வாழ்க்கை ஒரு பலப்பரீட்சை
வாழ்க்கை ஒரு பலப்பரீட்சை, அந்தோன் செகாவ், தமிழில் ச. சுப்பராவ், பாரதி புக் ஹவுஸ், மதுரை, பக். 320, வலை 250ரூ.
அந்தோன் செகாவ், ரஷ்ய சிறுகதை சக்ரவர்த்தி. சிறுகதைகளைக் காட்டிலும் சற்று நீளமானதும், நாவல்களைக் காட்டிலும் சற்று சிறியதுமான, பலப்பரீட்சை மற்றும் வாழ்க்கை எனும் இரு குறு நாவல்களை ஒரே தொகுப்பாக வெளியிட்டிருக்கின்றனர். மத்திய தர வர்க்கத்தினரைப் புறக்கணித்து, உழைப்பாளி மக்களோடு வாழச்சென்று, அங்கு குறுகிய கண்ணோட்டங்களின் மோசமான விளைவுகளை மன ரீதியால் எதிர்கொள்ள நேரிடும் ஒரு கலகக்கார இளைஞனின் கதைதான் வாழ்க்கை. பலப்பரீட்சை மனித பலவீனத்தின் மன்னிப்பிற்கான வாய்ப்புகளைப் புறந்தள்ளி, தன் கொடூரத்தால், அன்பு சார்ந்த வழிமுறைகளை மாற்றிக்கொள்ளும். மனிதனின் இறுதியான நடவடிக்கைகளைப் படம் பிடிக்கிறது. நல்ல மொழிபெயர்ப்பு. ரஷ்ய இலக்கியப் பொக்கிஷம். -எஸ்.குரு. நன்றி: தினமலர், 29/6/2014.
—-
தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே, டாக்டர் என். ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம், பக். 88, விலை 75ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-220-5.html விகடனில் தொடராக வந்தது தற்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. நூலாசிரியர் தூக்க மருத்துவ துறையில், பிரபலமானவர். பல்வேறு சமூக நெருக்கடிகள் இன்று அதிகமாகிவிட்ட நிலையில், தூக்கமின்மை ஒரு நோயாகவே மாறி வருகிறது. ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்பதை இந்த நூல் பல்வேறு விதங்களில் வலியுறுத்துகிறது. தூக்கமின்மை, ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு போன்ற பயங்கர விளைவுகளுக்கு வித்திடும். அதேநேரம், ஆங்கில மருத்துவ முறையை தவிர, யோகா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பிற சிகிச்சை முறைகளிலும் தூக்கமின்மையை போக்க பல வழிகள் உள்ளன. குறட்டை ஆபத்தானதா? தூக்கத்தில் கால் ஆட்டலாமா? தூக்கத்தில் பற்களை கடிப்பது நல்லதா? குழந்தைகள் நள்ளிரவில் அலறி அடித்து எழுந்திருப்பது ஏன்? உள்ளிட்ட கேள்விகளுக்கு விரிவான பதில் அளித்திருக்கிறார். நன்றி: தினமலர், 29/6/2014.