புனிதம் தேடும் புதினம்

புனிதம் தேடும் புதினம், கவுதமன் நீல்ராஜ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலைரூ.70. திருநங்கையரின் காதல் பற்றிய புரிதலையும், உணர்வுகளையும் வெளிக்காட்டுகிறது இந்நாவல். காதலுடன் பெற்றோரைத் தொலைத்த சோகம், வருத்தம், தனிமை, வேலைக்குச் செல்லும் இயல்பு, இயலாமை என அனைத்துப் பக்கங்களையும் எடுத்துரைத்துள்ளார். செங்கோடனாகப் பிறந்து சிறுநகையாகமாறிய திருநங்கையைக் கடைசியில் அவரது பெற்றோர் ஏற்கச் செய்வது நம்மை நெகிழச் செய்கிறது. இனிய துாய தமிழ் நடையைக் கையாண்டும் புனிதப்படுத்திக் கொண்டுள்ளது. திருநங்கையருக்கும் மனம் உண்டு, உணர்வுகள் உண்டு, காதல் உண்டு என மெல்லிய நுாலிழையில் கோர்த்து […]

Read more

உலகமயச்சூழலில் கற்றல் கற்பித்தலும் கலைச்சொல்லாக்கச் சிக்கல்களும்

உலகமயச்சூழலில் கற்றல் கற்பித்தலும் கலைச்சொல்லாக்கச் சிக்கல்களும், இரா.பன்னிருகை வடிவேலன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலைரூ.330 இன்றைய உலகமயச் சூழலில் கற்றலும், கற்பித்தலும் எவ்வாறு மாறிவருகிறது; வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றங்களுக்கு ஏற்ப கலைச்சொற்களின் உருவாக்கம் எவ்வாறு நிகழ்ந்து வருகிறது; அக்கலைச் சொல்லாக்கத்தில் எழும் சிக்கல்கள் என்னென்ன என்பதைப் பொருண்மையாகக் கொண்டு எழுதப்பட்ட, 52 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். கற்றல் கற்பித்தலில் இன்று நாம் மேற்கொள்ள வேண்டியவை என்னென்ன? சிக்கல்கள் என்னென்ன? இன்று கற்றல், கற்பித்தல் எவ்வாறு மாறிவருகிறது? எனப் பல புதிய பரிணாமங்களைக் […]

Read more

கன்னித் தமிழும் கணினித் தமிகும்

கன்னித் தமிழும் கணினித் தமிகும், இரா.பன்னிரு கை வடிவேலன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக். 286, விலை 180ரூ. ‘என்று பிறந்தனள் இவள்?’ என அனைவரும் வியக்குமாறு விளங்கும் தமிழின் தொன்மை முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான ஒரு நீண்ட வரலாற்றுப் பாதையில் பயணிக்கிறது, இந்நுால். தனித்தனியான இருபத்து மூன்று கட்டுரைகளைக் கொண்டிருந்தாலும், மொழியின் வளர்ச்சிப் பாதையில் இவை அமைக்கப்பட்டுள்ளதால் தமிழின் இனிமை மிகுதிப்படுகிறது. தமிழின் சொல்வளத்தை அறியச் செய்யும் நிகண்டுகளில் இந்நுால் தொடங்குகிறது. நிகண்டுகளின் வரலாற்றையும் சிந்தாமணி நிகண்டு, ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு […]

Read more

தமிழியல் ஆய்வுகள் மரபும் புதுமையும்

தமிழியல் ஆய்வுகள் மரபும் புதுமையும், இரா.பன்னிருகை வடிவேலன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக். 357, விலை 230ரூ. சங்க இலக்கியம் தொடங்கி, இன்றைய காலம் வரையிலான தமிழின் இலக்கிய இலக்கணம் குறித்த பல கட்டுரைகளின் தொகுப்பே, இந்நுால். சங்க இலக்கியங்களில் ஆயர்கள், புள்ளினம், வாழ்வியல் எனப் பொதுவான கருத்துகளும், புறநானுாறு, குறுந்தொகை, குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து குறித்த தனித்த சிந்தனைகளும் கட்டுரைகளாக மலர்ந்துள்ளன. இவ்வாறே, திருக்குறள், சீவகசிந்தாமணி, நளவெண்பா, சித்தர்கள், சிற்றிலக்கியங்கள், நாவல், சிறுகதை, மொழியியல், நாட்டார் வழக்கு, மொழிப்பயன்பாடு என இன்றுவரையிலான பல்வேறு தலைப்புகளில் […]

Read more

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம், பேராசிரியர் இரா.மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 100ரூ. சொல்வேந்தராகப் பலரும் அறிந்த பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் பல்வேறு நிலையான ஆளுமைத் தன்மைகளை உள்ளங்கை நெல்லிக்கனியென விளக்கும் வகையில், அவரது படைப்புகளில் இருந்து பொருத்தமானவற்றைச் சேர்த்துக் கோத்து உருவாக்கப்பட்டிருக்கும் நூல். நன்றி: குமுதம், 3/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உரைவேந்தர் ஔவை துரைசாமி

உரைவேந்தர் ஔவை துரைசாமி, பேராசிரியர் நிர்மலா மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 100ரூ. ஓலைச் சுவடிகளில் உறங்கிய தமிழை தேடி எடுத்துத் தெsளிவுரை எழுதி, உரைநடையாக்கி உலகறியச் செய்த அக்காலத்து இலக்கியக் கர்த்தாக்களுள் தனித்திறன் பெற்று உரைவேந்தர் எனப் போற்றப்பட்ட ஔவை துரைசாமியின் உரைநயம் உரைக்கும் புத்தகம். சுவைத்துணர வேண்டிய தமிழ்ச்சுவை. நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம், பேராசிரியர் இரா.மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 100ரூ. சொல் மணக்க, பொருள் விளங்க உரைபல எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்த பத்மஸ்ரீ ஔவை நடராசன், சங்க இலக்கியம் முதல் கம்பர் வரை பலவற்றிலும் நயம் கண்டு கூறிய நல்லுரைகளின் தொகுப்பு. அவரது பன்முகம் குறித்த ஆய்வு நூலாக இருந்தாலும், தமிழை நேசிப்போரின் வாசிப்புக்கு ஏற்ற நூல். நன்றி: குமுதம், 13/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

இதழியல் மேலாண்மை

  இதழியல் மேலாண்மை (சி.பா.ஆதித்தனார்), கவிஞர் சுரா, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 90ரூ. இதழியல் துறையில் பெரும் புரட்சியை உண்டாக்கியவர், “தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார்”. பாமரர்களையும் படிக்க வைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றையும், சாதனைகளையும் எழில்மிகு நடையில், சுவைபட எழுதியுள்ளார் முனைவர் கவிஞர் சுரா. இளம் பத்திரிகையாளர்களுக்கு ஒரு வழிகாட்டி என்று சொல்லத்தக்க வகையில் நூலை கவிஞர் சுரா உருவாக்கி இருப்பது பாராட்டுக்குரியது. ஆதித்தனார் நிறுவிய ‘தினத்தந்தி’, 75 ஆண்டுகள் வெற்றி நடை போட்டு, பவள விழா கொண்டாடும் நேரத்தில் இப்புத்தகம் […]

Read more

கதைப்பாடல் சுவடித் திரட்டும் பதிப்பும்

கதைப்பாடல் சுவடித் திரட்டும் பதிப்பும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதல் தொகுதி விலை 210ரூ. இரண்டாம் தொகுதி 220ரூ, மூன்றாம் தொகுதி 240ரூ. கதைப்பாடல் என்பது கதைத் தழுவிய நிலையில் அமையும் பாடல் எனலாம். கதைப்பாடல் அதிகமாகக் கிடைப்பது தமிழகத்தில்தான். தமிழில் கதைப்பாடலை கதை, கும்மி, பாட்டு, போர், அம்மானை, காவியம், மாலை, குறம், தூது, மசக்கை, வெற்றி, சண்டை, ஏணிஏற்றம் எனும் பல பெயர்களில் வழங்கி வருகின்றன. கதைப்பாடலைப் பாமரரின் அறிவுச் சொத்து, புலமைக் காவியம், வாழ்வியற் கருவூலம், சமூகம் காட்டும் […]

Read more

சரசோதிமாலை எனும் காலக்கணிதம் (கி.பி. 1310)

சரசோதிமாலை எனும் காலக்கணிதம் (கி.பி. 1310), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, விலை 140ரூ. சரசோதிமாலையென்னும் இவ்வரிய சோதிடத்தின் ஒரு நிறை களஞ்சியம். ஒருவன், சாதாரணக் குடிமகனாயினும் மன்னனாயினும் அவனுக்கு இகம் பரம் ஆகிய இரண்டுக்கும் வேண்டப்படும் சோதிட நியதிகள் நிறைந்து விளங்குகின்றன. அதனால் எல்லார்க்கும் வேண்டப்படும் சோதிட விஷயங்கள் யாவும் பொதிந்துள்ளது இந்நூலின் சிறப்பு. சரசோதிமாலையின் பாடல்கள் பலவகை விருத்தப்பாக்கள் ஆனவை. அதனால், தமிழில் ஆற்றல் பெற்றவர்களே உரையின்றி இந்நூலை படித்து பயன்பெற முடியும். இக்காலத்தில் இதன் மூலத்தை மாத்திரம் படித்து எல்லோரும் […]

Read more
1 2