சத்தியத்தின் குரலும் குறளும்

சத்தியத்தின் குரலும் குறளும், கு. பாலசுந்தரி, மணிமேகலைப் பிரசுரம், பக். 152, விலை 100ரூ. மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றுவோரின் அனுபவங்களால் கவரப்பட்டு, இந்த நுாலை எழுதியதாக கூறியுள்ளார். காந்தியின் வாழ்க்கை வரலாறு சம்பவங்களை எளிமையாக, 30 கட்டுரைகளில் எழுதியுள்ளார். சிறு கதைகள் போல் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையையும், பொருத்தமான குறளுடன் முடித்துள்ளார். மகாத்மா வாழ்ந்த காலத்தில் எடுத்த படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. நன்றி: தினமலர், 11/10/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

பழமொழி நானூறு

பழமொழி நானூறு, புலியூர்க்கேசிகன், ஏ.கே.எஸ்.புக்ஸ் வேர்ல்டு, பக். 200, விலை 160ரூ. பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில் ஒன்று பழமொழி நானுாறு. சங்க கால பழமொழிகளின் அடிப்படையில் முன்றுறை அரையனாரால் இயற்றப்பட்டது. வாழ்வியல் நெறியை, ‘நறுக்’கென்று சுருக்கமாகவும், தெளிவாகவும், நுட்பமாகவும் பதியும்படி கூறப்பட்டு வருவதே பழமொழி. பட்டறிவைச் சாரமாக்கி ஐயத்திற்கு அப்பாற்பட்ட குறைந்த சொற்களால் பசுமரத்தில் அம்பைச் செலுத்துவதுபோல் கூர்மையாக வெளிப்படுத்தினர். பாடல்களின் பொது இயல்பு, பாட்டின் இறுதியில் வைக்கப்பட்டிருப்பதோடு, முன் இரண்டு அடிகளில் பொருள் உணர்த்தப்படுவது சிறப்பு. பாடல்கள் பழமொழிகளின் அகர வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. […]

Read more

சாலை விபத்து தீர்வும் நஷ்டஈடும்

சாலை விபத்து தீர்வும் நஷ்டஈடும், ஏ.கே.எஸ்.தாஹிர், ஏ.எஸ்.பிலால், பாரதி புத்தகாலயம், பக். 84, விலை 70ரூ. சாலை விபத்து ஏற்பட்டால் சட்ட வழியில் நிவாரணம் பெறுவதற்கு உதவும் வகையில் தெளிவாக எழுதப்பட்டுள்ள நுால். சட்ட சேவை மைய வழக்கறிஞர்கள் எளிமையாக படைத்துள்ளனர். விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. விபத்து எனும் ஆபத்தில் துவங்கி, கவனக்குறைவு மற்றும் உரிமைகள் என்பது உட்பட, 10 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. விபத்துக்கு பின் சுலபமாக நிவாரணம் பெறுவது, விபத்தை தடுக்கும் வழிமுறை என விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. கடுகளவும் நீதி, நியாயம் […]

Read more

வாமன அவதாரம்

வாமன அவதாரம், அருப்புக்கோட்டை செல்வம், அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், பக். 72, விலை 80ரூ. ஜப்பானியக் கவிதை வடிவமான, ‘ஹைக்கூ’ தமிழில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்திய அளவில் தமிழில் தான் ஹைக்கூ கவிதைகள் அதிகம் எழுதப்படுவதாகக் கூறப்படுகிறது. இளைஞர் பலரும் அதில் ஈடுபாடு கொண்டு எழுதி வருவது வரவேற்கத்தக்கது. என்றாலும், அதன் இலக்கணத்தை அறிந்து எழுதி வருவோர் மிகச் சிலரே. மூன்று அடிகளில் எழுதுவதெல்லாம் ஹைக்கூ ஆகிவிடாது. மிக அதிக அளவில் எழுதப்படுவதால், அந்த வடிவம் நீர்த்துப் போய்விட வாய்ப்புண்டு. அனுபவத்தில் இருந்து […]

Read more

முருகா ஆறு படையின் புராணக்கதை

முருகா ஆறு படையின் புராணக்கதை, பிரபுசங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட்லிமிடெட், பக். 118, விலை 120ரூ. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றாலும், முருகனின் ஆறு படை வீடுகள் தனிச்சிறப்பும், வரலாறும் பெற்றவை. முருகனின் ஆறு படை வீடுகளைப் பற்றிய முழுமையான தொகுப்பை நுாலாசிரியர் பிரபுசங்கர் தொகுத்து வெளியிட்டுள்ளார். வீடு பேறு தரும் ஆறு படை வீடுகளின் வரலாறு, அவற்றின் தொன்மை, சுவாமியின் அலங்கார ரூபம், வீற்றிருக்கும் திருக்கோலம், கோவிலுக்கு செல்லும் வழி, அங்கு நடைபெறும் பூஜை முறைகளின் எண்ணிக்கை, கோவில் […]

Read more

ஆலய பூஜை, ஹோம கால முத்திரைகள் விளக்கங்கள்

ஆலய பூஜை, ஹோம கால முத்திரைகள் விளக்கங்கள், எஸ்.எஸ்.ராகவாச்சார்யர், நர்மதா பதிப்பகம், பக். 136, விலை 80ரூ. கோவில் வழிபாட்டின்போது அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், சிவாலய பூஜகர்கள் காட்டும் முத்திரைகள் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றின் விளக்கத் தொகுப்புதான் இப்புத்தகம். தேவதை மற்றும் கோவில் வழிபாட்டின்போது முக்கிய முத்திரைகளையும், உபசார வகைகளின் மூத்திரைகளையும் தேவையான, தெளிவான முறையில் கற்றுக்கொள்ள உகந்தது. உத்தியான கருத்துகளை சொல்கிறது. முத்திரைகளின் பயன்பாடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. -த.பாலாஜி. நன்றி: தினமலர், 19/7/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

ஆங்கிலமும் தாழ்வு மனப்பான்மையும்

ஆங்கிலமும் தாழ்வு மனப்பான்மையும், நா.பார்த்தசாரதி, அர்ஜித் பதிப்பகம், பக். 192, விலை 105ரூ. சிந்தனை வளம் சிறப்பாக இருந்தால், மற்ற வளங்கள் வந்து சேரும். வறுமை என்பது அறிவின்மை; வளமை என்பது அறிவுடைமை என்பார் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி. அவர் எழுதிய, 33 கட்டுரைகள் நுாலை அலங்கரிக்கின்றன. சமூகப் பொறுப்பு இல்லாத ஆட்சியாளர், சுயநலம் மிக்க அரசியல்வாதி, பொது நன்மை நோக்காத மக்களின் செயல்கள், நாட்டை எவ்வாறு கேட்டில் நிறுத்துகின்றன என்பதை முத்தாய்ப்பாக எழுதியுள்ளார். நன்றி: தினமலர், 19/7/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

சீனாவின் கொரோனா அரசியல்

சீனாவின் கொரோனா அரசியல், கோலாகல ஸ்ரீநிவாஸ், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 68, விலை 70ரூ. மனிதரிடம் இருந்து மனிதருக்கு கொரோனா வைரஸ் பரவாது என, ஜன., 14ம் தேதி சீன அரசு, உலக சுகாதார நிறுவனத்துக்கு அறிக்கை கொடுக்கிறது. அதை மீளாய்வு செய்யாமல் அப்படியே காப்பியடித்து உலகத்துக்கு அறிவிக்கிறது, WHO. இங்கே தான் வைரஸால் மனிதப் பேரழிவு துவங்கியது. இப்படித் தான் சீனா, உலக நாடுகளை ஏமாற்ற ஆரம்பித்தது என்ற, வேரில் இருந்து துவங்குகிறார் ஆசிரியர் கோலாகல ஸ்ரீநிவாஸ்.வைரஸால், 184 […]

Read more

ஒளி வித்தகர்கள்

ஒளி வித்தகர்கள், ஜா.தீபா, டிஸ்கவரி புக் பேலஸ், விலைரூ.150 கதையை காட்சி வடிவில் கண்முன் நிறுத்துவதில் முக்கிய பங்காற்றுபவர் ஒளிப்பதிவாளர். இயற்கை வளங்கள், விலங்குகள், அவற்றின் உடல் அசைவுகள், குணாதிசயங்கள், மனிதர்களின் ஆசாபாசங்களை நுட்பமாக காட்டுவது, அந்த கலையின் பரிணாமம். ஒளிப்பதிவு கலை பற்றி பேசுகிறது. ‘மாஸ்டர்ஸ் ஆப் லைட்’ என்ற ஆங்கில நுாலின், தமிழாக்கம். கதை காட்சியை, ஒரு நாளில் எந்த நேரத்தில் எந்த ஒளியில் எடுத்தால் சிறப்பாக இருக்கும்; ஒளிப்பதிவாளருக்கு, ஓவியம் எப்படி உதவி செய்யும்; கேமரா நகர்வு எப்படி இருக்க […]

Read more

அறுவகை இலக்கணச் சிறப்புகள்

அறுவகை இலக்கணச் சிறப்புகள், த.முத்தமிழ், காவ்யா, விலைரூ.220 கால மாற்றங்களால் மொழி வழக்குகள் மாறும்போது இலக்கியங்களில் மட்டுமன்றி, இலக்கணங்களிலும் மாற்றுப்பார்வைகள் தோன்றி வருகின்றன. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்திலக்கணங்களுடன் புலமையிலக்கணத்தையும் தந்த, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் அறுவகை இலக்கண நுாலில் உள்ள மாறுபட்ட பார்வைகளை ஆய்ந்து விளக்கியுள்ளார் நுாலாசிரியர். எழுத்திலக்கணத்தின் உருவோசையியல்பில் அலகெழுத்து, கூட்டெழுத்து எனும் இரண்டை இணைத்து, குறிப்பெழுத்தை இலக்கணத்தில் சேர்த்து, பிற இலக்கணிகள் விரித்துக் கூறாத அலகுகள், எழுத்து வடிவங்கள், கூட்டெழுத்து வரி வடிவங்கள், எழுதும் முறைகள் […]

Read more
1 2 3 4 8