முருகா ஆறு படையின் புராணக்கதை

முருகா ஆறு படையின் புராணக்கதை, பிரபுசங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட்லிமிடெட், பக். 118, விலை 120ரூ.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றாலும், முருகனின் ஆறு படை வீடுகள் தனிச்சிறப்பும், வரலாறும் பெற்றவை. முருகனின் ஆறு படை வீடுகளைப் பற்றிய முழுமையான தொகுப்பை நுாலாசிரியர் பிரபுசங்கர் தொகுத்து வெளியிட்டுள்ளார். வீடு பேறு தரும் ஆறு படை வீடுகளின் வரலாறு, அவற்றின் தொன்மை, சுவாமியின் அலங்கார ரூபம், வீற்றிருக்கும் திருக்கோலம், கோவிலுக்கு செல்லும் வழி, அங்கு நடைபெறும் பூஜை முறைகளின் எண்ணிக்கை, கோவில் நடை திறந்திருக்கும் நேரம் மற்றும் திருவிழாக்கள் என, அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய வழிகாட்டி புத்தகமாக உள்ளது.

கடற்கரையில் அமையப் பெற்றுள்ள ஒரே படை வீடு திருச்செந்துார் தான். இங்கு, முருகனின் பாதத்தில் இருந்து பெறப்படும் பத்ர விபூதி பிரசாதம் பிரசித்தம். திருச்செந்துார் கோவிலில் பிள்ளைத்தமிழ் இன்றளவும் பாடுகின்றனர். பழநி மலைக்கோவிலில் போகர் சித்தர் உருவாக்கிய நவபாஷாண சிலை, அதன் சிறப்புகள் விளக்கப்படுகின்றன.

மலையில்லா தஞ்சையில் சுவாமிமலையாய் வீற்றிருக்கும் முருகன். 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையுடைய திருத்தணிகை மலை முருகன் கோவிலின் அழகு விளக்கப்பட்டுள்ளது.

ஆண்டில் இரு முறை பிரமோற்சவம் நடைபெறும் திருத்தணிகை மலை என்றழைக்கப்படும் திருத்தணி கோவில், மலை மீது அமர்ந்த அழகர்மலை முருகன் கோவில் என, ஆறு படைகளின் சிறப்புகளை விளக்குகிறார். அறிவியலும், ஆன்மிகமும் இரண்டற கலந்து சமைக்கப்பட்டுள்ள இந்த புத்தகத்தை முருக பக்தர்கள் கொண்டாடுவர். கந்தசஷ்டி கவசம் இயற்றிய தேவராயரின் முருகனைப் பற்றிய பிற கவச பாடல்களையும் விவரித்துள்ளார் ஆசிரியர்.

அறு படை முருகனை ஆராதனை செய்தால்அருகினில் ஓடி வருவான்…
அன்பு பெருகி அருள்புரிவான்…’
என்ற பாடலுக்கேற்ப, முருகனை நினைந்து உருகுபவர்களுக்கு முருகா… என்ற இந்த புத்தகம், கவசமாக விளங்கும்.

– எம்.எம்.ஜெ.,

நன்றி: தினமலர், 9/8/20.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *