திருப்பாவை நாச்சியார் திருமொழி

திருப்பாவை நாச்சியார் திருமொழி, வே.சாய் சத்தியவதி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.120. சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் நோன்பிருந்து பாடிக் கொடுத்த திருப்பாவை முப்பது பாடல்களையும் புரிந்துகொள்ளும்படி, எளிய நடையில் விளக்க உரை கொடுக்கப்பட்டுள்ள நுால். அதுமட்டுமல்ல, நாச்சியார் திருமொழி பதினான்கையும் சந்தி பிரித்து தந்துள்ளது மிக அருமை. இதில் ஆறாம் பத்து பாடல்கள் கண்ணபிரான் தன்னை மணம் செய்த கனவைச் சொல்லும் பாடல்கள். அம்மி மிதிக்கக் கனாக் கண்டால் திருமணம் கைகூடுமே! – சீத்தலைச்சாத்தன் நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம், டி.வி.ராதாகிருஷ்ணன், அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.230 பகவான் கண்ணனின் அருள் நிறைந்த வரலாறு பாகவதம். உயிர் இனங்களின் பரிணாம வளர்ச்சியை, திருமாலின் அவதாரமாகக் காட்டுகிறது. விஷ்ணுவின் 20க்கும் மேற்பட்ட அவதாரங்களையும், அவதார தத்துவங்களையும், உபதேசங்களையும் சொல்கிறது. கபில அவதாரம் உபதேசிக்கும் சாங்கிய யோகம், எந்த தத்துவமும் சொல்லாத புதுமையானது. கண்ணனைச் சரண் புகுந்தால் மன நிறைவும், குடும்ப வளமும், சமுதாய நலமும் பெறலாம் என்கிறது பாகவதம். பத்து ஸ்கந்தங்களாக பிரிக்கப்பட்டு, 119 தலைப்புகளில் சுவையான கிருஷ்ண லீலைகள் பேசப்படுகின்றன. விஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களுடன், […]

Read more

பாவேந்தர் பாரதிதாசனின் குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு – மூலமும் உரையும்

பாவேந்தர் பாரதிதாசனின் குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு – மூலமும் உரையும், உரையாசிரியர் – தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.275. பாவேந்தர் பாரதிதாசனின் புகழ்பெற்ற படைப்புகளில் ‘குடும்ப விளக்கு’ 1944 தொடங்கி 1950 வரை ஐந்து பகுதிகளாக வெளிவந்தது. ஐந்து பகுதிகளுக்கும் உரையுடன் சேர்த்து இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. கூடவே ‘அழகின் சிரிப்பு’ம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 29/1/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், மு.அருணகிரி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.990. காசி மாநகரில் முனிவர்கள் பலர் கூடியிருந்து மதுரையைப் பற்றியும், அங்கே சிவபெருமான் கோவில் கொண்டிருப்பது பற்றியும் உரையாடுகின்றனர். அவர்களுடன் இருந்த அகத்தியரைப் பார்த்து, சிவபெருமான் திருவிளையாடல் புரிவதற்கு ஏற்ற இடமாக மதுரையைத் தேர்ந்தெடுத்தது குறித்து கேட்டனர். அந்த முனிவர்களுக்கு, 63 திருவிளையாடலையும் அகத்தியர் கூறுவதைப் போல் இந்த நுால் துவங்குகிறது. தமிழ் மொழியில் நுாற்றுக்கணக்கான தல புராணங்கள் உள்ளன. அவற்றில் எல்லாம் மிகவும் பழமையானதாக விளங்குகிறது. 13ம் நுாற்றாண்டில் தோன்றியது, திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம். […]

Read more

வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம்

வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம், அனந்தாச்சாரி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 230ரூ. மகாபாரதத்தை எழுதிய வியாசர், ஏராளமான கிளைக் கதைகளைக் கொண்ட ஸ்ரீமத் பாகவதம் என்ற மிகப் பெரிய நூலையும் எழுதியுள்ளார். அந்த நூலில் உள்ள அனைத்து கருத்துகளும், கிளைக் கதைகளும் எளிய முறையில் படித்து அறிந்துகொள்ளும் வண்ணம் இந்த நூல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. காக்கும் கடவுளான விஷ்ணு அனைத்து உயிரினங்களையும் காப்பதற்காக எடுத்த 20-க்கும் மேற்பட்ட அவதாரங்களும், அந்த அவதாரங்களின் சிறப்பும், அதன் மூலம் வெளிப்பட்ட அறநெறிகளும் விளக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. சிருஷ்டி […]

Read more

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்,  பெரும்பற்றப்புலியூர் நம்பி, உரையாசிரியர்: மு. அருணகிரி, அருணா பப்ளிகேஷன்ஸ்,  பக்.808, விலை ரூ.990.  “பாண்டிப் பதியே பழம்பதி’ என்று கூறுவர். பாண்டிய நாட்டின் தலைநகராம் மதுரையில் திருவாதவூரருக்காகவும், பிற உயிரினங்களுக்காகவும் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை நிகழ்த்திக்காட்டினார் சொக்கநாதப் பெருமான். இறைவனின் திருவிளையாடல்களை ஓரிரு புலவர்கள் அவ்வப்போது பாடியிருந்தாலும் அவற்றை நிரல்படத் தொகுத்தளித்தவர் பெரும்பற்றப்புலியூர் நம்பியே. உ.வே.சா.இந்நூலை இருமுறை பதிப்பித்துள்ளார். அப்பதிப்புகளில் அவர் பொழிப்புரை தரவில்லையாயினும் அரிய செய்திகளைக் குறிப்புரையாகத் தந்துள்ளார். அக்குறிப்புரைகளை ஆதாரமாகக் கொண்டு இந்நூலாசிரியர் பொழிப்புரை வழங்கியுள்ளார். இந்நூல் மதுரையைப் […]

Read more

தமிழ் தமிழ் அகராதி

தமிழ் தமிழ் அகராதி, தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொற்களுக்கும் உரிய பொருள் என்ன என்பதைக் கூறும் வகையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்களுக்கும் தமிழைக் கற்க விரும்புகிறவர்களுக்கும் இந்த அகராதி சிறந்த கையேடாகத் திகழும். நன்றி: தினத்தந்தி, 21/2/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திருவாசகம்

திருவாசகம், மாணிக்கவாசகர், அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.100 மாணிக்கவாசகர் சுவாமி அருளிய திருவாசகம் மூல நுால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. எளிதாக படிக்கும் வகையில் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. கவரும் வண்ணம் வடிவமைக்கப் பட்டுள்ளது. கெட்டி அட்டையில், சிறப்பாக, பைண்ட் செய்யப்பட்டுள்ளது. தினமும் எடுத்து வாசிக்க ஏற்ற வகையில் உள்ளது. நீண்ட நாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்க ஏற்றது. திருவாசகத்தில் உருகும் பக்தர்கள் போற்றி பாதுகாக்க வேண்டிய பெட்டகம். நன்றி: தினமலர், 10/1/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

தொல்காப்பியம் சொல்லதிகாரம்

தொல்காப்பியம் சொல்லதிகாரம், ச.சுப்புரெத்தினம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.100 தற்கால உரைகளின் வரிசையில் வெளிவந்துள்ளது. தொல்காப்பிய சொல்லதிகாரத்தில் அனைத்துக் கூறுகளும் விளக்கப்பட்டுள்ளன. கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் எனப் பகுத்து, ஒவ்வொரு இயலுக்கும் எளிய முகப்புரை வழங்கி, நுாற்பாக்களுக்குத் துணைத் தலைப்புகளோடு உரையும் விளக்கமும் வழங்கப்பட்டுள்ளன. திணை, பால், இடம், எண், புறநடை சார்ந்த தமிழ்ச் சொல்லாக்கம், வேற்றுமை வகைகள், பொருள் மற்றும் உருபு மயக்கங்களை உணர்த்தும் வேற்றுமை மயக்கங்கள், விளிமரபு, பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் […]

Read more

திருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும்

திருமந்திரம் பத்தாம் திருமுறை – மூலம் முழுவதும், பதிப்பக வெளியீடு, அருணா பப்ளிகேஷன்ஸ்,விலைரூ.220. திருமூலர் அருளிய திருமந்திரம் நுால் மறு அச்சாக்கம் செய்யப்பட்டுள்ளது. பத்தாம் திருமுறையாகப் போற்றப்படும் இந்த நுாலின் மூல வடிவம் தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. எளிதாக படிக்கும் வகையில், வடிவமான எழுத்துக்களில் உரிய துணைத் தலைப்புகளுடன் அமைந்துள்ளது. எளிதில் பழுதாகாத வகையில் கெட்டி அட்டை அமைப்புடன், புத்தகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாக்கப்பட வேண்டிய நுால். நன்றி: தினமலர்,20/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more
1 2 3 5