ஆகவமல்லன்

ஆகவமல்லன், ருக்மணி சேஷசாயி, சாயி பதிப்பகம், விலைரூ.100. வீரம், காதல், பகை இவைகளை மையமாக வைத்து எழுதப்பட்ட மூன்று நாடகங்கள். மூன்றிலும் முக்கியமாக பொறாமைதான் மையப்புள்ளி. சோழஎதிரியை வீழ்த்த தன்னையே பகடைக்காயாக ஆக்குகிறார் ஒரு பெண். அவள் மையலில் விழுந்த ஆகவ மல்லன் தன் சொந்த மகனையும் எதிர்த்து என்ன ஆனான் என்பதை சொல்கிறது. கவி காளிதாசனை மணப்பதற்காக காதலியை பலிகடா ஆக்கிய பெண்ணை ‘தாய்வீடு’ நாடகமும் நன்கு படைக்கப்பட்டுள்ளது. கணவனைக் கொன்றவனை பழி வாங்க காத்திருந்த பெண், அந்தப் பகைவனாலேயே தன்மானம் காத்த […]

Read more

பாப்பாவுக்குப் பாட்டு

பாப்பாவுக்குப் பாட்டு, ருக்மணி சேஷசாயி, சாயி பதிப்பகம், பக்.64, விலை 80ரூ. பாட்டுக்கு என்றாலே மகாகவி பாரதி தான் நினைவுக்கு வருவார். குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் காலம் மறைந்து வருகிறது. இக்குறையை போக்கும் வகையில், குழந்தைகளுக்கென்றே விலங்குகளை நாயகனாக வைத்து பாடல்களை ஆசிரியர் தொகுத்து தந்துள்ளது பாராட்டிற்குரியது. உறவுகளை வளர்க்கும் வகையில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பற்றிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இந்நுாலை வாங்கி, குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தால், அவர்களும் சிறப்பாக பாடுவர்; உச்சரிப்பும் சரியாக வரும் என்பதில் எள்ளளவும் […]

Read more

இயக்குனர் கே. சோமு : நாம் பெற்ற செல்வம்

இயக்குனர் கே. சோமு : நாம் பெற்ற செல்வம், விஸ்வபாரதி, காவ்யா, விலை 180ரூ. குறைந்த செலவில் சிறந்த படங்களை எடுத்தவர் டைரக்டர் கே. சோமு. சம்பூர் ராமாயணம், பாவை விளக்கு, மக்களைப் பெற்ற மகராசி, நான் பெற்ற செல்வம் ஆகியவை, சிவாஜிகணேசன் நடித்து சோமு இயக்கியவை. குறிப்பாக, “மக்களைப் பெற்ற மகராசி” திரைப்பட வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்ற படம். சிம்மக்குரலில் இயல்பாக பேசி நடித்து வந்த சிவாஜி கணேசன் இப்படத்தில் கொங்கு நாட்டு மக்கள் பேசுகிற பாணியில் பேசி நடித்தார். வட்டார […]

Read more