நோக்கு நூல்கள்-மரபும் புதுமையும்
நோக்கு நூல்கள்-மரபும் புதுமையும், இரா. பன்னிருகை வடிவேலன், தமிழாய்வு மன்றம், பக். 104, விலை 100ரூ.
ஐந்து ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய இந்த நூலில், ஆங்கில ஆய்வுக் கட்டுரை ஒன்றும் உள்ளது. நோக்கு நூல்கள் என, நிகண்டுகளைச் சுட்டிக் காட்டும் இந்த நூல், நிகண்டுகளின் பழைமையையும், அகராதியியலின் புதுமையையும் ஆய்வு நோக்கில் வெளிப்படுத்துகிறது. ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு, நிரரர் நிகண்டு, சிந்தாமணி நிகண்டு எனும் மூன்று நிகண்டுகளை இந்த நூல் அறிமுகம் செய்கிறது. அகராதியியலின் எதிர்காலம் கணினிக்குள் அடங்கியிருக்கிறது எனும் உண்மையையும், கணினியில் நூலடைவு உருவாக்குவதையும், எளிய முறையில் நூலாசிரியர் விளக்கி உள்ளார். தமிழ் ஆய்வு உலகில், இது ஒரு புதுமை நோக்கு. நெல்லினை வேக வைத்து காய வைத்துக் குற்றிய அரிசிக்குப் புழுங்கல் எனவும், நெல்லினை வேக வைக்காமல் குற்றிய அரிசிக்குப் பச்சை எனவும், முளைகட்டி முளையாத ல்லரிசியை வந்தை எனவும், தவிடு நீக்காத அரிசியைக் கொழியல் எனவும் குறிப்பதைப் பதிவு செய்துள்ளார். -முகிலை ராசபாண்டியன். நன்றி: தினமலர், 26/10/2014.
—-
வெற்றிக்கு 1000 வழிகள், மீனாட்சி பிரசுரம், பழனி, விலை 80ரூ.
நம்பிக்கை அளிக்கும் 1000 பொன் மொழிகளை தொகுத்தளித்திருக்கிறார் சிவரஞ்சன். நன்றி: தினத்தந்தி, 22/10/2014.