ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம், டி.வி.ராதாகிருஷ்ணன், அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.230 பகவான் கண்ணனின் அருள் நிறைந்த வரலாறு பாகவதம். உயிர் இனங்களின் பரிணாம வளர்ச்சியை, திருமாலின் அவதாரமாகக் காட்டுகிறது. விஷ்ணுவின் 20க்கும் மேற்பட்ட அவதாரங்களையும், அவதார தத்துவங்களையும், உபதேசங்களையும் சொல்கிறது. கபில அவதாரம் உபதேசிக்கும் சாங்கிய யோகம், எந்த தத்துவமும் சொல்லாத புதுமையானது. கண்ணனைச் சரண் புகுந்தால் மன நிறைவும், குடும்ப வளமும், சமுதாய நலமும் பெறலாம் என்கிறது பாகவதம். பத்து ஸ்கந்தங்களாக பிரிக்கப்பட்டு, 119 தலைப்புகளில் சுவையான கிருஷ்ண லீலைகள் பேசப்படுகின்றன. விஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களுடன், […]

Read more

ஸ்ரீமத் பாகவதம்

ஸ்ரீமத் பாகவதம்,  டி.வி.ராதாகிருஷ்ணன், குவிகம் பதிப்பகம்,  பக்.214,  விலை ரூ.180. ஹைந்தவ பக்தி இலக்கியத்தில் மகாபுராணமான ஸ்ரீமத் பாகவதம் சிறப்பான இடத்தை வகிக்கிறது. பகவத்கீதைக்கு அடுத்தபடியாக அதிக உரைகள் இயற்றப்பட்டதும் பாகவதத்துக்குத்தான். சைதன்யர், வல்லபாசார்யரின் பக்தி மார்க்கத்தின் முக்கிய தூண்களில் ஸ்ரீமத் பாகவதமும் ஒன்றாகும். புராண இலக்கியத்தின் கீழ் அமைந்துள்ள இந்த நூல், பக்தி சம்பிரதாய பரவலுக்குப் பெரிதும் அடிப்படையாக அமைந்தது. இதனை இயற்றியவர் வியாசர் என்பது மரபு. நமது புராண இலக்கியங்களின் வடிவத்தையொட்டியே, கதை, கதைக்குள் கதை, கிளைக் கதை என விரிந்து […]

Read more