பிசிராந்தையார்

பிசிராந்தையார், பாவேந்தர் பாரதிதாசன், முல்லை பதிப்பகம், விலைரூ.100. பிசிராந்தையார் – கோப்பெருஞ் சோழனின் ஆழ்ந்த நட்பை கருத்தில் கொண்டு கவிஞர் நாடகமாக்கி, ஆங்காங்கே வசனங்களுக்கு இடையே பாட்டுகளையும் புகுத்தி பாவிருந்து படைத்து உள்ளார். தென்னாடு வாழ வேண்டும்; செந்தமிழ் வாழ வேண்டும்; முன்னேறும் திறமை வேண்டும். தன்மானம் நாம் பெற வேண்டும் என்று இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைத்துள்ளார். நாடகத்தில் 34 காட்சிகள் உள்ளன. காலத்திற்கு ஏற்ற வகையில் கவிதை வடிவில் தலைப்புகள் மிகச் சிறப்பு. புரட்சி கவிஞர் பாரதிதாசனின் புதுமை படைப்பு. சாகித்ய அகாடமி […]

Read more

உவமைத் தொடர்களைச் கண்டுபிடியுங்கள்!

உவமைத் தொடர்களைச் கண்டுபிடியுங்கள்!, டி.என்.இமாஜான், மணிமேகலை பிரசுரம், விலைரூ.80 படங்களை பதிவிட்டு, அதில் உள்ள உவமையை கண்டுபிடிக்கும் புதிர்களை உள்ளடக்கிய தொகுப்பு நுால். மொத்தம் 100 புதிர்கள் உள்ளன. தமிழ் இலக்கணத்தை எளிய முறையில் மனங்கொள்ளத்தக்க வகையில் தயாரிக்கப்பட்டுள்ள புதுமை நுால். பக்கத்துக்கு இரண்டு படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் புதிர்களை கண்டுபிடிக்கும் போது, இயல்பாகவே தமிழில் உவமை இலக்கணம் மனதில் பதியும். மொழியை கற்பிக்கும் எளிமையான முயற்சியாக அமைந்துள்ள நுால். – ஒளி நன்றி: தினமலர், 30/1/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

நவீன நீர்வழிச்சாலையும் இதற்கான முயற்சிகளும்

நவீன நீர்வழிச்சாலையும் இதற்கான முயற்சிகளும், பொறியாளர் ஏ.சி.காமராஜ், மணிமேகலை பிரசுரம், விலைரூ.230 கங்கையிலிருந்து கன்னியாகுமரி வரை நீர்வழிப்பாதை ஏற்படுத்த முன்னோடித் திட்டமாக உருவாக்க எடுத்த உழைப்பை எடுத்துரைக்கும் நுால். முயற்சிக்கு இடையே சந்தித்த அரசியல் தலைவர்கள் பற்றியும், அவர்களது நேர்மைத் திறம் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார். காமராஜர், ராமகிருஷ்ண ஹெக்டே, அப்துல் கலாம், தமிழக முதல்வர்கள் என்று பலருடன் கொண்டிருந்த தொடர்புகளையும், அவர்களிடம் எடுத்துரைத்த தேசிய நதிநீர் இணைப்பு தொடர்பான திட்டங்களையும் எளிய தமிழில் எடுத்துரைத்துள்ளார். இந்தியாவில் நீர் மேலாண்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை […]

Read more

சுதந்திர போராட்ட தியாகி தியாகராஜன் வரலாறு

சுதந்திர போராட்ட தியாகி தியாகராஜன் வரலாறு, தியாக சத்தியமூர்த்தி, சிவகாமி பதிப்பகம், விலைரூ.250 இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் கோவில்களும் போராட்ட மையங்களாக விளங்கியுள்ளன. விடுதலை தாகத்தால் சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய தியாகி தியாகராஜன் வாழ்க்கை வரலாற்றை, தொல்லியல் அறிஞர் தியாக சத்தியமூர்த்தி ஆங்கிலத்தில் தொகுப்பு நுாலாகப் படைத்துள்ளார். தமிழில், வகுளா வரதராஜன் மொழி பெயர்த்துள்ளார். எளிய நடையில், நேரடியாக பேசுவது போல் அமைந்துள்ளது. தியாகி தியாகராஜனின் 88 ஆண்டு கால வாழ்க்கையை அவர் எழுதிய குறிப்புகளில் இருந்து, […]

Read more

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம், க.நா.சுப்ரமண்யம், முல்லை பதிப்பகம், விலைரூ.150 இலக்கியம் பற்றிய சிந்தனைகள் கொண்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். பல கட்டுரைகள் விவாதத்துக்கு ஏற்றவை. தமிழர்களின் சிந்தனை வளம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன. இலக்கிய வட்டம் இதழில், 60 ஆண்டுகளுக்கு முன் எழுதிய கட்டுரைகள் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளன. தமிழர் மூளையில் தர்க்கப்பூர்வ சிந்தனையை துாண்டும் வகையில் தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது.மரபு வழியில் தேங்கிவிட்ட ஒரு சமூகத்தின் மீது ஆழ்ந்த அக்கறை மற்றும் கவலை தொனிக்க எழுதப்பட்டுள்ளது. இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் என்பதில் துவங்கி, ஷேக்ஸ்பியரும் கம்பனும் […]

Read more

ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம், டி.வி.ராதாகிருஷ்ணன், அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.230 பகவான் கண்ணனின் அருள் நிறைந்த வரலாறு பாகவதம். உயிர் இனங்களின் பரிணாம வளர்ச்சியை, திருமாலின் அவதாரமாகக் காட்டுகிறது. விஷ்ணுவின் 20க்கும் மேற்பட்ட அவதாரங்களையும், அவதார தத்துவங்களையும், உபதேசங்களையும் சொல்கிறது. கபில அவதாரம் உபதேசிக்கும் சாங்கிய யோகம், எந்த தத்துவமும் சொல்லாத புதுமையானது. கண்ணனைச் சரண் புகுந்தால் மன நிறைவும், குடும்ப வளமும், சமுதாய நலமும் பெறலாம் என்கிறது பாகவதம். பத்து ஸ்கந்தங்களாக பிரிக்கப்பட்டு, 119 தலைப்புகளில் சுவையான கிருஷ்ண லீலைகள் பேசப்படுகின்றன. விஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களுடன், […]

Read more

மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும்

மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும், அமுதன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.200 மாமல்லபுரம் சிற்பங்கள் பற்றி வரலாற்று பின்னணியுடன் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ள நுால். மொத்தம் 26 வியப்பூட்டும் தலைப்புகளில் அமைந்துள்ளது. மர்மங்கள் புதைந்துள்ள மாமல்லபுரம் என துவங்குகிறது முதல் அத்தியாயம். இரண்டு பனை மரங்களுக்கு நடுவே அமைந்துள்ள ஐந்து ரதம் பகுதியின் பழைய போட்டோ இடம் பெற்றுள்ளது. அடுத்தடுத்து மர்ம முடிச்சுகளை விடுவிக்கும் வகையில், அடுக்கமைவு முறையில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது. நிரூபிக்கப்பட்ட வரலாற்று ஆதார செய்திகள் புத்தகத்தின் ஆன்மாவாக உள்ளன. அவை சிதறிவிடாமல் குழப்பமின்றி விவரிப்பு […]

Read more

தண்டவாளங்கள்

தண்டவாளங்கள், டாக்டர் பாலசாண்டில்யன், குவிகம் பதிப்பகம், விலைரூ.120 கலைமகள் மாத இதழ், இலக்கியப்பீடம் போன்ற இலக்கிய இதழ்களில் வெளிவந்ததும், போட்டிகளில் பரிசுகள் பெற்ற 21 சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிறுகதைகளுக்கான இலக்கணங்களுடன் சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூகப்பார்வை, மனிதநேயம், விமர்சனங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. குடும்ப சிக்கல்களை மையமிட்டு அதற்கான தீர்வாக சிறுகதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அழகு தேவதைகள் என்ற சிறுகதையில் ஆசிரியருக்கும், மாணவர்களுக்குமான உறவைச் சிறப்பாக வடித்துள்ளார் நுாலாசிரியர். குடும்பம் தொடர்பான சிக்கல்களை வித்தியாசமான கோணத்தில் அமைத்தும், அதற்கான தீர்வுகளையும் வழங்குகிறது. நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த […]

Read more

நட்சத்திர பலன்களும், ஆன்மிக குறிப்புகளும்

நட்சத்திர பலன்களும், ஆன்மிக குறிப்புகளும், ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230. பொதுவாக எந்த ஒரு செயலைத் துவங்குவதானாலும், செய்வதாக இருந்தாலும், நாள், நட்சத்திரம், ராசி பலன் பார்த்து செய்வதே வழக்கம். அந்த அளவுக்கு அன்றாட வாழ்வில் முக்கியத்துவம் பெற்றுள்ள நட்சத்திரம், அதன் தமிழ் அர்த்தமும், நட்சத்திர கோவில்கள், நட்சத்திரங்களும் அபிஷேகங்களும், நட்சத்திரத்திற்கான எழுத்துகள், தெய்வங்களும் நட்சத்திரங்களும், ராசியின் பொதுப் பலன்கள், 12 ராசிகளுக்கும் வழிபாட்டு பலன்கள். ராசிக்கான வழிபாடு தானம், 12 ராசிகளுக்குரிய புனித நதிகள், 12 […]

Read more

மகரிஷிகள்

மகரிஷிகள், ஆர்.கல்யாணி மல்லி, ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.200. அகத்திய முனிவர் துவங்கி, ஜகத்குரு சங்கராச்சாரியார் மஹா பெரியவர் வரை, 41 கட்டுரைகள் மகரிஷிகளின் வரலாற்றைக் கூறுகின்றன. ஆற்றல் அற்புதங்களை விரிவாகப் பேசுகிறது. சிவபெருமானின் திருமணத்தின் போது இறைவன் அருளாணையின் வழி, அகத்தியர் தெற்கே வந்து பூமியை சமநிலைப்படுத்திய விந்திய மலை பூமியை ஒட்டியவாறு இருப்பது, கடல் நீர் முழுவதும் வற்றச் செய்து பருகியது போன்ற ஆற்றல்களை எளிய நடையில் விளக்குகிறது. துர்வாசர் யார்? அவர் எப்படி வந்தார். அவர் செய்த வீர தீரச் […]

Read more
1 2 3 9