ஜெய் அனுமன்

ஜெய் அனுமன், பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ், பக். 168, விலை 170ரூ. ராம நாமம் பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரியதைப் போலவே, ராம நாமத்தை உச்சரிக்கும் அனுமனும் போற்றுதலுக்குரியவர். வன வாசத்திற்கு பின் அனுமன் வந்தாலும், அடுத்தடுத்த அவதாரங்களிலும் ராம பக்தனாகவே அனுமன் தொடர்கிறார்; கிருஷ்ணரை புறக்கணிக்கிறார் எப்படி என்பதை கதையோட்டத்துடன் விவரிக்கிறார் ஆசிரியர் பிரபுசங்கர். வீரம், ஆற்றல், மேன்மை, விசுவாசம், நல்லொழுக்கம், மனதாலும் தவறு நினையாத நல்ல குணம் இவையெல்லாம் நினைவு வரும். அது மட்டுமல்ல… சொல்லும் வார்த்தைகளின் இலக்கணமாக திகழ்ந்தவர் என்பதை […]

Read more

நான் தான் கொவிட் 19

நான் தான் கொவிட் 19, பேராசிரியர் ப.க.பொன்னுசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 64, விலை 70ரூ. இது நடந்தது, 1960களில். சளியின் நீர்மத் துகள்களை மூன்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அவை ஒளிரும் வைர கிரீடம் போல மின்னியது. ஆய்வு முடிவில், 1965ல் கொரோனா என்ற பெயரை சூட்டினர். அப்போதிருந்து கொரோனா தொடர்கிறது என்ற ஆய்வை நம் முன் வைக்கிறார் பேராசிரியர் பொன்னுசாமி. இது முழுக்க அறிவியல் விளையாட்டு… மூலக்கூறு, புரதங்களின் தன்மையை புரிந்து கொண்டால் இந்த உண்மை விளங்கும். வைரஸ் தானாக […]

Read more

அருள்மழை தாராயோ

அருள்மழை தாராயோ, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 216, விலை 220ரூ. இந்த எண்ணம் நமக்கும் அடிக்கடி வரும். கோவிலுக்குள் செல்லும் போது சிலர் சிறப்பு தரிசனம் செல்ல, பலர் விழிபிதுங்கி கூட்ட நெரிசலில் சிக்கி வரிசை நகராதா என ஏங்கிக் கொண்டே செல்வர்.ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமிக்கும் இந்த சிந்தனை வந்தது. தாயே… மீனாட்சி… ஒரு நாளாவது நீயா சிறப்பு தரிசனத்துக்கு வழி பண்ண மாட்டியா என, உள்ளுக்குள் கோபமும் சலுகையுமாய் கேட்க, மகனின் அசைவுக்கு இசையும் தாயாய், அர்ச்சகர் வடிவில் வந்து […]

Read more

வீணையடி நீ எனக்கு

வீணையடி நீ எனக்கு, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 220, விலை 240ரூ. நேற்று கண்ணனைப் பற்றி பாடினீர்கள். இன்று சிவனைப் பற்றி சொல்கிறீர்கள். நீங்கள் எதை வணங்குவீர்கள் என்று சிறுபிள்ளையாய் கேட்கும் மாணவியிடம், அன்னை ராஜராஜேஸ்வரி சொல்லும் எளிமையான விளக்கம், நம்மை உருகச் செய்துவிடும். அன்பு என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம். கர்மக்கணக்கும் அந்த அன்புக்கு முன் ஒன்றும் செய்ய முடியாமல் பரிதவிக்கும் என்பதுதான் கதையோட்டத்தின் சிறப்பு. வழக்கம்போல விறுவிறுப்பான எழுத்தோட்டத்தாலும், எளிமையான கதையின் ஓட்டத்தாலும் கதையோடு பயணிக்க வைக்கிறார் ஆசிரியர் […]

Read more

நிலவென வாராயோ!

நிலவென வாராயோ!,  வரலொட்டி ரெங்கசாமி,  தாமரை பிரதர்ஸ், விலை ரூ.300. அவளன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை தான் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை விவரித்துக் கொண்டு செல்கிறார், நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. கதை மாந்தர்களின் பெயர்கள் அனைத்தும், அன்னையின் பல்வேறு பெயர்களைத் தாங்கியே நடைபயணிக்கிறது. காதல், பாசம், அன்பு, நேசம், கோபம், வேதனை, கசப்பு கலந்த உணர்வு குவியலாய் எழுத்துக்கள் படைக்கப்பட்டுள்ளது சிறப்பு.  வாழ்வின் எதார்த்தங்களை எழுத்தோட்டமாய் கொண்டு சென்று வெற்றி பெற்றிருக்கிறார் ஆசிரியர். புத்தகம் முழுதும் அன்னையை தவழவிட்டு,உலவவிட்டு, ‘நிலவென வாராயோ’ […]

Read more

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள், அந்துமணி, தாமரை பிரதர்ஸ், பக். 312, விலை 280ரூ. நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தது, ‘தினமலர் – வாரமலர்’ அந்துமணியின், ‘கேள்வி – பதில்’ தொகுப்பு… இதோ புத்தகமாக வெளி வந்துவிட்டது. எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக வந்துள்ளது புத்தகம்! ‘நான் எழுதிய கருத்துக்கள், புத்தகத்தின், 312 பக்கங்களிலும் குவிந்து கிடக்கும் போது, எதற்கு என்னுரை, முன்னுரை எல்லாம்…’ என, அந்துமணி அவர் பாணியில் நேரடியாக களத்திற்கு வந்து விடுகிறார். எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், தன் அணிந்துரையில் குறிப்பிட்டது போல, 50 லட்சத்திற்கும் மேலான […]

Read more

பச்சைப்புடவைக்காரி

பச்சைப்புடவைக்காரி, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 328, விலை 300ரூ. பக்தர்களின் பக்தியை அளவிடுகிறாள் பச்சைப்புடவைக்காரியாக வலம் வரும் மதுரை அன்னை மீனாட்சி. அவளின் தராசில் கடமைகளும், பொறுப்புகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அளவுகோல் இருக்கிறது. அதை எப்படித் தெரிந்து கொள்வது என வழிகாட்டுகிறார் ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. மனித முயற்சியால் முடிந்த அளவு செய்துவிட்டு பின், அதன் பலனை இறைவனிடம் விட்டுவிடுவதே சரியான பக்தி. இத்தகைய பக்தியை தான் அன்னை மீனாட்சி விரும்புவதாக ஆசிரியர் தன் பக்கங்களில் தன்னம்பிக்கை விதையை விதைத்துக் […]

Read more

காஞ்சியின் கருணைக்கடல்

காஞ்சியின் கருணைக்கடல், திருப்புர் கிருஷ்ணன், தாமரை பிரதர்ஸ், பக். 212, விலை 210ரூ. மனிதர்களின் மேல் கருணை கொண்டு கனிந்த பழமாய் காட்சியளிப்பவர் காஞ்சிப் பெரியவர். எளிமையின் திருவுருவாய் இருந்தாலும், பிரச்னைகளின் தீட்சண்யத்தை உணர்ந்து பக்தர்களின் துயர் துடைப்பவர். எல்லாம் இறையே என்பது தான் அவரது சிந்தனை. கீரையை ருசித்து சாப்பிடுவதால், அதை தினமும் நடைமுறைப்படுத்திய பணியாளரிடம், சாணி உருண்டையை வரவழைக்கச் சொல்லி சாப்பிட்டவர் காஞ்சிப்பெரியவர். பதறிப்போன பணியாளரிடம், கீரையும், சாணியும் ஒன்று தான் என்பதை என் நாக்கிற்கு உணர்த்தி பாடம் நடத்திக் கொண்டிருக்கிறேன் […]

Read more

ஆன்மிகம் அறிந்ததும் அறியாததும் 2

ஆன்மிகம் அறிந்ததும் அறியாததும் 2, மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார், தாமரை பிரதர்ஸ், பக். 72, விலை 70ரூ. தினமலர் – ஆன்மிக மலர் இதழில் வெளியாகிறது, ‘கேளுங்க சொல்கிறோம்’ எனும் பகுதி. கோவில், தெய்வங்கள், மந்திரம், வாஸ்து, பரிகாரம் என, பல வகையில் வாசகர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கும், அவர்களின் பிறவகையான கேள்விகளுக்கும் வேத வித்தகர், ‘மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்’ தந்த பதில்களே, ‘அறிந்ததும் அறியாததும் – 2’ என்னும் இந்த நுால். ஏற்கனவே பகுதி – 1 வெளியாகி, வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. […]

Read more