சார்வாகன் கதைகள்

சார்வாகன் கதைகள், சார்வாகன், நற்றிணை பதிப்பகம், சென்னை, பக். 544, விலை 400ரூ. சார்வாகனின் 41 சிறுகதைகளும், 3 குறுநாவல்களும் கொண்ட தொகுப்பு. சார்வாகன் எழுத்தாளர் மட்டுமல்ல. தொழுநோயாளிகளின் உடல் ஊனங்களைச் சீராக்கும் அறுவைச்சிகிச்சைத் துறையில் உலகப் புகழ்பெற்ற மருத்துவரும் ஆவார். இந்த சேவைக்காக பத்மஸ்ரீ விருதும் பெற்றவர். இவரின் எழுத்து வன்மை தொடர்பாக அசோகமித்திரன், மருத்துவர்கள் மகத்தான எழுத்தாளர்களாக விளங்குவதற்கு நீண்ட வரலாறு இருக்கிறது. ஆண்டன் செகாவ், ஏ.ஜே.கிரானின், சாமர் செட் மாம் எனத் தொடங்கி சார்வாகன் வரை கூறலாம் என்று கூறியுள்ளார். […]

Read more

எண்ணுகிறேன் எழுதுகிறேன்

எண்ணுகிறேன் எழுதுகிறேன், நா. மகாலிங்கம், இராமானந்த அடிகளார் அறக்கட்டளை, கோவை, பக். 216, விலை 155ரூ. ஓம் சக்தி இதழில் நூலாசிரியர் எழுதிய இருபது கட்டுரைகள் இங்கே நூலாக மலர்ந்திருக்கிறது. தொழிலதிபர், கல்வியாளர், ஆன்மிகத்தில் நாட்டமுடையவர் என எல்லாருக்கும் தெரிந்த நூலாசிரியர், ஒரு சிறந்த சிந்தனையாளர் என்பதையும் இந்நூல் மெய்ப்பிக்கிறது. காஷ்மீர் பிரச்னை, தென்னக நதிகள் இணைப்பு, சாலை நெரிசல், விவசாயிகளின் பிரச்னைகள், பாரம்பரிய விளையாட்டுகளைப் பாதுகாப்பது, கிராமப்புற மருத்துவம், அரசு வழங்கும் இலவசம், சமச்சீர் கல்வி என இன்றைய உயிருள்ள பல பிரச்னைகளை […]

Read more

நெஞ்சில் நிலைத்தவர்கள்

நெஞ்சில் நிலைத்தவர்கள், கு.சின்னப்பபாரதி, யூனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ், சென்னை, பக். 218, விலை 175ரூ. எழுத்தாளர் கு. சின்னப்பாரதியுடன் பழகிய அவர் மனதைத் தொட்ட-நல்ல மனிதர்கள், தலைவர்கள், கலைஞர்கள், இதழாளர்கள் பற்றிய அவர் எழுதிய 41 கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் இம்.எம்.எஸ். நம்பூதிரி பாத், பி. சீனிவாசராவ், எம்.ஆர்.வெங்கட்ராமன், கே.ரமணி ஆகியோருடனான தனது, நட்பும் தோழமையுமான நினைவுகளை கு.சி.பா. இந்நூலில் அசைபோட்டிருப்பது, அத்தலைவர்களின் உயர்ந்த பண்புகளை வெளிக்காட்டுவதாக உள்ளது. பத்திரிகை உலகில் தாம் ஏற்ற கொள்கை வழிநின்று நேர்மையும், சத்தியமும் […]

Read more

மணிக்கொடி

மணிக்கொடி, ஜோதிர்லதா கிரிஜா, சேது அலமி பிரசுரம், சென்னை, பக். 752, விலை 500ரூ. கல்கியின் பொன்விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல். நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து மீட்க நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டதோடு தியாகங்களும் செய்தார்கள். நாடு தழுவிய மாபெரும் பிரச்னைகளுக்கு காந்தியடிகளின் அகிம்சை வழிதான் சிறந்தது என்பதை எடுத்துக்காட்டவும் இந்த புதினம் எழுதப்பட்டது என்கிறார் நூலாசிரியர். கங்கா, பவித்ரா பாத்திரங்கள் நாவலைப் படித்து முடித்தபின்னும் நீண்டகாலம் நம் நெஞ்சில் நிலைத்திருக்கும். வாஞ்சி அய்யர் இறந்த போது அவர் மனைவி கருவுற்றிருந்தார், […]

Read more

மாற்றங்களை ஏற்போம்

மாற்றங்களை ஏற்போம், மனிதத் தேனீ பதிப்பகம், விலை 50ரூ. புகழ்பெற்ற பேச்சாளரான மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் ஆற்றிய முக்கிய சொற்பொழிவுகளின் சுருக்கங்கள் அடங்கிய புத்தகம். சொற்பொழிவுகளின் இடையே தமிழ்நாட்டின் சிறப்புகள், அவ்வையார், கம்பர், பாரதியார், வ.உ.சிதம்பரனார், காமராஜ், சி.பா. ஆதித்தனார், கருமுத்து தியாகராச செட்டியார் போன்ற சான்றோர்களின் சாதனைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. பயனுள்ள புத்தகம். நன்றி: தினத்தந்தி, 30/4/2014.   —- குதிப்பு மீன் போனது எங்கே?, நிகழ்காலம் தமிழ்நாட்டில் பருவ நிலைமாற்றம், பொன். தனசேகரன், கார்த்திலியா வெளியீடு. பருவநிலை மாற்றத்தால் தமிழகத்தில் […]

Read more

கொடை காடு

கொடை காடு, ஏக்நாத், காவ்யா பதிப்பகம், சென்னை. திருநெல்வேலியைச் சேர்ந்த, எழுத்தாளர் ஏக்நாத்தின், கொடை காடு என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். காவ்யா பதிப்பகம் இந்த நாவலை வெளியிட்டுள்ளது. நெல்லை அருகில் உள்ள கல் ராக்கி மலைப் பகுதிக்கு, கால்நடைகளை மேய்க்க செல்வது பற்றி, இந்த நாவல் விவரிக்கிறது. மேய்ச்சல் வாழ்க்கையை பற்றி, தமிழில் பல எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். சீன மொழியிலிருந்துகூட, மேய்ச்சல் வாழ்க்கை நாவல் தமிழுக்கு வந்துள்ளது. அந்த வரிசையில், ஏக்நாத்தின் கொடை காடு நாவல் இடம் பெறுகிறது. கால்நடைகள் வீட்டின் ஒரு […]

Read more

வாழ்க்கை ஒரு பலப்பரீட்சை

வாழ்க்கை ஒரு பலப்பரீட்சை, அந்தோன் செகாவ், தமிழில் ச. சுப்பராவ், பாரதி புக் ஹவுஸ், மதுரை, பக். 320, வலை 250ரூ. அந்தோன் செகாவ், ரஷ்ய சிறுகதை சக்ரவர்த்தி. சிறுகதைகளைக் காட்டிலும் சற்று நீளமானதும், நாவல்களைக் காட்டிலும் சற்று சிறியதுமான, பலப்பரீட்சை மற்றும் வாழ்க்கை எனும் இரு குறு நாவல்களை ஒரே தொகுப்பாக வெளியிட்டிருக்கின்றனர். மத்திய தர வர்க்கத்தினரைப் புறக்கணித்து, உழைப்பாளி மக்களோடு வாழச்சென்று, அங்கு குறுகிய கண்ணோட்டங்களின் மோசமான விளைவுகளை மன ரீதியால் எதிர்கொள்ள நேரிடும் ஒரு கலகக்கார இளைஞனின் கதைதான் வாழ்க்கை. […]

Read more

கற்றாழை

கற்றாழை, சு. தமிழ்ச்செல்வி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 438, விலை 335ரூ. மாணிக்கம், அளம், கீதாரி போன்ற நாவல்கள் மூலம், உழைக்கும் பெண்களின் உலகை, அதன் பூரண தியாகங்களுடனும், ரணங்களுடனும் காட்டினார் தமிழ்ச்செல்வி. கற்றாழை இவரது நான்காவது நாவல். கற்றாழை என்னும் தாவரம் எத்தகைய வறட்சியிலும் தன்னைக் காத்துக்கொண்டு உயிர் வாழும். மணிமேகலை என்ற இந்த நாவலின் கதாநாயகி, தன் வாழ்வில் ஏற்படும் சோதனைக் கட்டங்களை எல்லாம் தீரத்துடன் எதிர்கொண்டு, கடைசியில் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்கிறாள். திருப்பூர் […]

Read more

டெக்னாலஜி ஆப் டேங்க்ஸ்

ராஜராஜ சோழன் உருவாக்கிய செம்பரம்பாக்கம் ஏரி,(Technology of Tanks The Traditional Water Bodies of Rural India). சி.ஆர்.சண்முகம், ஜே. கனகவல்லி, ரிப்ளக் ஷன் புக்ஸ், பக். 320, விலை 500ரூ. பாசனத்திற்கு பயன்படும் பெரிய ஏரிகள் எல்லாம், சமீப காலங்களில் நிர்மானிக்கப்பட்டவை அல்ல. அவை நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்து. வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் ஏரி, மூன்றாம் நந்திவர்ம பல்லவனால் (கி.பி. 710-750) உருவாக்கப்பட்டது. சென்னைக்கு அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரி, ராஜராஜசோழனால் (கி.பி. 1216-1256) உருவாக்கப்பட்டது. தென் ஆற்காடு […]

Read more

சிலம்புச்சாலை

சிலம்புச்சாலை, சுப்ர.பாலன், வானதி பதிப்பகம், சென்னை, பக். 156, விலை 100ரூ. கல்கி வார இதழில் தொடராக வெளிவந்ததின் நூல் வடிவம். தமிழ் இலக்கியத்தின் புதுமைக் காவியமான சிலப்பதிகாரத்தை புதிய ஆய்வுச் சாலையில் எடுத்துச்சென்றிருக்கிறார் சுப்ர. பாலன். புகார் நகரை பூம்புகாராகக் காணும் நூலாசிரியர். கோவலன், கண்ணகி கால அந்தப் புராதன நகரம், இப்போது களையிழந்து போனதை கனத்த மனதுடன் விளக்குகிறார். கோவலன், கண்ணகி தடம் பதித்த மற்ற இடங்களான ஸ்ரீரங்கம், உறையூர், கொடும்பாளூர் என ஒவ்வோர் ஊரையும் விவரிக்கும் ஆசிரியர், அந்தந்த இடங்களின் […]

Read more
1 2 3 9