ஒளி உன்னால் அறியப்படுகிறது
ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், விலை ரூ:80
முத்தத்தின் துயர மொழி,
திரையிசைப் பாடல்களில் தனித்துவத்தோடு மிளிர்ந்த கவிஞர் பழநிபாரதி தனது ‘ஒளி உன்னால் அறியப்படுகிறது’ கவிதைத் தொகுப்பில் சுண்டக் காய்ச்சிய வார்த்தைகளால் எழுதியிருக்கிறார்.
பெரும்பாலான கவிதைகள் வாசகரின் மனசுக்குள் காட்சி கிளைகளாக விரிகின்றன. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் எதிலும் அலங்கார வார்த்தைகள் இல்லை.
‘வீட்டின் வரவேற்பறையில்/ ஒரு பியானோ இருக்கிறது/ அதன் முன்னிருக்கையில் யாருமில்லை /நடுங்காத தீபத்தைப் போல /நின்றொளிரும் இசையில்/ நிரம்பி வழிகிறது/ வீடு’ எனும்போது நமக்குள்ளிருக்கும் இசை நம் வீட்டை நிறைத்துவிடும்போல இருக்கிறது.
தேவையற்ற வார்த்தைகளின் கூச்சல் இல்லாமல் இருப்பது வாசிப்பின்போது ஒலியின் அமைதியை நம் பக்கம் கொண்டுவருகிறது. எல்லாக் கவிதைகளிலும் ஒருவித திட்டமிட்ட மெல்லோசை நிரம்பித் ததும்புகின்றன.
– மானா
நன்றி: தமிழ் இந்து, 28/9/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818