தமிழர்கள் நாம் அடிமைகளா?

தமிழர்கள் நாம் அடிமைகளா?, வேத.யோகநாதன், அனைத்துலகத் தமிழ் மாமன்றம், விலை 150ரூ. அயல்மொழி மேல் மையல் கொண்டு அன்னைத் தமிழ் மறந்தோம். வீரமும் பண்பாடும் தொலைத்து வீணரைப் பின்பற்றுகின்றோம். இப்படியெல்லாம் இருக்க, தமிழன் என்ன அடிமையா? இனத்தின் பண்புகாத்து நிற்க, இழந்திட்ட வீரம் மீட்க கவி நடையில் நம் பெருமை சொல்லும் நூல். எண்ணற்ற கவிஞர்களின் எண்ண வெளிப்பாட்டின் தொகுப்பு. நன்றி: குமுதம். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

ஒளி உன்னால் அறியப்படுகிறது

ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், விலை ரூ:80 முத்தத்தின் துயர மொழி, திரையிசைப் பாடல்களில் தனித்துவத்தோடு மிளிர்ந்த கவிஞர் பழநிபாரதி தனது ‘ஒளி உன்னால் அறியப்படுகிறது’ கவிதைத் தொகுப்பில் சுண்டக் காய்ச்சிய வார்த்தைகளால் எழுதியிருக்கிறார். பெரும்பாலான கவிதைகள் வாசகரின் மனசுக்குள் காட்சி கிளைகளாக விரிகின்றன. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் எதிலும் அலங்கார வார்த்தைகள் இல்லை. ‘வீட்டின் வரவேற்பறையில்/ ஒரு பியானோ இருக்கிறது/ அதன் முன்னிருக்கையில் யாருமில்லை /நடுங்காத தீபத்தைப் போல /நின்றொளிரும் இசையில்/ நிரம்பி வழிகிறது/ வீடு’ எனும்போது நமக்குள்ளிருக்கும் இசை நம் வீட்டை […]

Read more

அகமும் புறமும்

அகமும் புறமும், புலவர் நன்னன், நன்னன் குடி வெளியீடு, விலை: ரூ.400 நன்னனின் 95-வது பிறந்தநாளையொட்டி வெளிவந்துள்ள இத்தொகுப்பில், திராவிட இயக்கத்தின் முன்னணித் தலைவர்கள், தமிழறிஞர்கள், சட்டத் துறையினர், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், குடும்பத்தினர் என்று பலரும் அவரைக் குறித்து எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நன்னன் தம்மைப் பற்றி எழுதியவையும் அவரது நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளும் இதில் அடக்கம். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கி தமிழாசிரியராகவும், பின்பு கல்லூரிப் பேராசிரியராகவும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராகவும் கல்வித் துறையில் தடம்பதித்தவர் நன்னன். தொலைக்காட்சியின் வாயிலாக […]

Read more

நன்மாறன் கோட்டைக் கதை

நன்மாறன் கோட்டைக் கதை, இமையம், க்ரியா வெளியீடு, விலை 225ரூ. பெண்களின் பிரச்சினைகளை, அவர்களின் வெவ்வேறு மன இயல்புகளை முன்னிறுத்தி எழுதுவதில் இமையம் தனித்துவமிக்கவர். இத்தொகுப்பிலுள்ள ஆறு கதைகள் பெண்களை மையப்படுத்தியவையே. ஆதிக்க சாதி வெறிக்குக் கணவனைப் பலிகொடுத்துவிட்டு மூன்று பிள்ளைகளுடன் ஊரை விட்டே செல்ல முடிவெடுத்த ‘நன்மாறன் கோட்டைக் கதை’யின் செல்வமணி, இன்னொரு பெண்ணுடன் இருந்த தொடர்பைத் தட்டிக்கேட்டதற்காக ஊரறிய தன்னை அடித்து அவமானப்படுத்திய தன் கணவனை அதே ஊரறிய தன் கணவனின் ஒட்டுமொத்த ஆண்பிம்பத்தையும் குலைத்துப்போடும் ‘தலைக்கடன்’ கதையின் சீனியம்மா, ‘பொட்டச்சி […]

Read more

தியாக தீபங்கள்

தியாக தீபங்கள், கேப்டன் எஸ்.பி.குட்டி, உதவி ஜதீன், அறிவுசல் ஆன்மீகக் கல்விக் கழகம், விலை 80ரூ. சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட வரலாறு இந்திய சுதந்திரத்துக்காக தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்த வீரர்களின் வரலாறு. புறம்பேசித் திரிந்தவர்களால் புதைக்கப்பட்ட விஷயங்களைத் தேடி எடுத்துத் தந்திருக்கிறார் ஆசிரியர். அந்நியர்க்குத் துணை நின்று உள்குத்து நடத்திய சிலரது குள்ளநரித்தனம், நேதாஜியின் வீரத்தையும் வீணாக்கிய வீணர்களின் செயல்கள் என்று மறைக்கப்பட்ட வரலாற்றைப் படிக்கப் படிக்க மனது கொதிக்கிறது. மறக்கடிக்கப்பட்ட வீரர்களின் மாண்பை நினைத்து, மனதார சல்யூட் அடிக்கத் தோன்றுகிறது. நன்றி: […]

Read more

தமிழ் விருந்து

தமிழ் விருந்து, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 200ரூ. அறுசுவை விருந்து உண்டிருக்கலாம். அருந்தமிழ் விருந்து உண்டதுண்டா? அத்தகைய ஆனந்த அனுபவத்தை அளிக்கும் அற்புதமான தொகுப்பு நூல். சங்கத் தமிழ் முதல் இன்றைய ஹைகூ வரை பலப்பல கவிஞர்களின் கற்பனையில் ஊற்றெடுத்த உவகைத் தமிழின் உயர்வுகளை உணர்வுகளை உதாரணங்களுடன் சொல்லியிருக்கும் விதம் அருமை. நன்றி: குமுதம். இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029544.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

திருப்புகழ்

திருப்புகழ், உரை: வ.சு.செங்கல்வராய பிள்ளை, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை ரூ.2500 (மூன்று தொகுதிகளும் சேர்த்து) முருகவேள் திருமுறை அருணகிரிநாதரின் திருப்புகழ், தமிழிசையின் பெருஞ்சொத்து. அருணகிரிநாதர் பாடியது 16,000 பாடல்கள் என்று கூறப்பட்டாலும் தற்போது அவற்றில் கிடைப்பது ஏறக்குறைய 1,300 பாடல்கள் மட்டுமே. அவற்றைத் தேடித் தேடி அலைந்து சேகரித்து வெளியிட்டவர்கள் வடக்குப்பட்டு சுப்ரமணியபிள்ளையும் அவரது மகன் வ.சு.செங்கல்வராயரும். தனது வாழ்நாளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்புகழ் ஆராய்ச்சிக்காகச் செலவிட்ட செங்கல்வராயர், சைவத் திருமுறைகளைப் போல திருப்புகழையும் பன்னிரு திருமுறைகளாக வகுத்து உரையெழுதினார். அவற்றை 1950-களில் கோபாலபுரம் மீனாட்சி கல்யாணசுந்தரம் […]

Read more

நம் காலத்துக் கவிதை

நம் காலத்துக் கவிதை, (நவீன கவிதை குறித்த கட்டுரைகள்), விக்ரமாதித்யன், படைப்புப் பதிப்பகம், விலை: ரூ.150 . கவிதை எழுதுபவர்கள் அதிகரித்திருக்கும் தற்காலத்தில் கவிதை விமர்சகர்கள் அருகிவருகிறார்கள். எனினும், பல்லாண்டுகளாகக் கவிதை எழுதுவதுடன் கவிதை விமர்சனங்களும் எழுதிவருபவர் கவிஞர் விக்ரமாதித்யன். முன்னோடிகள், தன் சம வயது கவிகள் பற்றி எழுதுவதுடன் இளம் கவிகளைப் பற்றியும் தொடர்ந்து ஆதுரத்துடன் எழுதிவருகிறார். அவரது கவிதை விமர்சன நூல்களின் வரிசையில் தற்போது இந்நூல் வெளியாகியிருக்கிறது. ந.பிச்சமூர்த்தி, ஞானக்கூத்தன் தொடங்கி தற்காலக் கவிஞர்கள் பிரான்ஸிஸ் கிருபா, அ.வெண்ணிலா இன்னும் இளைய கவிகள் பலரையும் பற்றி எழுதியிருக்கிறார். […]

Read more

ஆலயம் கடந்த ஆன்மிகம்

ஆலயம் கடந்த ஆன்மிகம், ஜாநி சிவம், ஜனனி நூல் நிலையம், விலை 200ரூ. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விகளுக்கே அவசியம் இல்லாமல், இல்லை என்பதுதான் கடவுளே என்ற ஆன்மிக உச்சத்தை எளிய விளக்கங்களுடன் சொல்லும் நூல். பார்க்கும் இடமெல்லாம் பகவானையே பார்க்கும் வகையில் பக்குவப்படுத்தும் முயற்சி. அதை முழுமையாகச் செய்திருக்கிறார் நூலாசிரியர். நன்றி: குமுதம். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பிரமபுரம் மேவிய பெம்மான்

பிரமபுரம் மேவிய பெம்மான், ஆசிரியர் : அன்பு ஜெயா, வெளியீடு: காந்தளகம். ஈழத் தாயகத்தில் பிறந்த அன்பு ஜெயா, மருந்தியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று, மருந்து தயாரிப்பு நிறுவன உயர் பொறுப்புகளில், 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சிட்னி பாலர் மலர் தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர், முதல்வர், மக்கள் தொடர்பு அலுவலர் போன்ற பொறுப்புகளில் நற்பணியாற்றியவர். தமிழ்ப் புலமை மிக்க பன்னுால் ஆசிரியர். ஆஸ்திரேலியா கம்பன் கழகம் வழங்கிய தமிழ்ச்சான்றோர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர். பிரமபுரம் சீகாழித் தலத்தையும், பெம்மான் சிவனையும் குறித்த சொற்கள் […]

Read more
1 2 3 8