பயன் தரும் பட்டிமன்றம்

பயன் தரும் பட்டிமன்றம், புலவர் கு.அனாதரட்சகன், மீனாட்சி பிரசுரம், பக். 304, விலை 300ரூ. பட்டிமன்ற நிகழ்ச்சி என்பது மற்ற நிகழ்ச்சிகளை விட அறிவார்ந்த நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல நூல்களைப் படித்து அறியக்கூடிய பல்வேறு கருத்துக்களை, தகவல்களை பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் அறிய முடிகிறது. தவிர, ஒரு விஷயத்தைப் பற்றிய நேர்மறை, எதிர்மறைக் கருத்துக்களையும், அவை குறித்த ஆதாரப்பூர்வமான புள்ளி விபரங்களையும் மனதில் ஆழமாகப் பதிய உக்கிரமாகவும், சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவையாகவும் எடுத்துரைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பட்டிமன்ற நிகழ்ச்சிகள், பெரியவர் முதல் சிறியவர் வரை […]

Read more

மகாத்மாவின் வாழ்வில் மணியான நிகழ்ச்சிகள்

மகாத்மாவின் வாழ்வில் மணியான நிகழ்ச்சிகள், வடுவூர் சிவ. முரளி, மீனாட்சி பிரசுரம், பக். 200, விலை 150ரூ. இந்நூலாசிரியர் பல்வேறு இதழ்களில் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதி வருபவர். இவரது ‘குறளமுதக் கதைகள்’ என்ற நூலை ஆய்வு செய்த ஒருவர், எம்.ஃ.பில். பட்டமும் பெற்றுள்ளார். இந்நூலில் காந்திஜியின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை அவரது ‘சத்திய சோதனை’ உள்பட பல நூல்களில் இருந்து திரட்டி தொகுத்துள்ளார். இந்நூலைப் படிக்கும்போது சிறுவயதில் காந்திஜி செய்த சேட்டைகள், குற்றங்கள், குறைகளையெல்லாம் படிக்கும் நமக்கு, இவரா பிறகு உலகம் […]

Read more

நோக்கு நூல்கள்-மரபும் புதுமையும்

நோக்கு நூல்கள்-மரபும் புதுமையும், இரா. பன்னிருகை வடிவேலன், தமிழாய்வு மன்றம், பக். 104, விலை 100ரூ. ஐந்து ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த நூலில், ஆங்கில ஆய்வுக் கட்டுரை ஒன்றும் உள்ளது. நோக்கு நூல்கள் என, நிகண்டுகளைச் சுட்டிக் காட்டும் இந்த நூல், நிகண்டுகளின் பழைமையையும், அகராதியியலின் புதுமையையும் ஆய்வு நோக்கில் வெளிப்படுத்துகிறது. ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு, நிரரர் நிகண்டு, சிந்தாமணி நிகண்டு எனும் மூன்று நிகண்டுகளை இந்த நூல் அறிமுகம் செய்கிறது. அகராதியியலின் எதிர்காலம் கணினிக்குள் அடங்கியிருக்கிறது எனும் உண்மையையும், கணினியில் நூலடைவு […]

Read more

சமூக வரலாற்றில் அரவாணிகள்

சமூக வரலாற்றில் அரவாணிகள், முகிலை ராஜபாண்டியன், முனைவர் கே.ஆர். லட்சுமி, முனைவர் கி. அய்யப்பன், முனைவர் கெ.ரவி, சி.ராமச்சந்திரன், விசாலாட்சி பதிப்பகம், கிழக்குத் தெரு, கடையம், நல்லாப்பாளையம் அஞ்சல், விழுப்புரம் மாவட்டம், விலை 300ரூ. அனுதினமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அடையும் அவமானங்கள், சொந்த குடும்பமே புறந்தள்ளும் அவலம் என இதற்கு மேலும் தாங்காது கசப்பு என்கிற நிலையில்தான் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், பெரும்பாலான அரவாணிகள். இவர்களின் வாழ்க்கையில் சமூகத்தின் அக்கறை எத்தகையதாக இருக்க வேண்டம் என்பதை 58 ஆய்வாளர்களின் பார்வையில் தந்திருப்பதே இந்த நூல். […]

Read more

அவனது நினைவுகள்

அவனது நினைவுகள், யூமா. வாசுகி, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை 100ரூ. ஒரு ஓட்டல் வாசலில் எச்சில் இலையை போடும் தொட்டியின் அருகே நாய்களுடன் சேர்ந்து எஞ்சிய சாப்பாட்டை சாப்பிட்டு வருகிறான் ஒரு ஆதரவற்ற சிறுவன். அவனுக்கு பெயரும் இல்லை. பெற்றோர் யார் என்று தெரியாது. சற்று வளர்ந்ததும் ரிக்க்ஷா ஓட்டிப் பிழைக்கும் அவன் ரிக்க்ஷாவில் பயணிக்கும் விபசாரிகளின் அறிமுகம் கிடைப்பதால் புரோக்கராக மாறுகிறான். அப்போது சில வியாபாரிகளின் பழக்கம் கிடைத்ததும் அவர்களுக்காக அடியாளாகவும் […]

Read more