மனித தெய்வம்!

மனித தெய்வம்!, கே.சித்தார்த்தன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.160. சில நாடகங்கள் படிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும். சில நடிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும். இது படிக்கவும் நடிக்கவும் ஏற்ற நாடகம். பாடல்களும் உண்டு. வழக்கமான கதை தான் என்றாலும் காட்சியமைப்பில் விறுவிறுப்பை கூட்டி எழுதியிருக்கிறார். காதலித்தவனை மணக்க முடியவில்லை. காதலித்தவனை இன்னொருத்தி மணப்பதற்கு ஒரு ட்விஸ்ட் வைத்து இருக்கிறார். நாடகத்தை காட்சி அமைப்பு, நடிகர்களின் பட்டியல் என 50 காட்சிகளாக எழுதி இருப்பது சிறப்பு. எத்தனை பேர் நடிக்கத்தேவை; அதில் எத்தனை பெண் பாத்திரங்கள் என்ற விளக்கக் குறிப்பு சிறப்பாக […]

Read more

ஆகவமல்லன்

ஆகவமல்லன், ருக்மணி சேஷசாயி, சாயி பதிப்பகம், விலைரூ.100. வீரம், காதல், பகை இவைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட மூன்று நாடகங்கள். மூன்றிலும் முக்கியமாக பொறாமைதான் மையப்புள்ளி. சோழஎதிரியை வீழ்த்த தன்னையே பகடைக்காயாக ஆக்குகிறார் ஒரு பெண். அவள் மையலில் விழுந்த ஆகவ மல்லன் தன் சொந்த மகனையும் எதிர்த்து என்ன ஆனான் என்பதை சொல்கிறது. கவி காளிதாசனை மணப்பதற்காக காதலியை பலிகடா ஆக்கிய பெண்ணை ‘தாய்வீடு’ நாடகமும் நன்கு படைக்கப்பட்டுள்ளது. கணவனைக் கொன்றவனை பழி வாங்க காத்திருந்த பெண், அந்தப் பகைவனாலேயே தன்மானம் காத்த […]

Read more

மாளவிகா ஐ.ஏ.எஸ்.

மாளவிகா ஐ.ஏ.எஸ்., சக்தி சித்தார்த்தன், பண்மொழி பதிப்பகம், விலைரூ.105 சமுதாயத்தில் நிலவும் முற்போக்கு கருத்துகளுக்கும், பழைய மதிப்பீடுகளுக்கும் நடக்கும் மோதல்களை சித்தரிக்கும் நாடகம். இதில் கதாபாத்திரங்களாக மாளவிகா, தாயுமானவர், சுகுணா மங்களம் மாமி என இடம் பெற்றுள்ளனர். காட்சிகளாக மாளவிகாவின் வீடு, ஆற்றங்கரை, மலை, காடு, கலெக்டர் பங்களா, பண்ணையார் பங்களா என்று பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஐ.ஏ.எஸ்., படித்து பணியில் உண்மையாக, நேர்மையாக இருக்க வேண்டும் என்று போராடும் பெண்ணை பற்றிய கதை. மிகவும் சுவாரசியம் தருகிறது. – வி.விஷ்வா நன்றி: […]

Read more

மகாகவியின் பாஞ்சாலி சபதம்

மகாகவியின் பாஞ்சாலி சபதம், கு.ஞானசம்பந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.45. மகாகவி பாரதி எழுதிய குறுங்காவியமான பாஞ்சாலி சபதத்தை நாடக வடிவில் தரும் நுால். இந்திய விடுதலைப் போரில் எழுச்சியை ஏற்படுத்துவதற்காக இந்த குறுங்காவியத்தைப் புனைந்தார் பாரதி. அதை, மாணவ – மாணவியர் நாடகமாக நடிக்க ஏற்ற வடிவில் உருவாக்கியுள்ளார். கல்லுாரியில் படித்த காலத்தில், அதை நாடகமாக நடித்தது பற்றிய சுவாரசிய அனுபவத்தையும் முன்னுரையில் பதிவு செய்துள்ளார். வாசிக்கவும், அரங்கில் நடிப்பதற்கும் ஏற்ற நுால். – ராம். நன்றி: தினமலர், 7/11/21. இந்தப் புத்தகத்தை […]

Read more

புதிர்

புதிர் (நாடகம்), கவிஞர் வேலூர் இரா.நக்கீரன், வெளியீடு: கவிதாலயம், விலை:ரூ.100. சில பத்தாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டு நடிக்கப்பட்ட ‘புதிர்’ நாடகம் புத்தக வடிவம் பெற்றுள்ளது. மிகக் குறைந்த கலைஞர்களுடன் மிக எளிமையான காட்சியமைப்பு மூலம் நடித்துக்கொள்ள நாடகாசிரியர் சில யோசனைகளையும் முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. விலை போகாத, நேர்மையான அரசாங்க வழக்கறிஞராக இருந்த மாணிக்கவாசகம் நீதிபதியாகப் பதவி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுவிடுகிறார். நீதிபதியாவதற்கு முன்னால் யார் அவருடன் விரோதம் பாராட்டினார்கள் என்ற ஃபிளாஷ்பேக் காட்சிகள் மூலம் சந்தேக முள்ளை ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் எதிராக […]

Read more

உண்மை வாரிசு

உண்மை வாரிசு, ப.பாலசுப்ரமணியன், சங்கர் பதிப்பகம், பக். 152, விலை 150ரூ. திருநங்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட நாடக நூல். அரவாணிகள் என்று சொல்லும் பெயர் காரணமும் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் வெற்றி பெற்ற திருநங்கை பட்டியலும் சொல்லப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக அரவாணியாக பிறந்து பெற்றோருக்கு தலைக்குனிவு வரக்கூடாது என்று வீட்டை விட்டு விலகிய பின் அதிர்ஷ்டவசமாக, தொழில் அதிபரின் வாரிசகாக ஆகி, திருநங்கையர் தலைநிமிர வழி காட்டுவதுடன், தன்னை வெறுத்து ஒதுக்கிய பிறந்த குடும்பத்தை சீராக்கியதை அழகாக சித்தரித்துள்ளார். -சீத்தலைச்சாத்தனார். நன்றி: தினமலர், 16/5/21. […]

Read more

நாடகமும் தமிழிசையும்

நாடகமும் தமிழிசையும் , டி.கே.எஸ். கலைவாணன், வானதி பதிப்பகம், பக். 176; விலை ரூ. 150; தமிழ் இசையை பாமர மக்களிடமும் பரப்பிய பெருமை தமிழ் நாடகக் கலைஞர்களுக்கு உண்டு, நாடகமும் தமிழிசையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் நிறுவிக்காட்டும் ஆய்வு நூல். தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் தமிழிசைப் பாடல்கள், நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனார், நாடகம் வளர்த்த தமிழிசை, நாடகம் வளர்த்த நால்வர், நூற்றாண்டு கண்ட நடிப்பிசை மாமணிகள், திரையிசையில் தமிழிசையின் பங்களிப்பு, சுதந்திரப் போராட்டத்தில் தமிழிசையின் பங்கு,  […]

Read more

விடியல் தேடும் பூக்கள்

விடியல் தேடும் பூக்கள், விஜய் மேகா, ஆகாஸ் பதிப்பகம், விலைரூ.100. சமுதாய சீர்திருத்தத்தைக் கருப்பொருளாகக் கொண்டு எளிய நடையில் எழுதப்பட்ட நகைச்சுவை நாடக நூல். ஓய்வுபெற்ற அரசு ஊழியரான பரமசிவம்என்ற விஜய் மேகா எழுதியுள்ளார். பல்வேறு நாடக நூலை இயற்றியுள்ளார். வட்டார வழக்கில் இந்த நாடக நூல் எழுதப்பட்டுள்ளது சென்னையில் தொடங்கிய காதல், திருச்செந்துார் முருகன் சன்னதியில் மூன்று ஜோடிகளின் திருமணமாய் நிறைவடைந்ததை நகைச்சுவையாகவும் ரசனை மிக்கதாகவும் எழுதியுள்ளார்.ஆசிரியரின் வாழ்வியல் அனுபவங்கள் நாடகத்தில் ஆங்காங்கே பளிச்சிடுகின்றன. ஆற்றொழுக்கான எளிய நடையில் எழுதப்பட்ட நுால். – […]

Read more

ரகசியம் வானொலி நாடகங்கள்

ரகசியம் வானொலி நாடகங்கள், உடுமலை முத்து, கலைஜோதி நாடக மன்றம், விலைரூ.70 கோவை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் ரகசியம், டைப்பிஸ்ட் பூங்காவனம், வீட்டுக்குள் ஒரு சினிமா ஆகியவை நுாலாக்கம் பெற்றுள்ளன. எழுதப்படும் நாடகம், மேடையில் உடலசைவுகள், வசனம், காட்சி, அமைப்பு, ஒப்பனை, ஒலிகள் ஆகியவற்றைக் கொண்டு நடிகர்களால் நிகழ்த்தப்படுகிறது. நாடக இலக்கியம் என்பது கரு, பாத்திரம், கால அளவு, கட்டமைப்பு, காட்சி அமைப்பு, தொடக்கம், குறிப்பு, வசனம், முடிவு, தலைப்பு, உத்திகள் என அமைகிறது. இவற்றை மீறி இத்தனை செயல்களையும் மனத்திரையில் கொண்டு […]

Read more

நாடகமும் தமிழிசையும்

நாடகமும் தமிழிசையும், டி.கே.எஸ். கலைவாணன்; வானதி பதிப்பகம், பக். 176, விலை ரூ. 150; தமிழ் இசையை பாமர மக்களிடமும் பரப்பிய பெருமை தமிழ் நாடகக் கலைஞர்களுக்கு உண்டு’, “நாடகமும் தமிழிசையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது’ என்பதைப் பல்வேறு ஆதாரங்களுடன் நிறுவிக்காட்டும் ஆய்வு நூல். தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் தமிழிசைப் பாடல்கள்’, “நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனார்’, “நாடகம் வளர்த்த தமிழிசை’, “நாடகம் வளர்த்த நால்வர்’, “நூற்றாண்டு கண்ட நடிப்பிசை மாமணிகள்’, “திரையிசையில் தமிழிசையின் பங்களிப்பு’, “சுதந்திரப் போராட்டத்தில் தமிழிசையின் பங்கு’, “காலம் […]

Read more
1 2 3 7