வடலிமரம்
வடலிமரம், ஐரேனிபுரம் பால்ராசய்யா, முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், பக். 124, விலை 80ரூ.
பனைமரத்தின் விடலைப் பருவத்தை வடலிமரம் எனக்கூறுவது உண்டு. அதே விடலைப் பருவத்தை ஒத்த இருவரின் காதலில், அந்த மரத்தையும் காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். சாதியைக் காரணம் காட்டி காதலைப் பிரிக்கிறார் கதை நாயகனின் தந்தை. இதனால் மதுவுக்கு அடிமையாகும் நாயகனை நல்வழிப்படுத்தும் முயற்சியாக காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். கர்ப்பமுற்ற நிலையில் நாயகி காதலனை ஏற்கிறாளா அல்லது மறுக்கிறாளா என்பதை திரைப்பட பாணியில் காட்சியாக எழுதியுள்ளார் நூலாசிரியர். இடையிடையே காதலை, கவிதையாக தர முற்பட்டுள்ளார். கதையின் சம்பவம் குமரி மாவட்ட எல்லையோரக் கிராமத்தில் நடைபெறுவதுபோல் எழுதப்பட்டுள்ளது. ஆங்காங்கே மலையாளம் கலந்த வட்டாரத் தமிழ் மணக்கிறது. பல்வேறு இதழ்களில் ஒரு பக்க கதை எழுதிய அனுபவத்தில், முதன் முதலாக ஒரு நாவலை எழுதியுள்ளார் நூலாசிரியர். நன்றி:தினமணி, 13/7/2015.
—-
உடற்கல்வி மற்றும் உடல்நலக் கல்வி, சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 80ரூ.
உடற்பயிற்சியின் வகைகளையும், அவற்றை செய்யும் முறைகளையும் தெளிவாக – எளிமையாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் முனைவர் செ. ஜெயந்தி மெல்பா பிரேம்குமாரி. நன்றி: தினத்தந்தி, 15/7/2015.