கொடிய கரோனா ஓர் அலசல்

கொடிய கரோனா ஓர் அலசல், மேஜர் ஜெப ராஜ், முதற்சங்கு பதிப்பகம், விலை 120 ரூ. கரோனா ஏற்படுத்திய தாக்கம், அந்த நோயை தடுக்கும் முறைகள் ஆகியவற்றுடன் குறைந்த காலத்தில் மத்திய அரசு, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள், நோயினால் தாக்கப்பட்ட அவர்களுக்கு உதவிய மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ஆகியோரின் அர்ப்பணிப்புகள் அனைத்தும் இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 28/11/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கடல் மரங்கள்

கடல் மரங்கள், ஆர்.முத்துமணி, முதற்சங்கு பதிப்பகம், பக். 88, விலை 70ரூ. பத்து மலையாள கதைகள் எளிய நடையில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மொழி வேற்றுமையோ, நாடு பேதமோ கதைகளுக்கு இல்லை என்ற நம்பிக்கையை இந்நூல் உணர்த்துகிறது. நன்றி: தினமலர், 2/7/2017.

Read more

கடல் மரங்கள்

கடல் மரங்கள், மலையாளத்தில் வெள்ளியோடன், தமிழில்: ஆர்.முத்துமணி, முதற்சங்கு பதிப்பகம், பக்.88, விலை ரூ.70. ஈழவிடுதலைப் போராட்டத்தில் சிங்களர்களையும், மலாய்க்காரர்களையும் நம்பியிருக்கலாமே? எல்லாரையும் இணைத்துக் கொண்டு போராடியிருக்கலாமே? வியட்நாம் எல்லைப்புறப் பகுதியில் உள்ள கு ஆங் ஷி பகுதியைச் சீனா வலுக்கட்டாயமாகத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போது சிக்கிமையும், அருணாசல் பிரதேசத்தையும் இணைக்க வேண்டும் என்று கேட்பதைப் போல. இஸ்ரேலியர்கள் இஸ்லாமியர்களைக் கொன்று குவிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இஸ்லாமியர்களை அதிக அளவில் கொன்று குவித்தவர்கள் இஸ்லாமியர்கள்தான். இன்னும் இவற்றைப் போல நிறைய அரசியல் விஷயங்கள் […]

Read more

இளம் குற்றவாளிகள் உருவாவது ஏன்?

இளம் குற்றவாளிகள் உருவாவது ஏன்?. முளங்குழி பா. இலாசர், முதற்சங்கு பதிப்பகம், பக். 160, விலை 120ரூ. திரைப்படத் தாக்கம், போதைப் பழக்கம், காதல் மயக்கம், அரசியல் அவலம், பெற்றோர் சுயநலம், ஆசிரியர்கள் செய்யும் தவறு ஆகியவையே இளம் குற்றவாளிகளை உருவாக்கும் காரணிகள் என்பதை தக்க ஆதாரத்துடன் அனுபவ ரீதியாக தரும் நூல். இளம் குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கும்முறை பலருக்கும் பலன் தரும். நன்றி: குமுதம், 10/8/2016.

Read more

குமரித் தமிழர் தொல்காப்பியர்

குமரித் தமிழர் தொல்காப்பியர், சி. ஞானாமிர்தம், முதற்சங்கு பதிப்பகம், விலை 100ரூ. அகத்தியம் முதல் இலக்கண நூல் இன்று அகப்படவில்லை. எனவே, தமிழின் முதல் இலக்கண நூலானது தொல்காப்பியம். அகத்தியரின், 12 மாணாக்கரில் தலைமை சான்றவர் தொல்காப்பியர். இவரது இடம், காலம் பற்றிய வரலாறு, ஆய்வுக்கு உரியதாகவே உள்ளது. மதுரையில், நிலந்தரு திருவின்பாண்டியன் அவையில், அதங்கோட்டு ஆசான் தலைமையில், ‘தொல்காப்பியர் அரங்கேற்றம் செய்தார். அதனால், ‘அதங்கோடு’ பகுதியில் வாழ்ந்தவர். ‘அதங்கோட்டு ஆசான்’ என்றும், ‘காப்பிக்காடு’ என்ற ஊரில், தொல்காப்பியர் பிறந்தார் என்றும் இந்த நூல் […]

Read more

நான் இந்து அல்ல

நான் இந்து அல்ல, சி.கே. மதிவாணன், மேன்மை வெளியீடு, விலை 100ரூ. அம்பேத்கரின் கருத்தாக்கங்களை இன்றைய சூழலில் அனுபவத்தில் ஆய்வு செய்யும் நூலாகும். நன்றி: தினத்தந்தி, 7.9.2016.   —- குமரித் தமிழன் தொல்காப்பியர், முதற்சங்கு பதிப்பகம், விலை 100ரூ. தொல்காப்பியர் பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூல், தொல்காப்பியர் குமரி மாவட்டத்தில்தான் தோன்றினார். அதுவும் காப்பிக் காட்டில்தான் தோன்றினார் என உறுதிபடக் கூறுகிறார் நூலாசிரியர் புலவர் சி. ஞானாமிர்தம். நன்றி: தினத்தந்தி, 7.9.2016.

Read more

காவிரி நாடன் காதலி

காவிரி நாடன் காதலி, கன்னரதேவன், முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், விலை 300ரூ. இந்த சரித்திர நாவலை எழுதி முடிக்க எனக்கு 35 ஆண்டுகள் பிடித்தன என்கிறார் நூலாசிரியர் தமிழுலகன். ஆதித்த சோழர் வரலாற்றையும், கன்னரதேவன் வரலாற்றையும் அடிப்படையாக வைத்து இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. ஏராளமான கதாபாத்திரங்கள். எனினும் கதையை குழப்பம் இன்றி விறுவிறுப்பாக எழுதியுள்ளார். தமிழ் உணர்வைத் தூண்டும் நாவல். நன்றி: தினத்தந்தி, 23/9/2015.   —- கற்றபின் நிற்க, கவிமுரசு வா.மு.சே. திருவள்ளுவர், தமிழ்மணி புத்தகப்பண்ணை, விலை 200ரூ. நம் மொழியில் இல்லாத நற்சிந்தனைகள் […]

Read more

வடலிமரம்

வடலிமரம், ஐரேனிபுரம் பால்ராசய்யா, முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், பக். 124, விலை 80ரூ. பனைமரத்தின் விடலைப் பருவத்தை வடலிமரம் எனக்கூறுவது உண்டு. அதே விடலைப் பருவத்தை ஒத்த இருவரின் காதலில், அந்த மரத்தையும் காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். சாதியைக் காரணம் காட்டி காதலைப் பிரிக்கிறார் கதை நாயகனின் தந்தை. இதனால் மதுவுக்கு அடிமையாகும் நாயகனை நல்வழிப்படுத்தும் முயற்சியாக காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறார். கர்ப்பமுற்ற நிலையில் நாயகி காதலனை ஏற்கிறாளா அல்லது மறுக்கிறாளா என்பதை திரைப்பட பாணியில் காட்சியாக எழுதியுள்ளார் நூலாசிரியர். இடையிடையே காதலை, கவிதையாக தர […]

Read more

வடலிமரம்

வடலிமரம், ஐரேனிபுரம் பால்ராசய்யா, முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோவில், பக். 124, விலை 80ரூ. இலக்கியவாதிகளான தகழி, கேசவ, தேவ், வைக்கம் முகம்மது பஷீர் ஆகியோரின் நாவல்களைப் படித்தபோது அடைந்த இலக்கிய இன்பத்தை, இந்த நாவலைப் படித்த போதும் அடைந்தேன். பள்ளிப் பருவத்திலேயே காதலிக்க துவங்குகின்றனர் கதாநாயகன் அனந்தகிருஷ்ணனும், கதாநாயகி சொர்ணாவும். அனந்தகிருஷ்ணனின் தந்தை காதலுக்கு எதிராக நிற்கிறார். ஜாதி ஆதிக்கமும், பண ஆதிக்கமும் காதலர் பாதையில் குறுக்கிடுகின்றன. பள்ளிப் பருவத்திலேயே ஊரை விட்டுப் போய் வேற்றூரில் கல்யாணம் செய்து வாழ்க்கை நடத்துகின்றனர். அங்கும் வந்து […]

Read more

வடலிமரம்

வடலிமரம், முதற்சங்கு பதிப்பகம், நாகர்கோயில், பக். 124, விலை 80ரூ. விடலைப் பருவத்தில் வரும் காதல், உடல் சம்பந்தப்பட்ட கவர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் இதில் வரும் அனந்தகிருஷ்ணன் சொர்ணா காதல் கவர்ச்சியைத் தாண்டிய காதலாக நம்முன் நிற்கிறது. பனைமரத்தில் வடலி மரம் என்பது விடலைப் பருவத்தைப் போன்றது. அந்தப் பருவத்தில் பனைமரத்தில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி யதார்த்தமானதாய் இருக்குமோ, அதைப்போலவே இவர்கள் காதலும், காதலைத் தாண்டிய நிஜவாழ்வும், சாதி ஆதிக்கமும், பண அதிகாரமும் அதற்கு எப்படியான எதிர்ப்பைக் காட்டும் என்பதும் நாவலில் தெளிவாகப் பதிவாகியுள்ளன. […]

Read more