தமிழ் இதழியல் வரலாறு
தமிழ் இதழியல் வரலாறு, எம்.ஆர். இரகுநாதன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 150ரூ.
தமிழ் நாட்டில் பத்திரிகைகளின் தோற்றம், வளர்ச்சி பற்றிய விவரங்களை விவரிக்கும் நூல் இது. தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், “கல்கி ராமகிருஷ்ண மூர்த்தி, எஸ்.எஸ். வாசன், எஸ்.ஏ.பி. அண்ணாமலை, “சாவி” முதலியோர் பத்திரிகைத்துறையில் எதிர்நீச்சல்போட்டு சாதனைகள் புரிந்ததை ஆசிரியர் நடுநிலையுடன் எழுதியுள்ளார். தமிழில் இதழியல் துறை பற்றி நூல்கள் அதிகம் இல்லை என்ற குறையை, இந்தப் புத்தகம் போக்கியுள்ளது. பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும், பத்திரிகைத் துறையில் ஈடுபட விரும்புகிறவர்களம் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
நன்றி: தினத்தந்தி, 23/3/2016.
—-
எதிலும் கணிதம், இரா. சிவராமன், 691 பதிப்பகம், விலை 90ரூ.
கணிதப் பேராசிரியராக விளங்கும் இரா. சிவராமன், கணிதத்தை அனைவரும் அச்சம் இல்லாமல் படிக்க வேண்டும் என்பதற்காகவே ‘கணித மன்றம்’ என்ற அறக்கட்டளையை நிறுவி உள்ளார். இவர் எழுதியுள்ள “எதிலும் கணிதம்” என்ற இந்த நூலில், கணிதம் பற்றி பல அபூர்வ தகவல்களை கூறுகிறார். இதன் விலை 90ரூ. இவர் எழுதியுள்ள மற்றொரு நூல் கணித வரலாறும் பயனும். இதன் விலை 60ரூ.
நன்றி: தினத்தந்தி, 23/3/2016.