சங்ககாலச் செங்கண்மா மூதூர்

சங்ககாலச் செங்கண்மா மூதூர், க.மோகன்காந்தி, பாரதி புக் ஹவுஸ், விலைரூ.170. தமிழர் பண்பாட்டு சிறப்பை கூறும் 16 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். செங்கம் பகுதியை 2000 ஆண்டுகளுக்கு முன் ஆண்ட நன்னன் சேய் நன்னனின் சிறப்பு, நாட்டு வளம், செய்யாறு ஆகியவை பற்றி விளக்கப்பட்டுள்ளது. செங்கம் என்ற பகுதி அப்போது, ‘செங்கண்மா’ என வழங்கப்பட்டுள்ளது. பத்துப்பாட்டு நுாலான மலைபடுகடாம், நன்னனின் சிறப்புகளை கூறுவதையும் தெளிவுபடுத்தி உள்ளது. சங்க காலத்தின் சமூக நிலையை அறிந்து கொள்ள உதவுகிறது. மேலும், சங்க கால பொருளாதார நிலையைக் […]

Read more

அண்ணல் காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு

அண்ணல் காந்தியடிகள் வாழ்க்கை வரலாறு, கிஷோர் பிரசாத், பாரதி புக் ஹவுஸ், பக். 108, விலை 60ரூ. மகாத்மாவின், 150ம் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள நூல். காந்தியின் அரிய புகைப்படங்களுடன் தொகுக்கப்பட்டுள்ளன. விளக்கங்களுடன் அவை அமைந்துள்ளன. அவரது வாழ்க்கையின் முக்கிய தருணங்களை நினைவூட்டி, மனதில் எழுச்சி ஏற்படும் வகையில் அமைந்துள்ளது. மகாத்மா என்பது மாபெரும் கடல். நீந்தி களிக்க நிறைய உண்டு. அந்த கடல் பற்றி எளிய அறிமுகமாக உள்ளது இந்த நூல். நன்றி:தினமலர், 26/7/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

வாழ்க்கை ஒரு பலப்பரீட்சை

வாழ்க்கை ஒரு பலப்பரீட்சை, அந்தோன் செகாவ், தமிழில் ச. சுப்பராவ், பாரதி புக் ஹவுஸ், மதுரை, பக். 320, வலை 250ரூ. அந்தோன் செகாவ், ரஷ்ய சிறுகதை சக்ரவர்த்தி. சிறுகதைகளைக் காட்டிலும் சற்று நீளமானதும், நாவல்களைக் காட்டிலும் சற்று சிறியதுமான, பலப்பரீட்சை மற்றும் வாழ்க்கை எனும் இரு குறு நாவல்களை ஒரே தொகுப்பாக வெளியிட்டிருக்கின்றனர். மத்திய தர வர்க்கத்தினரைப் புறக்கணித்து, உழைப்பாளி மக்களோடு வாழச்சென்று, அங்கு குறுகிய கண்ணோட்டங்களின் மோசமான விளைவுகளை மன ரீதியால் எதிர்கொள்ள நேரிடும் ஒரு கலகக்கார இளைஞனின் கதைதான் வாழ்க்கை. […]

Read more

அசடன்

அசடன், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, தமிழில்-எம்.ஏ.சுசீலா, பாரதி புக் ஹவுஸ், பக். 672, விலை 650ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-492-6.html இந்த நாவல் பியோதர் தஸ்தயேவ்ஸ்கியால் 1869ல் எழுதப்பட்ட, த இடியட் என்ற நாவலின் மொழிபெயர்ப்பு. திருமதி. எம்.ஏ.சுசீலாவால் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நாவல் பல சிறப்புடையது. அதாவது முழுமுற்றான தீமை என்பது, இல்லவே இல்லை என தஸ்தயேவ்ஸ்கி தன்னுடைய நாவல் அனைத்திலும் சொல்லி வந்தாலும், முழுமுற்றான நன்மையை, இந்த கதையின் நாயகனான மிஷ்கின் மூலம் படைக்க முற்பட்டார். அதில் […]

Read more