எழுக தமிழ்நாடே…!
எழுக தமிழ்நாடே…!, டாக்டர் ச. ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி, தொகுதி 5, விலை 250ரூ.
இந்த ஆண்டு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமராஸ் பிறந்தநாள் பவளவிழா ஆண்டாகும். தங்கள் தலைவரின் பவளவிழா ஆண்டு நிறைவாக கொடுக்கும் பெரிய பரிசாக பா.ம.க.வினர், அவர் ஆற்றிய உரைகள், விடுத்த அறிக்கைகள் மற்றும் அவருடைய கருத்துக்கள் அடங்கிய நூல்கள் 5 தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர். “எழுக தமிழ்நாடே” என்ற தலைப்பில் எழுதப்பட்ட தொகுப்பில் கூறப்பட்டுள்ள தமிழீழம் – மீனவர்கள் பிரச்சினை, கல்வி, ஆற்றுநீர் பிரச்சினை, சமூகநீதி, மதுவிலக்கு, வேளாண்மை, இயற்கை சீற்றம், மின்வெட்டு, அடக்குமுறை, அரசு நிர்வாகம் மற்றும் இதர பொருள்கள் அரசியல் ரீதியாக மட்டும் இல்லாமல் அனைவரும் படித்து பயனடையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 10 தலைப்புகளிலும் அவர் எழுதிய 157 அறிக்கைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பொருளையும் முழுமையாக தெரிந்து கொள்ள இந்த அறிக்கைகள் பெரிதும் உதவுகிறது. தமிழர்கள் அவசியம் படிக்க வேண்டிய பயனுள்ள நூலாகும்.
நன்றி: தினத்தந்தி, 23/3/2016.
—–
அப்துல்கலாம் கண்ணீர்த் துளிகள், த.மு. தனலட்சுமி, விலை 200ரூ.
மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் கவிதைகள் கொண்ட புத்தகம். அப்துல் கலாம் அவர்களின் பணிகளையும், அவர் மறைவால் ஏற்பட்ட வேதனைகளையும் நெஞ்சைத் தொடும் விதத்தில் புதுக்கவிதை வடிவில் எழுதியுள்ளார் கவிஞர் த.மு. தனலட்சுமி. படிக்கும்போது நம் கண்களும் குளமாகின்றன. அவ்வளவு உருக்கம். அப்துல் கலாமின் வண்ணப்படங்கள் புத்தகம் முழுவதும் நிறைந்துள்ளன.
நன்றி: தினத்தந்தி, 30/3/2016.