ஒளி உன்னால் அறியப்படுகிறது

ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், விலை ரூ:80 முத்தத்தின் துயர மொழி, திரையிசைப் பாடல்களில் தனித்துவத்தோடு மிளிர்ந்த கவிஞர் பழநிபாரதி தனது ‘ஒளி உன்னால் அறியப்படுகிறது’ கவிதைத் தொகுப்பில் சுண்டக் காய்ச்சிய வார்த்தைகளால் எழுதியிருக்கிறார். பெரும்பாலான கவிதைகள் வாசகரின் மனசுக்குள் காட்சி கிளைகளாக விரிகின்றன. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் எதிலும் அலங்கார வார்த்தைகள் இல்லை. ‘வீட்டின் வரவேற்பறையில்/ ஒரு பியானோ இருக்கிறது/ அதன் முன்னிருக்கையில் யாருமில்லை /நடுங்காத தீபத்தைப் போல /நின்றொளிரும் இசையில்/ நிரம்பி வழிகிறது/ வீடு’ எனும்போது நமக்குள்ளிருக்கும் இசை நம் வீட்டை […]

Read more

ஒளி உன்னால் அறியப்படுகிறது

ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், பக். 104, விலை 80ரூ. இலக்கண நடையில் எழுதி, இக்கால இலக்கியத்திற்கு சிறப்பு சேர்க்கும், பழநிபாரதியின் கவிதைகள் எண்ணற்றவை. ‘இந்த வைகறை உன்னிடமிருந்து துயிலெழுகிறது; ஒளி உன்னால் அறியப்படுகிறது; முதல் மலர்களின் நறுமணத்தை நுகர்ந்தபடி விடைபெற்ற நட்சத்திரங்களில் ஒன்று கடைசியாக உன்னைத் திரும்பிப் பார்க்கிறது!’ என்ற கவிதை வரிகள், நம்மை நெகிழ வைப்பதாக உள்ளன. இந்நுால், இன்றைய இளைய தலைமுறையினருக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. – மாசிலா இராஜகுரு நன்றி: தினமலர்,17/3/19, இந்தப் […]

Read more

ஒளி உன்னால் அறியப்படுகிறது

ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழனிபாரதி, பக்.104, விலை 80ரூ. நீ வரைந்த கோலம் தான் நீயே உன்னை வரைந்தது போல என்பது போன்ற பல அழகிய கதைகள் நிறைந்துள்ளன. கவிதைப் பிரியர்களக்கு இந்நுல் பிடிக்கும். நன்றி: தினமலர், ஜனவரி 2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more