உரையாசிரியர்களின் செவ்வியல் நோக்கு, மு.முனீஸ்மூர்த்தி, இராசகுணா பதிப்பகம், பக். 136, விலை 100ரூ. தொல்காப்பியர், செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாக “நோக்கு‘’ என்பதைச் செய்யுளியலில் குறிப்பிடுகிறார். சில நூற்பாக்களில் இந்த “நோக்கை’‘க் காணமுடிகிறது (எ.கா. “நோக்கே பாவே அளவியல்’‘, “நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே’‘). இந்த நோக்கு குறித்து பல ஐயங்களை எழுப்பி, அதற்கான விடையும் தரப்பட்டுள்ளது. இதற்கு முன் நோக்கு குறித்து ஆராய்ந்த அறிஞர்கள் பெருமக்களின் பட்டியல், இந்நோக்கு குறித்து நச்சினார்க்கினியர், பேராசிரியர், இளம்பூரணர், தமிழண்ணல், செ.வை.சண்முகம் போன்றோரின் புரிதல்கள் போன்றவையும் தரப்பட்டுள்ளன. கலித்தொகைக்குத் […]
Read more