இயக்குனர் கே. சோமு : நாம் பெற்ற செல்வம்

இயக்குனர் கே. சோமு : நாம் பெற்ற செல்வம், விஸ்வபாரதி, காவ்யா, விலை 180ரூ.

குறைந்த செலவில் சிறந்த படங்களை எடுத்தவர் டைரக்டர் கே. சோமு. சம்பூர் ராமாயணம், பாவை விளக்கு, மக்களைப் பெற்ற மகராசி, நான் பெற்ற செல்வம் ஆகியவை, சிவாஜிகணேசன் நடித்து சோமு இயக்கியவை. குறிப்பாக, “மக்களைப் பெற்ற மகராசி” திரைப்பட வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்ற படம். சிம்மக்குரலில் இயல்பாக பேசி நடித்து வந்த சிவாஜி கணேசன் இப்படத்தில் கொங்கு நாட்டு மக்கள் பேசுகிற பாணியில் பேசி நடித்தார். வட்டார மொழி வசனம் இடம் பெற்ற முதல் படம். “மக்களைப் பெற்ற மகராசி.” அது மட்டுமல்ல; நடிப்பில் சிவாஜி புதிய உச்சத்தைத் தொட்டார். கே.சோமுவின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து இப்புத்தகத்தை சிறப்பாக எழுதியுள்ளார் விஸ்வபாரதி. படங்களும் இடம் பெற்றுள்ளன.

நன்றி: தினத்தந்தி, 23/3/2016.

 

—-

அன்பால் வென்ற அரசன், ருக்மணி சேஷசாயி, மணிமேகலைப் பிரசுரம், விலை 100ரூ.

சிறுவர்கள் நல்ல வழியை அறிந்து அதன் வழி நடக்க வேண்டும் என்ற குறிக்கோளில் பல நதிகளையும், பண்புகளையும் ஊட்டும் வகையில் சிறுகதைகளை அமைத்திருக்கிறார் நூலாசிரியர் ருக்மணி சேஷசாயி.

நன்றி: தினத்தந்தி, 23/3/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *