பி.எட். கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் பயன்பெறும் வகையில் அதன் சிறப்புப் பேராசிரியர்களால் எழுதப்பட்ட முதல்நூல் இது. மாணவர்களை ஆசிரியர்களாக உருவாக்கும் பணியில் இந்நூல் சிறப்பிடம் பெறும். நன்றி: குமுதம், 26/4/2017.

Read more

கூடிவாழ்வோம்

கூடிவாழ்வோம், கண்ணன் கிருஷ்ணன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 223, விலை 150ரூ. ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை ‘கலைக்கூடம்’ என்ற மூன்று பத்துமாடிக் கட்டிடங்களில் வசிக்கும் ஃபிளாட் வாசிகளை வைத்து சொல்லியிருப்பது புதிய உத்தி. ‘காவியம்’, ‘ஓவியம்’, ‘இலக்கியம்’ என்ற பெயர் கொண்ட அந்த குடியிருப்பு மனிதர்கள் கண்ணப்பன் முதல் பேத்தி தேவிகா, சாந்தா அம்மாள், சோமசுந்தரம், தாமரை, பார்வதி, ஆறுமுகம், சண்முகநாதன், குற்றாலிங்கம் என்று அத்தனை பேரும் நம் அக்கம் பக்கம் வாழும் நிஜ மனிதர்களின் வார்ப்புகள். ‘கலைக் கூடத்தை’ நிர்வகிப்பதில் எழும் […]

Read more

தமிழ் கற்பித்தல் முறைகள் – 1

தமிழ் கற்பித்தல் முறைகள் – 1, சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 250ரூ. 2015-16 கல்வி ஆண்டில் இருந்து பி.எட். படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டது. புதிய பாடத்திட்டத்தின் படி முதல் ஆண்டின் கற்பித்தல் பாடங்களுள்ளு ஒன்று ‘தமிழ் கற்பித்தல் முறைகள்- 1’ ஆகும். இது தொடர்பாக பல புதிய கருத்துகளை டாக்டர் பி.ரத்தினசபாபதி, டாக்டர் கு. விஜயா ஆகியோர் இந்த நூலில் முழுமையாக விளக்கியுள்ளனர். நன்றி: தினத்தந்தி, 4/1/2017.   —-   சீனா, ஒரு முடிவுறாத போர், அலைகள் வெளியீடு, விலை 150ரூ. […]

Read more

கலைவாணி டீச்சர்

கலைவாணி டீச்சர், திருவாரூர் பாபு, சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 200ரூ. பல்வேறு பத்திரிகைகளில் வெளியான கலைவாணி டீச்சர் உள்ளிட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இந்த நூலை எழுதியுள்ள திருவாரூர் பாபு, மிகச் சிறந்த சிறுகதை ஆசிரியர் என்பதை ஒவ்வொரு கதையைப் படித்து முடித்தபோதும் உணர முடிகிறது. கதாபாத்திரங்கள் நம்மோடு பேசுகின்றன. நெடுநேரம் அந்த கதாபாத்திரங்கள் நம் நெஞ்சை விட்டகலாமல் உயிர் பெற்று உலா வருகின்றன. புத்தக வடிவமைப்பு பிரமாதம். நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —- சென்னை வானொலிப் பொழிவுகள், ஏகம் பதிப்பகம், விலை 30ரூ. […]

Read more

நவரத்தினங்கள்

நவரத்தினங்கள், லில்லி சகாதேவன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 128, விலை 80ரூ. இன்றைய கல்வி முறை குறித்த அனைவரது எண்ணங்களையும் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் பதிவு செய்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 2/10/2016   —-   மனசுக்கு ஒரு செக்போஸ்ட், க. கார்த்திகேயன், ஜி. சிவராமன், நர்மதா பதிப்பகம், பக். 144, விலை 70ரூ. லட்சியம், உழைப்பு, அதற்கு தேர்ந்த முறை, அவை அழைத்துச் செல்லும் வாழ்விற்கு இந்த செக்போஸ்ட் தடையல்ல வழிகாட்டி. நன்றி: தினமலர், 2/10/2016

Read more

நல்லவங்க அரசியலுக்கு வாங்க

நல்லவங்க அரசியலுக்கு வாங்க, முனைவர் எஸ். வெங்கடராஜலு, சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 160, விலை 75ரூ. சமகால அரசியல் வரலாற்றை விளக்குவதும் பாமர மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகிய இரண்டு நோக்கம் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. தன்னலமற்ற தொண்டாற்றி அரசியலில் நேர்மையுடன் வாழ்ந்த தமிழகத் தலைவர்களின் பொது வாழ்க்கை வழி சமகால அரசியல் அலசப்பட்டுள்ளது. அடுத்தாக, நாட்டில் நல்லாட்சி நிலவ ஊடகங்களின் பங்கு எத்தகையது என்று விளக்கப்பட்டுள்ளது. அரசியலில் ஈடுபடுவோரின் தகுதிகள், பணிகள், தேவையான சீர்திருத்தங்கள் பற்றி எடுத்துரைப்பது நாட்டிற்கு நன்மை சேர்ப்பதாக உள்ளது. […]

Read more

நல்லவங்க அரசியலுக்கு வாங்க

நல்லவங்க அரசியலுக்கு வாங்க, முனைவர் எஸ். வெங்கடராஜலு, சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 160, விலை 75ரூ. வரலாற்றுப் பேராசிரியரும், மாவீரன் நேதாஜி கல்வி நிறுவனங்களின் தலைவருமான இந்நூலாசிரியர், நல்லவர்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நோக்கில் இந்நூலை உருவாக்கியுள்ளார். இன்றைய அரசியலில் சுயநலம், சந்தர்ப்பவாதம், ஊழல், வன்முறை போன்றவை தலைவிரித்தாடும் நிலையில், நல்லவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டால் நாடு பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாவதோடு, சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகிவிடும் என்று கூறும் ஆசிரியர், நல்ல தலைமைக்கு எடுத்துக்காட்டாக நான்கு தலைவர்களைப் […]

Read more

நல்லவங்க அரசியலுக்கு வாங்க

நல்லவங்க அரசியலுக்கு வாங்க, சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 75ரூ. இந்நூலில் இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய லட்சியத் தலைவர்களாக பெருந்தலைவர் காமராஜர், உத்தமர் கக்கன், தோழர் ஜீவானந்தம், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரின் பொது வாழ்க்கை வரலாறு சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் தூய்மையான அரசியல் மூலம் நல்லாட்சி ஏற்பட தேவையான நீதித்துறை, காவல்துறை மற்றும் கல்வித்துறை சீர்திருத்தங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உடனடி தேவைகளாக ஊழலற்ற நிர்வாகம், தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு மற்றும் நதிகள் இணைப்பு […]

Read more

வடலிமரம்

வடலிமரம், ஐரேனிபுரம் பால்ராசய்யா, முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், பக். 124, விலை 80ரூ. பனைமரத்தின் விடலைப் பருவத்தை வடலிமரம் எனக்கூறுவது உண்டு. அதே விடலைப் பருவத்தை ஒத்த இருவரின் காதலில், அந்த மரத்தையும் காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். சாதியைக் காரணம் காட்டி காதலைப் பிரிக்கிறார் கதை நாயகனின் தந்தை. இதனால் மதுவுக்கு அடிமையாகும் நாயகனை நல்வழிப்படுத்தும் முயற்சியாக காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். கர்ப்பமுற்ற நிலையில் நாயகி காதலனை ஏற்கிறாளா அல்லது மறுக்கிறாளா என்பதை திரைப்பட பாணியில் காட்சியாக எழுதியுள்ளார் நூலாசிரியர். இடையிடையே காதலை, கவிதையாக தர […]

Read more

நான் கண்ட ஜப்பான்

நான் கண்ட ஜப்பான், சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 90ரூ. இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பான் மீது 2 குண்டுகளை அமெரிக்கா வீசியது. அதனால் 2 நகரங்கள் அடியோடு அழிந்தன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். லட்சக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். இப்படி பலத்த சேதம் அடைந்த ஜப்பான் கடுமையாக உழைத்து, இன்று பொருளாதாரத்தில் உலகில் மிக முன்னேறிய நாடாக விளங்குகிறது. இந்த நூலின் ஆசிரியரான தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் எத்திராஜன் ராதாகிருஷ்ணன், 23 முறை ஜப்பான் சென்று திரும்பியவர். ஜப்பானின் சிறப்புகளை இந்நூலில் அழகிய […]

Read more
1 2 3