மலர்களே கொஞ்சம் மலருங்கள்

மலர்களே கொஞ்சம் மலருங்கள், சிறுவர்களுக்கான அறிவியல் சிறுகதைகள், லூர்து எஸ்.ராஜ், வைகறை பதிப்பகம், விலை 40ரூ. பூக்கள் குறித்த அறிவியல் சார்ந்த விஷயங்கள், வித்தியாசமான கதை பாணியில் சொல்லப்படுகின்றன. மாணவர்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து மணம் வீசும். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

வேட்கையில் எரியும் பெருங்காடு

வேட்கையில் எரியும் பெருங்காடு, பச்சியப்பன், இராசகுணா பதிப்பகம், விலை 150ரூ. இதயத்து உணர்வுகளை அனுபவத்தால் சொற்களாகச் செதுக்கி, வார்த்தைகளை வரிகளாக்கி எழுதப்பட்டிருக்கும் அழகான, ஆழமான கவிதைகள். படிக்கும்போது மனம் பறக்கிறது! பரபரக்கிறது! நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

அச்சத்தை அடித்து நொறுக்குவோம்

அச்சத்தை அடித்து நொறுக்குவோம், நந்தவனம் சந்திரசேகரன், இனியநந்தவனம் பதிப்பகம், விலை 100ரூ. விடியலில் எழும்போதே வெல்வோம் என நினைத்தால் வெற்றிகள் உங்கள் வாசலில் வந்து நிற்கும். அறியாமையால் அச்சத்தை சுமந்து அந்தச் சுமையில் அழுந்திப்போகாமல், துணிந்து போராடி ஜெயித்திட, உள்ளுக்குள் இருக்கும் தன்னம்பிக்கைப் பொறியினை அடையாளம் காட்டும் நூல். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

தி.க.சி. திரைவிமர்சனங்கள்

தி.க.சி. திரைவிமர்சனங்கள், தொகுப்பாசிரியர் வே.முத்துக்குமார், ஆவாரம்பூ, விலை 40ரூ. முற்போக்கு இலக்கியவாதிகளின் வழிகாட்டியான தி.க.சி. தமிழிலக்கிய வளர்ச்சிக்கு வித்திட்ட ஆரம்பகால இதழ்களில் சினிமா விமர்சனங்களும் எழுதியிருக்கிறார். குறை, நிறைகளை கொஞ்சமும் தயங்காமல் சுட்டிக்காட்டி தனக்கே உரிய பாணியில் அவர் எழுதிய 13 விமர்சனங்களின் தொகுப்பு. நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

கசடறக் கற்க கற்பிக்க…

கசடறக் கற்க கற்பிக்க…, முனைவர் மு.கனகலட்சுமி, சிவசக்தி பதிப்பகம், பக். 156, விலை 140ரூ. ஷெனாய் நகரிலுள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வரும் இந்நூலாசிரியர், இதற்கு முன் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியவர். பி.ஹெ.டி வரை கல்வித் தகுதி பெற்றுள்ள இவர், ஆரம்பக் கல்வி மாணவர்கள் மிக எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை எழுதி, படிக்க புதிய முறைகளை ஆய்வு செய்து இந்நூலை உருவாக்கியுள்ளார். முதலில் குழந்தைகள் மொழி கற்பதில் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கண்டறிந்து, […]

Read more

மறக்கமுடியாத மாபெருந்தலைவர்

மறக்கமுடியாத மாபெருந்தலைவர், திருவாரூர் இரா. தியாகராஜன்(சின்ன குத்தூசி), சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 90ரூ. கர்மவீரர் காமராஜருடனான அனுபவ நிகழ்வுகளை பிரபலங்கள் பலரிடம் கேட்டு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. காமராஜரின் கண்ணியம், உதார குணத்திற்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு இந்தப் புத்தகம். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

ஒருமிடறு பச்சைக் குருதி

ஒருமிடறு பச்சைக் குருதி, காலச்சித்தன், விஜயா பதிப்பகம், விலை 120ரூ. விரிந்த வெளியில் பரந்து இயங்கி, மகாபாரதம் முதல் சிலப்பதிகாரம் வரை இலக்கியங்களையும் களங்களாக்கி, வியக்கச் செய்யும் வித்தியாசமான கோணத்தில் புனைந்திருக்கும் கவிதைகள். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

வாழநினைப்போம், வாழுவோம்

  வாழநினைப்போம், வாழுவோம், டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம், கண்ணதாசன் பதிப்பகம், விலை 120ரூ. “எல்லா மாணவர்களுக்கும் சிறந்த வாழ்க்கை சாத்தியம் என்பதை நிச்சயப்படுத்தும்வகையில் நான் எழுதி இருக்கும் இந்தப் புத்தகத்தை பெற்றோரும் ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களையும் குழந்தைகளையும் படிக்க ஊக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”. இந்த நூல்குறித்து அப்துல் கலாம் அவர்களே சொல்லியிருக்கும் வார்த்தைகள் இவை. இலட்சிய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். ஆங்கிலத்தை அழகுத் தமிழாக்கியிருக்கிறார் சிவதர்ஷினி. நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

வெளிச்சத்தின் நிறம் கருப்பு

வெளிச்சத்தின் நிறம் கருப்பு, முகில், சிக்ஸ்த்சென்ஸ் பக்ளிகேஷன்ஸ், பக். 316, விலை 240ரூ. அறிவியலுக்குள்ளும், பகுத்தறிவுக்குள் அடங்காத மர்மங்கள், இவ்வுலகில் நிறைந்திருக்கின்றன. ஏன், எதற்கு, எப்படி என்ற மூன்று கேள்விகளுக்குள் அடங்காத, அந்த மர்மங்களின் கதகதப்பை உணர செய்கிறது இப்புத்தகம். ‘திக் திக்’ விரும்புகளுக்கு, நிச்சயம் இந்நு’ல் பிடிக்கும். நன்றி: தினமலர், 16/1/2018.

Read more

மணிமகுடம்

மணிமகுடம், ஜெய் சீதாராமன், விருட்சம், பக். 130, விலை 120ரூ. குவிகம் மின்னிதழில் தொடராக வெளிவந்து, பலராலும், கவனிக்கப்பட்ட இந்த சரித்திர குறுநாவல், தற்போது அச்சாகி உள்ளது. பாண்டியர்களின் வம்சாவளி பொக்கிஷங்களான, விலை மதிக்க முடியாதமணிமகுடத்தில் இருந்தும், ரத்தின மாலையில் இருந்தும், இந்த கதை எழுகிறது. இலங்கை மன்னன் மகிந்தன், ஈழத்தில் மறைத்த மதுரை பாண்டியர்களின் பொக்கிஷங்களைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. நன்றி: தினமலர், 17/1/2018.

Read more
1 2 3 10