தற்காலத் தமிழில் பின்னுருபுகள்

தற்காலத் தமிழில் பின்னுருபுகள், கோ. பழனிராஜன், இராசகுணா பதிப்பகம், பக். 152, விலை 130ரூ. தமிழ் மொழியில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என, நான்கு வகைப்படும். அவன் பார்த்தான் என்ற சொற்றொடரில் ஐ என்ற வேற்றுமை உருபினைச் சேர்த்து, அவனைப் பார்த்தான் என, எழுதினால் பொருள் வேறுபடுவதை உணரலாம். பொருளை வேறுபடுத்துவதால், அவற்றிற்கு வேற்றுமை என, பெயரமைந்தது. ஆங்கிலத்தில் சொல்லின் முன்னால் வரும் உருபுகள், தமிழில் சொல்லின் பின்னால் வருவதால், பின்னுருபுகள் எனப்பட்டன. வேற்றுமை உருபு, சொல்லுருபு, பின்னுருபு என்பனவற்றை ஆசிரியர் […]

Read more