இந்தியக் கல்வி வரலாறு

இந்தியக் கல்வி வரலாறு, எஸ். சுப்பிரமணியன், அறிவியல் வெளியீடு, சென்னை, விலை 35ரூ. கல்வியின் வரலாறு சிந்து சமவெளி காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரைக்குமான காலகட்டத்தில் இந்தியாவில் கல்வி என்பது என்னமாதிரியான மாற்றங்களுக்கு ஆட்பட்டுவந்துள்ளது என்பதைச் சுருக்கமாகவும் ஆழமாகவும் எடுத்து வைக்கும் நூல். வேத காலக் கல்வி, புத்த, சமணத் துறவிகள் பரப்பிய பள்ளிக் கல்வி, நமது முன்னோர்கள் பயின்ற திண்ணைப் பள்ளிகள் என ஒரு நீண்ட காலகட்டத்தின் முக்கியமான சம்பவங்களை நமக்கு முன்னால் வைக்கிறார். இன்றைய கல்வி முறையின் பிரச்சினைகளையும் அவற்றுக்கான […]

Read more

கதை கதையாம் காரணமாம்

கதை கதையாம் காரணமாம், பவளசங்கர், மெட்ராஸ் பழனியப்பா பிரதர்ஸ், பக். 144, விலை 105ரூ. உணவு சேகரிக்கும் வேலையைச் செய்ய மறுத்தது ஓர் எறும்புக்கூட்டம். வேலை செய்யும் நாள்களுக்கு மட்டுமே உணவு என்று சட்டமேற்படுத்தியது ராணி எறும்பு. குளிர்காலம மழைக்காலம வந்து வெளியில் செல்ல முடியாமல் எறும்புகளை முடக்கிப் போட்டது. வேலை செய்ய மறுத்த எறும்புக்கூட்டம் பசியால் வாட்டமுற்றது. சேமிப்பின் அவசியத்தை உணர்த்தி மன்பிபையும் அளித்த ராணி எறும்பின் தலைமைப் பண்பு சிறு துளி பெரு வெள்ளம் கதையின் அற்புதமான சாராம்சமாகும். கண்தானம் பற்றிய […]

Read more

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மெய்ப்பொருள் காண்பது அறிவு (ஸ்ரீசாலை ஆண்டவர்களின் வாக்கும் வரலாறும்), கே. நிறைமதி அழகன், விகடன் பிரசுரம், பக். 136, விலை 85ரூ. அனந்தர்களின் அற்புத குருநாதர் மெய்வழிச்சாலை என்பது, எம்மதமும் சம்மதம் எனும் ஒரு மார்க்கம். பல சமய நெறிகளைப் பின்பற்றி, உருவ வழிபாட்டை மறுக்கிறது மெய்வழிச்சாலை. கடந்த, 1922ம் ஆண்டு, காதர் பாட்சா என்பவர் ஆரம்பித்து வைத்த மார்க்கம் இது. இதை ஸ்தாபித்தவரை, சாலை ஆண்டவர் என, மெய்வழி அன்பர்கள் அழைக்கின்றனர். பல்வேறு அதிசயங்களைச் செய்த சாலை ஆண்டவர், பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும், […]

Read more

உணவு சரித்திரம்

உணவு சரித்திரம், முகில், சிக்ஸ்த் சென்ஸ் வெளியீடு, பக். 304, விலை 225ரூ. மிளகுக்காக தாக்குதல்களை சந்தித்த இந்தியா தமிழில் வரலாற்று நூல்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அதுவும் வரலாற்றை எளிமையாகச் சொல்லும் நூல்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஆனால், எளிமையாய் சொல்லும் கலை கைகூடுவது அத்தனை எளிதானது இல்லை. முகில் அத்தகைய எழுத்தாளர் எனது தனது மொகாலயர்கள் பற்றிய நூலிலேயே நிரூபித்தவர். உணவு சரித்திரம் என்ற பெயரே வாசிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டிவிடும்தான். உணவுக்காக எத்தனையோ சரித்திரங்கள் திருத்தி எழுதப்பட்டுள்ளன என்பதை, […]

Read more

உள்முகமாய் ஒரு பயணம்

உள்முகமாய் ஒரு பயணம், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. தியானக் கூடங்களில் தனது சீடர்கள் மற்றம் நண்பர்களுக்கு, ஓஷோ வழங்கிய உரைகளின் தொகுப்பு நூல். காலையும் மாலையும் மேற்கொள்ளும் தியான வழிமுறைகளை ஒஷோ வரையறுத்து தந்துள்ளார். மனக்கசடுகள் நீங்கும்போதுதான் மனத்தூய்மை தென்படும் என்பது அவரது போதனை. தூசி படிந்த கண்ணாடியாய் மனம் இருக்கக்கூடாது. அது, துடைக்கப்பட்ட பளபளப்பான கண்ணாடியாய் ஆக வேண்டும். அப்போதுதான் அதில் இறைமை பளபளவென்று பிரதிபலிக்கும் என்கிறார் ஓஷோ. பல குட்டிக் கதைகளை புத்தகமெங்கிலும் தூவி, ஆழ்நிலை வாழ்க்கை வாழத் […]

Read more

சரித்திரக் கடலின் முத்துக்கள்

சரித்திரக் கடலின் முத்துக்கள், ஹாஜி எஸ்.எம். கனிசிஷ்தி, முஸ்லிம் குரல் கம்ப்யூட்டர் பிரின்ட் வெளியீடு, சென்னை, பக். 200, விலை 100ரூ. மூத்தப் பத்திரிகையாளரான இந்நூலாசிரியர், ஆன்மிகம், இலக்கியம், அறிவியல், மருத்துவம், அரசியல், வரலாறு, பொன்மொழிகள் என்று பல துறைகளிலும் உள்ள பல்வேறு அரிய தகவல்களையும் திரட்டி, தகவல் களஞ்சியமாக இந்நூலை உருவாக்கியுள்ளார். 15ஆம் நூற்றாண்டில் அப்போதைய குருமகா சன்னிதானமாகிய மதுரை ஆதீனத்தை, மாமன்னர் அலாவுதீன் கில்ஜியின் படைத் தளபதி மாலிக்காபூரும், 1786, 1790 ஆகிய ஆண்டுகளில் அப்போதைய குருமகா சன்னிதானத்தை மாவீரர் திப்பு […]

Read more

பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே

பிள்ளைகளின் வெற்றி பெற்றோர் கைகளிலே, வி. நடராஜன், சாந்தா பப்ளிஷிர்ஸ், சென்னை, பக். 336, விலை 200ரூ. குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை எப்படி வளர்க்க வேண்டும்? என்று வழிகாட்டும் நூல். குழந்தைகளின் நல்ல வளர்ச்சிக்கு அவர்களுக்கு சிறந்த சூழ்நிலை அமைய வேண்டும். அந்தச் சூழ்நிலையைப் பெற்றோரே ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வளரும் காலத்தில் தன்னுடன் பிறந்தவர்களுடன் குழந்தைகள் சண்டை போடுவார்கள். சாப்பிட மாட்டார்கள். எந்தப் பொருளையும் உடைத்துவிடுவார்கள். சில குழந்தைகள் பிற குழந்தைகளுடன் நன்றாகப் பழக மாட்டார்கள். பெரியவர்களின் கவனத்தைத் […]

Read more

ஆமுக்த மால்யத

ஆமுக்த மால்யத (சூடிக்கொடுத்தவள்), தமிழில் எளிய உரை எஸ். ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள் ஆய்வு மையம் வெளியீடு, சென்னை, பக். 352, விலை 200ரூ. தெலுங்கு மொழியின் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான ஆமுக்த மால்யத கிருஷ்ணதேவராயரால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டது. விஷ்ணு சித்தரான பெரியாழ்வாரும் யமுனாச்சாரியரான ஆளவந்தாரும் விஷ்ணுவே பரம்பொருள் என்று உலகிற்கு உணர்த்தி வாழ்ந்துகாட்டியவர்கள். அவ்விருவரது வாழ்க்கையின் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள், கோதையாகிய ஆண்டாளின் பிறப்பும் ஸ்ரீமந் நாராயணனுடன் இணைந்த அவைளது வாழ்வு, மற்றும் கிளைக்கதைகளுடன் சுவைபடச் சொல்லியிருக்கிறார் கிருஷ்ண தேவராயர். இந்தக் காப்பியத்தை […]

Read more

வீணாதி வீணன்

வீணாதி வீணன், நா. வானமாமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். நா. வானமாமலை எழுதி நியூ செஞ்சரி புக் ஹவுஸ் பதிப்பகம் வெளியிட்ட வீணாதி வீணன் கதை நூலை படித்தேன். கதைப் பாடல் நூல் இது. தென்பாண்டி சீமையை ஆண்ட, ஐவர் ராசாக்களில் ஒருவரான, குலசேகரனின் கதையின், கிளைக் கதை. வள்ளியூரிலிருந்து, மதுரைக்கு இடம்பெயர்கிறார் குலசேகரன். அப்போது உறவுகளால் ஏமாற்றப்பட்டு உணவுக்கு வழியில்லாத ஒருவன் வள்ளியூர் வருகிறான். பசிக்கு பிச்சை எடுக்கிறான். உணவு கிடைக்கவில்லை. தொழில் செய்ய, விறகு வெட்டுகிறான். அரசின் வரிவிதிப்பு, தொழிலை […]

Read more

திருக்குறளில் காமம்

திருக்குறளில் காமம், இ.கி.இராமசாமி, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பக். 188, விலை 125ரூ. ஒரு பொருள் பற்றிய இருபத்து மூன்று அறிஞர்களின் கட்டுரை தொகுப்பு இந்த நூல். திருக்குறளில், காமத்துப்பாலின் சிறப்பு, காமமும், இன்பமும் ஒன்றா, காமம் இழிபொருளாக எப்போது மாறியது, காமம் தரும் கனிந்த வாழ்வு, காமத்துப் பாலும் கானல்வரியும், அகத்திணை மரபும், காமத்துப்பாலும் எனப் பல்வேறு தலைப்புகளில், திருக்குறள் கருத்துக்கள் ஆராயப்பட்டு உள்ளன. காமம் என்பதற்கு சரியான பொருள், நூலின் முதலிலேயே கருத்துரைகள் என்ற தலைப்பில் தரப்பட்டிருக்கிறது. மனமொத்து இருபாலும் […]

Read more
1 2 3 8