தற்காலத் தமிழில் பின்னுருபுகள்

தற்காலத் தமிழில் பின்னுருபுகள், கோ. பழனிராஜன், இராசகுணா பதிப்பகம், பக். 152, விலை 130ரூ. தமிழ் மொழியில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என, நான்கு வகைப்படும். அவன் பார்த்தான் என்ற சொற்றொடரில் ஐ என்ற வேற்றுமை உருபினைச் சேர்த்து, அவனைப் பார்த்தான் என, எழுதினால் பொருள் வேறுபடுவதை உணரலாம். பொருளை வேறுபடுத்துவதால், அவற்றிற்கு வேற்றுமை என, பெயரமைந்தது. ஆங்கிலத்தில் சொல்லின் முன்னால் வரும் உருபுகள், தமிழில் சொல்லின் பின்னால் வருவதால், பின்னுருபுகள் எனப்பட்டன. வேற்றுமை உருபு, சொல்லுருபு, பின்னுருபு என்பனவற்றை ஆசிரியர் […]

Read more

இரட்டைக் காப்பியங்களில் மானுட மதிப்பீடுகள்

இரட்டைக் காப்பியங்களில் மானுட மதிப்பீடுகள், தமிழ் உயராய்வு மையம், நாகர்கோவில். இரட்டைக் காப்பியங்களில் மானுட மதிப்பீடுகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் ஆய்வாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நூல். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஒரு குடும்பக் கதையாக அமைந்தாலும், அதனுள் மூவேந்தர்கள், மூன்று நாடு, மூன்று தமிழ் என பல மூன்றின் தன்மைகள் காணப்படுகின்றன. இரண்டு நூலையும் சேர்த்து, இரட்டைக் காப்பியங்கள் என்று உரைப்பது மரபு. இதனுள் பல மதிப்பீடுகள் பேசப்படுகின்றன. சமயம், நாடு, மன்னன், குலம், தனிமனிதன் என பல நிலைகளை […]

Read more

கண்ணதாசனின் வனவாசம்

கண்ணதாசனின் வனவாசம், கண்ணதாசன் ஆடியோஸ், சென்னை, விலை 120ரூ. கவிஞர் கண்ணதாசன் அவருடைய சுயசரிதையை வனவாசம் என்ற பெயரில் எழுதினார். அந்த நூல் தமிழகத்தில் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. காரணம், தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் எதையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி எழுதியதுதான். இப்போது அதை கண்ணதாசன் ஆடியோஸ் ஒலிவடிவில் டிவிடி-யாக வெளியிட்டுள்ளது. அதாவது கண்ணதாசன் எழுதியதை, அவருடைய மகன்களில் ஒருவரான அண்ணாதுரை கண்ணதாசன், கம்பீர குரலில் ஏற்ற இறக்கத்துடன் சங்கீதக் கச்சேரியைக் கேட்டு ரசிக்கும் உணர்வு ஏற்படுகிறது. முன்பு படித்து ரசித்தவர்கள், இப்போது […]

Read more

சாதகலங்காரத்தில் சித்தர் கருத்துகள்

சாதகலங்காரத்தில் சித்தர் கருத்துகள், தி. கல்பனாதேவி, இராசகுணா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 130ரூ. சித்தர்கள் பற்றிய குறிப்புகள், அவர்கள் எழுதிய நூல்கள், மருத்துவ விளக்கங்கள், சமயம், உயிர்களின் பிறப்பு போன்ற பல்வேறு கருத்துக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. சாதக அலங்காரத்தை முதன்மையாக எடுத்துக்கொண்டு அதில் மருத்துவம், மந்திரம், ஜோதிடம் என்ற பிரித்து ஆராயப்பட்டுள்ளது. ஐந்தெழுத்து மந்திரத்தைக் கொண்டு, சித்தர்கள் செய்த அஷ்டகர்மம் என்ற எட்டுவகைச் செயல்களும் விளக்கப்பட்டுள்ளன. சமய வழிபாட்டு முறைகள், புத்திரப்பேறு மற்றும் திருமணத் தடைகளுக்கு அரசமர வழிபாடு, நாகப் பிரதிஷ்டை […]

Read more

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் செவ்வியல் நூல்கள்

தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் செவ்வியல் நூல்கள், இரா. வெங்கடேசன், இராசகுணா பதிப்பகம், சென்னை, பக். 136, விலை 75ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-012-8.html செவ்வியல் வரலாறுகளைக் கூறும் நூல்கள் வெளிவரும் சூழலில், செவ்வியல் இலக்கிய, இலக்கண நூல்கள் உருவான வரலாற்றை விரிவாகக் கூறும் நூல் இது. பண்டிதர்களின் வீட்டுப் பரண்களில் தூங்கிக் கொண்டிருந்த பழந்ததமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்க ஆறுமுக நாவலர் சி.வை. தாமோரம் பிள்ளை, உ.வே.சா. முதலான தமிழ்ச் சான்றோர்கள் செய்த முயற்சிகள் எண்ணற்றவை. தமிழ்ப் பெரியோர்கள் அயராத […]

Read more
1 2