தமிழியல் ஆய்வுகள் மரபும் புதுமையும்

தமிழியல் ஆய்வுகள் மரபும் புதுமையும், இரா.பன்னிருகை வடிவேலன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக். 357, விலை 230ரூ. சங்க இலக்கியம் தொடங்கி, இன்றைய காலம் வரையிலான தமிழின் இலக்கிய இலக்கணம் குறித்த பல கட்டுரைகளின் தொகுப்பே, இந்நுால். சங்க இலக்கியங்களில் ஆயர்கள், புள்ளினம், வாழ்வியல் எனப் பொதுவான கருத்துகளும், புறநானுாறு, குறுந்தொகை, குறிஞ்சிப்பாட்டு, பதிற்றுப்பத்து குறித்த தனித்த சிந்தனைகளும் கட்டுரைகளாக மலர்ந்துள்ளன. இவ்வாறே, திருக்குறள், சீவகசிந்தாமணி, நளவெண்பா, சித்தர்கள், சிற்றிலக்கியங்கள், நாவல், சிறுகதை, மொழியியல், நாட்டார் வழக்கு, மொழிப்பயன்பாடு என இன்றுவரையிலான பல்வேறு தலைப்புகளில் […]

Read more

தமிழ்க் கணினியியல் பிரமாணங்கள்

தமிழ்க் கணினியியல் பிரமாணங்கள், இரா. பன்னிருகை வடிவேலன், நோக்கு பதிப்பகம், பக். 62, விலை 65ரூ. தமிழ் கணினியியலில் இதுவரை என்ன நடந்திருக்கிறது? 1980களிலிருந்து இன்றுவரை கணிசமான முயற்சிகள் நடந்து உள்ளன. அந்த முயற்சிகளை கோடிட்டுக்காட்டி, இன்னும் செய்யப்பட வேண்டியது நிறைய இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது, இரா. பன்னிருகைவடிவேலன் எழுதிய இந்த சிறிய கட்டுரைத் தொகுப்பு. தமிழில் கணினியியல் தொடர்பாக, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பலவற்றுக்கு, இந்த நூலில் உள்ள ஐந்து கட்டுரைகள் விடைகளைத் தரும். கணினியில் தமிழ், இடைமுகத் தமிழ் உள்ளீட்டு மென்பொருள்கள், திறவூற்றுத் […]

Read more

நோக்கு நூல்கள் மரபும் புதுமையும்

நோக்கு நூல்கள் மரபும் புதுமையும், இரா. பன்னிருகை வடிவேலன், தமிழாய்வு மன்றம், பக். 104, விலை 100ரூ. பழந்தமிழ் இலக்கிய, இலக்கண, நிகண்டு நூல்கள், அவை தொடர்பான ஆய்வுகள் போன்றவை தற்போது பெருமளவில் பதிப்பிக்கப்பட்டு வருகின்றன. இது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு உதவுகிறதோ இல்லையோ, பழந்தமிழ் நூல்கள் அழிந்துவிடாமல் அவற்றைப் புதுப்பொலிவுடன் பாதுகாக்கவும், அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லவும் உதவுகின்றன என்பது முற்றிலும் உண்மை. அந்த வரிசையில் பலரும் அறியாத ஐந்திணை மஞ்சிகன் சிறு நிகண்டு, நிரரர் நிகண்டு, சிந்தாமணி நிகண்டு ஆகிய நிகண்டு நூல்கள் […]

Read more

நோக்கு நூல்கள்-மரபும் புதுமையும்

நோக்கு நூல்கள்-மரபும் புதுமையும், இரா. பன்னிருகை வடிவேலன், தமிழாய்வு மன்றம், பக். 104, விலை 100ரூ. ஐந்து ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த நூலில், ஆங்கில ஆய்வுக் கட்டுரை ஒன்றும் உள்ளது. நோக்கு நூல்கள் என, நிகண்டுகளைச் சுட்டிக் காட்டும் இந்த நூல், நிகண்டுகளின் பழைமையையும், அகராதியியலின் புதுமையையும் ஆய்வு நோக்கில் வெளிப்படுத்துகிறது. ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு, நிரரர் நிகண்டு, சிந்தாமணி நிகண்டு எனும் மூன்று நிகண்டுகளை இந்த நூல் அறிமுகம் செய்கிறது. அகராதியியலின் எதிர்காலம் கணினிக்குள் அடங்கியிருக்கிறது எனும் உண்மையையும், கணினியில் நூலடைவு […]

Read more