சிலப்பதிகாரம் கேள்விகள் ஆயிரம்

சிலப்பதிகாரம் கேள்விகள் ஆயிரம், மு. கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம்,   பக்.192. விலை ரூ.200.  தமிழா்களின் காப்பியம் என்று அழைக்கப்படும் சிலப்பதிகாரத்தின் கதையைத் தெரியாதவா்கள் தமிழா்களாக இருக்க இயலாது. கோவலன்-கண்ணகி-மாதவி; சேர-சோழ-பாண்டியா்; இயல்-இசை-நாடகம் என்று சிலப்பதிகாரம் பல முப்பரிமாணங்களைத் தன்னுள் கொண்டதாகத் திகழ்கிறது. சிலப்பதிகாரத்துக்கு 11-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அரும்பதவுரையும், 12-ஆம் நூற்றாண்டில் அடியாா்க்கு நல்லாா் எழுதிய உரையும் அந்தக் காப்பிய நுட்பங்களை அறிந்துணர உதவுகின்றன. அடியாா்க்கு நல்லாா் உரையிலிருந்து அவரது காலத்தில் சிலப்பதிகாரம் போலவே பல இசை நாடக நூல்கள் வழக்கில் இருந்தன […]

Read more

சித்த மருத்துவ போட்டித் தேர்வு வினா விடை தொகுப்பு நூல்

சித்த மருத்துவ போட்டித் தேர்வு வினா விடை தொகுப்பு நூல், டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா, பக். 1560, விலை 1500ரூ. மருத்துவத் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கு உதவும் வகையில், தயாரிக்கப்பட்டுள்ள பயிற்சி நுால். கேள்வி – பதில் தொகுப்பாக உள்ளது. மத்திய, மாநில அரசு பணிகளில் சேர தேர்வு எழுதுவோருக்கும் உதவும். சுலபமாக பயன்படுத்த வசதியாக மூன்று புத்தகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்ந்த மருத்துவக் குழு தயாரித்துள்ளது. சித்த மருத்துவம் தொடர்பான துல்லிய விபரங்கள், கேள்வி – பதில் வடிவில் உள்ளது. தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் […]

Read more

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள், அந்துமணி, தாமரை பிரதர்ஸ், பக். 312, விலை 280ரூ. நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தது, ‘தினமலர் – வாரமலர்’ அந்துமணியின், ‘கேள்வி – பதில்’ தொகுப்பு… இதோ புத்தகமாக வெளி வந்துவிட்டது. எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக வந்துள்ளது புத்தகம்! ‘நான் எழுதிய கருத்துக்கள், புத்தகத்தின், 312 பக்கங்களிலும் குவிந்து கிடக்கும் போது, எதற்கு என்னுரை, முன்னுரை எல்லாம்…’ என, அந்துமணி அவர் பாணியில் நேரடியாக களத்திற்கு வந்து விடுகிறார். எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், தன் அணிந்துரையில் குறிப்பிட்டது போல, 50 லட்சத்திற்கும் மேலான […]

Read more

மன அழுத்தமும் ஒரு வரமே

மன அழுத்தமும் ஒரு வரமே, பி.வி.பட்டாபிராம், கொரல் வெளியீடு, விலை 150ரூ. மன அழுத்தம் என்பது ஒரு நோய் என்று அனைவரும் நினைத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், மன அழுத்தம் என்பது நம்மை ஊக்குவிக்கிறது. ஆகவே இது அனைவருக்கும் அவசியமான ஒன்றே. ஆனால் தகுந்த அளவில் இருக்கும் படி நிர்வகித்துக் கொள்ள வேண்டும் என்ற வித்தியாசமான கோணத்தில் சொல்லும்இந்த நூலில், மன அழுத்தம் தொடர்பான அத்தனை தகவல்களும் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் மன அழுத்தம் எந்த நிலையில் இருக்கின்றது, அவற்றை சரி செய்து எவ்வாறு என்பது உள்பட […]

Read more