புதிய ஆத்திசூடி கதைகள் 50

புதிய ஆத்திசூடி கதைகள் 50, வை.சங்கரலிங்கனார், நண்பர்கள் பதிப்பகம், விலைரூ.150 மகாகவி பாரதி எழுதிய புதிய ஆத்திசூடியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். 50 கதைகள் உள்ளன. புதிய ஆத்தி சூடி கவிதை வரிகளே தலைப்பாக்கப் பட்டுள்ளன.கதைகளின் வரும் கருத்துப்படி வாழ்ந்தால், மனித குலம் மகான் குலமாக மாறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படித்தால் தன்னம்பிக்கை ஏற்படும். நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பிராந்தியம்

பிராந்தியம், நாராயணி கண்ணகி, தேனீர் பதிப்பகம், விலைரூ.55 அமரர் கல்கி நுாற்றாண்டு நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற குறுநாவல். காட்சி மயமாக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. உரையாடல்கள் மிக இயல்பாக உள்ளன. மதுக்கடை ஏலம் பற்றி பேசுகிறது. மிகவும் முதிர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது. அருமையாக தயாரிக்கப்பட்டுள்ளது நுால். நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம்

சங்கத்தமிழ் காட்டும் சனாதன தர்மம், விஷ்ணு சர்மா, சந்தம் தேசிய இலக்கிய பேரவை, விலை 30ரூ. தமிழர்கள் ஹிந்துக்கள் அல்ல என்று ஒரு கூட்டம், ஹிந்து தெய்வங்கள், வழிபாடுகள் குறித்து அவதுாறு பரப்ப மற்றொரு கூட்டம் என, பல்முனை தாக்குதலை ஹிந்து மதம் சந்தித்து வருகிறது. குறிப்பாக அந்தணர்கள் கைபர் போலன் கணவாய் வழியே வந்தவர்கள், விநாயகர் வழிபாடு பின்னாளில் வந்தது, முருகன் குறிஞ்சி நில தலைவன், அவனை தெய்வமாக்கி ஹிந்து மதம்தமிழர்களை ஏமாற்றுகிறது என்றெல்லாம் சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர். அவை அனைத்தும் […]

Read more

முதுவர் வாழ்வியல்

முதுவர் வாழ்வியல், முனைவர் க.முத்து இலக்குமி, திருக்குறள் பதிப்பகம், பக். 216, விலை 160ரூ. தமிழக பழங்குடி மக்களான முதுவர் இனத்தை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். எட்டு தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. தமிழக – கேரள எல்லையில் வாழும் பழங்குடியினர் வாழ்க்கை தனித்துவமானது. இந்த மக்களின் பழக்கவழக்கங்களை ஆராயும் நுால்கள் பல வந்துள்ளன. அவை, தமிழகத்தின் பன்முகத்தை காட்டும். கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழும் முதுவர் என்ற பழங்குடி மக்கள் வாழ்க்கை பற்றிய புத்தகம் இது. இவர்கள் வசிக்கும் கிராமங்களில் சென்று, […]

Read more

மறைக்கப்பட்ட வரலாற்று ஏடுகள்

மறைக்கப்பட்ட வரலாற்று ஏடுகள், மா.பொன்னுசாமி, பண்மா பதிப்பகம், பக். 186, விலை 100ரூ. பண்டைய அமைப்பு முறையை விமர்சன பார்வையுடன் விவரித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிந்தனைகளின் களமாக உள்ளது. பண்டைய இந்தியாவில் பவுத்த சிந்தனையின் தாக்கம், மறைக்கப்பட்ட சம்பவங்களை, வரலாற்றின் ஊடாக தேடி, உண்மையை அறிய முயலும் நுால். அரிய தகவல்களை தேடிக் கண்டு, பொருத்தமாக கட்டுரைகளில் சேர்த்துள்ளார். விழிப்புணர்வு செய்திகளுடன், ஆய்வு ரீதியாக தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. கருத்துக்கள் மிக எளிமையாக சொல்லப்பட்டுள்ளன. அரிச் சந்திரன் கதையில் புனைவை நீக்க முயற்சிக்கிறார். […]

Read more

காலம் தந்த காமராசர்

காலம் தந்த காமராசர், முகிலை இராசபாண்டியன், கோவன் பதிப்பகம், பக். 176, விலை 150ரூ. ஆறு வயதில் தந்தையை இழந்த ஏழைச் சிறுவன், இந்திய விடுதலைக்காக உழைத்து, அக்டோபர் மாதம் காந்தியடிகள் பிறந்த நாளில், உலக வாழ்வை துறந்தவரின் வரலாற்றை சொல்லும் நுால். முதல்வர் பதவியை துறந்து, நாட்டுக்காகப் பாடுபட்டவர் தான் கர்ம வீரர் காமராஜர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்த நேருவுக்கு ஆலோசனை கூறும் திறனுடன் விளங்கினார். மூன்று முறை தமிழகத்தின் முதல்வராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தவர். கடைசி […]

Read more

கடவுள் இருக்கிறார்

கடவுள் இருக்கிறார், கு.பாலசுந்தரி, மணிமேகலைப் பிரசுரம், பக். 152, விலை 100ரூ. சுவாமி சிவானந்தாவின் கடவுள் பற்றிய சிந்தனைகளை தமிழில் தரும் நுால். அவர் அருளிய, ‘கோ எக்சிஸ்ட்’ என்ற ஆங்கில நுாலை, தமிழில் சி.கனகராஜன் மொழிபெயர்த்துள்ளார். மிக எளிமையாக கருத்துக்களை விவரிக்கிறது. நன்றி: தினமலர், 11/10/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தலித் பண்பாடு

தலித் பண்பாடு, ராஜ் கவுதமன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 118, விலை 100ரூ. சாதிய ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் எவ்வாறு கட்டமைந்துள்ளன என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள நுால். சாதிப்படி நிலையில் அங்கீகாரம் பெற செய்து வரும் பூஜை, தான, தர்மம் முதலானவற்றை, மக்கள் வாழ்வியலில் உள்ளபடி படம்பிடிக்கிறது. தலித் பண்பாடு ஒரு கலந்துரையாடல், பெரிய புராணத்தில் மேல், கீழ் வரிசையும் முறைமீறல்களும், தமிழ் தலித் இலக்கியம் உட்பட, புத்தகம் நான்கு பிரிவுகளாக அமைந்துள்ளது. தலித் மக்களின் வாழ்க்கைக் கட்டமைப்புக்கு ஆலோசனை சொல்கிறது. […]

Read more

மீண்டும் பச்சைப்புடவைக்காரி

மீண்டும் பச்சைப்புடவைக்காரி, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 280, விலை 300ரூ. பச்சைப்புடவைக்காரியின் மேல் பித்தனாகி போன நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமியின் மற்றொரு படைப்பு மீண்டும் பச்சைப்புடவைக்காரி. அதென்ன… வாய் ஓயாமல் அன்னை மீனாட்சி, பராசக்தி, உமா மகேஸ்வரி, பார்வதி என அன்னையின் சொரூபங்களை, ஆனந்த ஆராதனைகளை அடுக்கி கொண்டே போகிறார் எனத் தோன்றலாம். அம்மாவை எத்தனை முறை அழைத்தாலும் அத்தனை முறையும் உள்ளிருந்து ஊற்றெடுக்கும் பாச உணர்வு தான், நுால் ஆசிரியரின் மீனாட்சியின் மீதான பக்தி உணர்வு. இந்த பக்தியை தராசு […]

Read more

ரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம்

ரஜினிகாந்தின் திருடுபோன ராசியான மோதிரம், சிங்கம்பட்டி பெ.மாடசாமி, மணிமேகலை பிரசுரம், பக். 196, விலை 170ரூ. அரசு பணி அனுபவம் சுவாரசியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தும். ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி பணி காலத்தில் நடந்த வழக்குகள் குறித்து, 21 தலைப்புகளில் விளக்குகிறார். ஒரு சம்பவம்: இரவு ரோந்து போலீசார் எதிரே வர, அவர்கள் கண்ணில் படாமல் தப்பிக்க, பங்களா வீட்டு சுவர் ஏறி குதித்து மறைகிறார் ஒரு திருடன். அது, நடிகர் ரஜினிகாந்த் வீடு என தெரியாமல் புகுந்து நகை, பணம் திருடி செல்கிறார். […]

Read more
1 2 3 8